Monday, March 2, 2009

ஆட்டுக்குட்டியும், அமைச்சர் லல்லுவும்!

 

பத்து தினங்களுக்கு முன்பு திருநெல்வேலி மற்றும் சுற்றியுள்ள மாவட்டங்களில் பரபரப்பாகவும்,ஆச்சர்யமாகவும் பேசப்பட்டதும்,தினகரன் நாளிதழில் வெளியான ஒரு உண்மை செய்தி :

திருச்செந்தூரிலிருந்து சென்னைக்கு கடந்த 8ம்தேதி செந்தூர் எக்ஸ்பிரஸ் இரயிலை துவக்கி வைப்பதற்கு அமைச்சர் லாலுபிரசாத் அவர்கள் திருச்செந்தூர் வந்தார். அப்போது திருச்செந்தூர் அருகிலுள்ள ஒரு கிராமத்தை சேர்ந்த விவசாயி ஒருவர் அமைச்சருக்கு பிறந்து 20 நாட்கள் ஆன அழகான ஆட்டுகுட்டியை நினைவு பரிசாக வழங்கினார். பிராணிகள் மீது கொள்ளைபிரியம் கொண்ட அமைச்சர் லாலு பாட்னாவில் உள்ள தனது வீட்டிற்கு அக்குட்டியை கொண்டு சென்றார்.

தாயை பிரிந்த ஏக்கத்தில் குட்டி ஆடு பால் குடிக்காமல் அடம்பிடித்தது. இதனால் ஆட்டுகுட்டியின் உடல்நிலை மோசமானது. கால்நடை மருத்துவர்கள் சிகிச்சையளித்தும் பயனளிக்கவில்லை. உடனடியாக தாயையும், குட்டியையும் சேர்த்து விட முடிவு செய்யப்பட்டு திருச்செந்தூருக்கு தகவல் தரப்பட்டது. திருச்செந்தூரில் உள்ள அமைச்சரின் ஆதரவாளர்கள் நினைவு பரிசு கொடுத்த ஆட்டின் உரிமையாளரை பலமணி நேரம் தேடிக் கண்டுபிடித்து அவரிடம் விவரத்தைச் சொல்லி, தாய் ஆட்டை      வாங்கிவந்து அதற்கு ராஜ உபசரிப்பு அளிக்கப்பட்டது. மேலும் ஆட்டின் உடல்நலத்தை கவனிக்க ஒரு கால்நடைமருத்துவரும், ஒரு உதவியாளரும் நியமிக்கப்பட்டனர்.இதையடுத்து தாய் ஆட்டை திருச்செந்தூரில் இருந்து தூத்தூக்குடிக்கு காரில் கொண்டுசென்று அங்கிருந்து மைசூர் எக்ஸ்பிரஸில் மதுரைக்கும் அங்கிருந்து சம்பர்கிராந்தி எக்ஸ்பிரஸில் டெல்லிக்கும் கொண்டுசெல்லப்பட்டது.இந்த இரயிலில் ஆட்டுடன் ஒரு கால்நடை மருத்துவர் உட்பட மூன்று நபர்கள் டெல்லி சென்றனர். இதற்கிடையில் தாயை காணாமல் தவிக்கும் குட்டியை பாட்னாவிலிருந்து டெல்லிக்கு கொண்டு வந்தனர். 3நாள் பயணத்தை முடித்த தாய் ஆடு குட்டியைக் கண்டதும் பாசத்துடன் அழைக்க.. தாயின் சத்தம் கேட்ட குட்டிஆடும் உற்சாகத்தில் துள்ளிக்குதித்து 8 நட்களுக்கு பிறகு பால் குடித்தது. இதை அங்கிருந்த அனைவரும் கண்டு ரசித்தனர்.

2OCASTN17BCA9CS827CAS539LGCA27P2SUCA7WLU7KCA28A50XCAHA24R5CAPVWPL8CAM2F6NJCAG9CIMZCATQCQOZCAII7WD1CA7W598YCAQKRQAHCAYYI3TGCA3NLPKVCAIGLL1BCANU3EWTCAFCU9FI

குட்டிஆட்டிற்காக எடுத்த முயற்சிக்காக வன உயிரின அமைப்புகள் உள்ளிட்ட அனைத்து தரப்பினரும் பாராட்டினர்.பின்னர் தாயும்,குட்டியும் பாதுகாப்பாக டில்லியிருந்து பாட்னாவில் உள்ள அமைச்சர் லல்லு வீட்டிற்கு கொண்டு செல்லப்பட்டன.

.

14 comments:

Anonymous said...

ஓ.. இதான் `குட்டி` கதையா??

கார்த்திகைப் பாண்டியன் said...

ஒரு சில விஷயங்களில் கோமாளித்தனம் செய்தாலும் லாலு சில நேரங்களில் நம் நெஞ்சை கொள்ளை கொண்டு விடுகிறார்.. ஊழலை விட்டு நல்ல மனிதராக இருந்தால்.. இன்னும் அவர் அரசியலில் பிரகாசிக்கலாம்

தாமிரா said...

Good..

’டொன்’ லீ said...

உண்மையாகவா...?

Anonymous said...

Mudhal murayaaga naan Lalu..vai paaraatugiraen.

ஆதவா said...

சில சமயம் யோசிப்போம்..

இந்த குட்டி ஆட்டுக்கு இவ்ளவு சிரமப்பட்டவர்கள், மனிதர்களுக்கு ஏதும் செய்கிறார்களா என்று..

அதே போல, அந்த குட்டியின் பாசம், சில மனிதர்களுக்கு உண்டா என்று!!!

மாறி மாறி யோசனை!!!!

என்னை யோசிக்க வைத்தமைக்கு மிக்க நன்றி!!

Azee said...

அன்னை பிள்ளைக்கான பாசம் சும்மாவா?
அனைத்திலும் சிறந்தது தாய் பாசம் அல்லவா
அதற்கு விலங்குகள் மட்டும் விதிவிலகா என்ன?

கார்க்கி said...

//தாமிரா said...
Good.//

அண்ணாத்தையே சொல்லிட்டாரு..

ரிப்பீட்டேய்

ராம்.CM said...

நன்றி கவின்!

நன்றி கார்த்திகைப்பாண்டியன்!

நன்றி தாமிரா!

நன்றி டொன்லீ!

நன்றி பெயர் தெரியாத நல்லவரே!

நன்றி ஆதவா!வருகைக்கு மகிழ்ச்சி! என்னை பின் தொடர்வதற்கு நன்றி!

நன்றி azee! வருகைக்கு மகிழ்ச்சி!

நன்றி கார்க்கி!

sakthi said...

athusari aatukutti mel ethanai akkarai vaipavargalkonjam eelam pakkam parvai parthal nandruaaga irukum

பிரேம்குமார் said...

// 3நாள் பயணத்தை முடித்த தாய் ஆடு குட்டியைக் கண்டதும் பாசத்துடன் அழைக்க.. தாயின் சத்தம் கேட்ட குட்டிஆடும் உற்சாகத்தில் துள்ளிக்குதித்து 8 நட்களுக்கு பிறகு பால் குடித்தது//

நெகழ்ச்சியான தருணமாக இருந்திருக்கும். இருந்தாலும் கொஞ்சம் ஓவர் பில்டப்பு கொடுத்துடாங்களோ இந்த செய்திக்கு?

Anonymous said...

Good..

ராம்.CM said...

நன்றி சக்தி!வருகைக்கு மகிழ்ச்சி!

நன்றி ப்ரேம்!வருகைக்கும்,வாழ்த்துக்கும் மகிழ்ச்சி!

உமா said...

வாழ்க லலலு. இவரைப்பற்றி இன்னொரு விஷயம் தெரியுமா. அண்ணா சாலையிலே இருக்கிற vellore vaishnava dhaaba-ல லல்லுப்ரசாத் ராப்ரிதேவின்னு [?] ஒரு இனிப்பு இருக்கு. பாஸந்திமாதிரியானது.பால் கலவையும் இனிப்பும் ஒன்னோட ஒன்னு கலந்து நல்லா இருக்கும்.சாப்பிட்டு பாருங்களேன்.