Thursday, March 26, 2009

"இறுதியாய் ஒரு க‌டித‌ம்".

என் காதல் ஜென்மத்தில்

நாட்களை நகர்த்தும்

என் விழியான காத‌லிக்கு

இரக்கம் காட்ட‌

இறுதியாய் ஒரு கடிதம்!

நம்பிக்கையின்நரம்பை நருக்கென இழுத்தவளே...

உன் மவுனத்தால் என் மனது மெதுமெதுவாய்

வலிக்கு உட்படும் என்பதனால் சீற்றத்தால்

ஒரேயடியாய் சிதற‌செய்தாயோ...

'கல்நெஞ்சகாரியே' என்றதனால்

எவ்வளவு இறங்கியும் இரக்கமே இல்லாமல்

எட்டி உதைத்தாயோ?

நீ இல்லாத துயரத்தை சுமக்க முடியாமல் சுமக்கிறது நிமிடங்கள்...

கலங்காமல் இருக்க‌ கண்மணிகள் வேண்டும்..

உயிரோடு ஒட்டாமல் ஒட்டுசுவராய்

ஏன் விலகுகிறாய்?

வா... வந்து ஒட்டிவிடு...

உன் பிரிவில் உருகுலையும்

என் உள்ளத்திற்கு உயிர்கொடு...

உனது உள்ளத்தில் ஏங்கேனும்

ஒரு மூலையில் அணு அளவாவது

என் காதல் ஒட்டியிருந்தால்...

எனை சுற்றி இருக்கும்

துன்ப‌ க‌ட‌லில் விழ‌ தொங்கிக்கொண்டிருக்கும்

என்னை தாங்க‌

கைசேர்த்து வா...

இல்லையென்றால்...

எழுத தெரிய‌வில்லை...

ஒரே வ‌ரியில்...

"இறுதியாய் ஒரு க‌டித‌ம்".

19 comments:

Rajeswari said...

நீ இல்லாத துயரத்தை சுமக்க முடியாமல் சுமக்கிறது நிமிடங்கள்...//

நன்று

Rajeswari said...

.எனை சுற்றி இருக்கும்துன்ப‌ க‌ட‌லில் விழ‌ தொங்கிக்கொண்டிருக்கும்என்னை தாங்க‌ கைசேர்த்து வா...
இல்லையென்றால்...எழுத தெரிய‌வில்லை...ஒரே வ‌ரியில்..."இறுதியாய் ஒரு க‌டித‌ம்"//


நல்லா எழுதி இருக்கிரீர்கள்..வாழ்த்துக்கள்

anujanya said...

என்ன சோகம்? :((

அனுஜன்யா

நட்புடன் ஜமால் said...

\\உன் பிரிவில் உருகுலையும்

என் உள்ளத்திற்கு உயிர்கொடு...\\

அருமை.

ஆதவா said...

என்னாச்சுங்க இவ்வளவு சோகம்... இறுதிக் கடிதங்கள் எல்லாமே இறுதியாக இருந்துவிடுவதில்லை. கவிதை எளிமையா இருக்கு..

நீ இல்லாத துயரத்தை சுமக்க
முடியாமல்
சுமக்கிறது நிமிடங்கள்...

அழகு வரிகள். நல்ல கற்பனை! இன்னும் தொடர்ந்து எழுதுங்கள். இன்னும் வலிமையாய்....

சொல்லரசன் said...

என்னங்க ராம் அடிக்கடி கவிதை பதிவு வ‌ருது?வாழ்த்துகள்

சி தயாளன் said...

என்ன இவ்வளவு சோகம்..?

கார்த்திகைப் பாண்டியன் said...

எளிமையான கவிதை.. நல்லா இருக்கு நண்பா.. சொல்ல முடியாத சோகம் ஏதாவது இருக்கா ராம்?

ஆ.ஞானசேகரன் said...

என்னங்க ராம் ரொம்ப சோகம இருக்கு, வரிகள் நன்றாக இருக்கு வாழ்த்துகள்...... காதலின் சோகம் நெஞ்சை பிளக்கும் என்று எல்லா காதலர்களும் அறிந்த எதார்த்தம்...

ஆ.ஞானசேகரன் said...

//உள்ளத்தில் ஏங்கேனும் ஒரு மூலையில் அணு அளவாவது என் காதல் ஒட்டியிருந்தால்...எனை சுற்றி இருக்கும்துன்ப‌ க‌ட‌லில் விழ‌ தொங்கிக்கொண்டிருக்கும்என்னை தாங்க‌ கைசேர்த்து வா...//

வரும் வாழ்த்துகள் நண்பரே

ச.பிரேம்குமார் said...

என்ன ராம், இம்புட்டு சோகம் :(

Pradeep said...

சான்சே இல்ல.
ஏதாவது காதல் தோல்வியா

Pradeep said...

சாரி ராம். நீங்க கல்யாணம் ஆனவருனு முந்தைய பதிவை பார்க்கும் போதுதான் தெரிந்தது.
அது தெரியாம காதல் தோல்வியானு கேட்டுட்டேன்.

புதியவன் said...

//நீ இல்லாத துயரத்தை சுமக்க முடியாமல் சுமக்கிறது நிமிடங்கள்...//

ரொம்ப நல்லா இருக்கு இந்த வரிகள்...

sakthi said...

நம்பிக்கையின்நரம்பை நருக்கென இழுத்தவளே...

உன் மவுனத்தால் என் மனது மெதுமெதுவாய்

sogam yen ram

sakthi said...

/நீ இல்லாத துயரத்தை சுமக்க முடியாமல் சுமக்கிறது நிமிடங்கள்...//

valiudan kudiya varthaigal

Anonymous said...

காதல் கவிதையா?? நடக்கட்டும் நடக்கட்டும்

ராம்.CM said...

நன்றி ராஜேஸ்வரி! வருகைக்கு மகிழ்ச்சி! வாழ்த்துகளுக்கும் நன்றி!

நன்றி வால்பையன்!

நன்றி அனுஜன்யா! வருகையில் மகிழ்வு!

நன்றி நட்புடன் ஜமால்!

நன்றி ஆதவா! தொடர்ந்து எழுத முயற்சிக்கிறேன்.

நன்றி சொல்லரசன்! சும்மாதான் ஒரு சேஞ்சுக்காகதான்...

நன்றி டொன்லீ!

நன்றி கார்த்திகைப்பாண்டியன்! சோகம் என்பதெல்லாம் கிடையாது.( மனதில் நின்ற காதலியே மனைவியாக வரும்போது சோகம் கூட சுகமாகும்)

நன்றி ஆ.ஞானசேகரன்! வருகைக்கும்,வாழ்த்துக்கும் நன்றி.

நன்றி ப்ரேம்! வருகைக்கு மகிழ்ச்சி!

நன்றி பிரதீப்! காதல் தோல்வியெல்லாம் கிடையாது.

நன்றி புதிய‌வ‌ன்! வ‌ருகையில் ஆன‌ந்த‌ம்!

நன்றி ச‌க்தி! வாழ்த்துக்கும் ந‌ன்றி.

நன்றி க‌வின்! வ‌ருகையில் ம‌கிழ்ச்சி!

Sakthi said...

எனக்கும் எழுத தெரிய‌வில்லை...

ஒரே வ‌ரியில் நான் சொல்வேன் நல்ல கவிதை..!