Saturday, February 28, 2009

மனதில் சில வரிகள்.!

நாம் எத்தனையோ பாடல்கள் கேட்டிருப்போம்!. ரசித்திருப்போம்!. மனதில் சில வரிகளும் பதிந்திருக்கும். காதல், நட்பு, சோகம், தத்துவம், கானா, என்று பல பிரிவுகளில் நாம் பாடல்களை ரசித்துக்கொண்டிருக்கிறோம். நானும் பல பாடல்களை ரசித்ததுண்டு. அவற்றில் ஒன்றான...
சில வருடங்களுக்குமுன் AVM நிறுவனம் தயாரித்து தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பான நாடகம் ஒன்றின் பாடல்...


வாழ்க்கை வாழ்க்கை இன்பமடா
வாழ்வது அவரவர் கையிலடா..
வாழ தெரிந்தவன் மனிதனடா
வாழ வைப்பவன் தெய்வமடா!

மூங்கில் காட்டில் தீ பிடித்தால்
புல்லாங்குழல்கள் மிச்சமடா..
துயரம் கண்டு நீ சிரித்தால்
வாழ்க்கை உனக்கு உச்சமடா!

வாழ்க்கை என்பது சூதாட்டம்
தோல்வியை அனுபவம் ஆக்கிவிடு..
வாழ்க்கை என்பது வெறுந்துணிதான்
உந்தன் அளவுக்கு தைத்து விடு!

வாழ்க்கை என்பது வாழைமரம் போல்
ஒவ்வொரு பாகமும் நன்மையடா..
வாழ்க்கை என்பது மேகம் போல்
மாறி கொண்டே போகுமடா!

வலிகள் துன்பம் காயம் இல்லாமல்
வாழ நினைப்பவன் கோழையடா..
இடுப்பு வலிதான் தாய்க்கு வராமல்
எவனும் பிறப்பது இல்லையடா!

வாழ்க்கை வாழ்க்கை இன்பமடா
வாழ்வது அவரவர் கையிலடா..

.

13 comments:

சி தயாளன் said...

நல்ல பாட்டு தான்

ஆனாலும் இந்த “வாழ்க்கையை” பார்த்தால் “துன்பம்” தான்

நான் இந்த நாடகம் பார்க்க வீட்டில் அனைவருக்கும் தடை போட்டனான்...அப்ப நான் ஸ்கூல் போற வயசு..:-)

ராம்.CM said...

ஹாய் டொன்லீ ! வருகைக்கு மகிழ்ச்சி!

நானும் இந்த நாடகம் பார்த்ததில்லை. ஆனால் பாடல் கேட்க மட்டும் ஆஜராகிவிடுவேன்.

சொல்லரசன் said...

ஆகா..இங்கேயுமா.

ராம்.CM said...

வாங்க சொல்லரசன்! வருகையில் மகிழ்ச்சி!

ஆதவா said...

எங்கெயோ கேட்டா மாதிரி இருக்கே!!!!

பகிர்தலுக்கு நன்றி... பாட்டின் அர்த்தம் அதகளம்....

ஆதவா said...

என் பதிவுக்கு வந்து பின்னூட்டம் கொடடுத்தது நநன்றி தல...

தொடர்ந்து வாருங்கள்..

கார்த்திகைப் பாண்டியன் said...

தலைவா.. அந்த வாழ்க்கை நாடகத்தால நான் எவ்வளவு நொந்து இருக்கேன் தெரியுமா.. என்னோட பாட்டி அத தினமும் பார்ப்பாங்க.. அதுல வந்த வில்லி நடிகைய பார்த்து நான் அழாத நாள் கிடையாது.. அவ்வளவு கொடுமையான நாடகம்.. ஆனா பாட்டு நல்ல இருக்கு.. ராம்.. மேடமும் குட்டியும் வீட்டுக்கு வந்து விட்டார்கள் போல.. என்ஜாய்.. வாழ்த்துக்கள்..

Anonymous said...

மூங்கில் காட்டில் தீ பிடித்தால்
புல்லாங்குழல்கள் மிச்சமடா..
துயரம் கண்டு நீ சிரித்தால்
வாழ்க்கை உனக்கு உச்சமடா!
*****************
நம்பிக்கை வரிகள்

sakthi said...

வலிகள் துன்பம் காயம் இல்லாமல்
வாழ நினைப்பவன் கோழையடா..
இடுப்பு வலிதான் தாய்க்கு வராமல்
எவனும் பிறப்பது இல்லையடா!
alagana artham ulla varigal

ராம்.CM said...

வாங்க ஆதவா!
வருகைக்கு மகிழ்ச்சி!
வாழ்த்துக்களுக்கு நன்றி!

ராம்.CM said...

ஹாய் கார்த்திகைப்பாண்டியன்! வருகைக்கு மகிழ்ச்சி, வாழ்த்துக்களுக்கு நன்றி! என் துணையும்,சின்னவரும் நலம்.

நன்றி கவின்! வருகைக்கு மகிழ்ச்சி!

நன்றி சக்தி! வருகையில் சந்தோசம்!

ச.பிரேம்குமார் said...

நல்ல பாட்டு. நானும் கல்லூரி காலத்தில் இது போல பல தொலைகாட்சி தொடர்களின் தலைப்பு பாடல்களை ஆர்வமாக கேட்பதுண்டு. பல சமயங்கள் அந்த பாடல்கள் திரைப்படப் பாடல்களை விட நல்ல இசையையும் வரிகளையும் கொண்டிருக்கும்

நல்ல பதிவு. வாழ்த்துகள் ராம். சீக்கிரமே உங்கள் சின்னவர பத்தி ஒரு பதிவு போடுவீங்கன்னு எதிர்ப்பார்க்கிறொம்

ராம்.CM said...

நன்றி ப்ரேம்! வாழ்த்துக்கு மகிழ்ச்சி! விரைவில் சின்னவரப் பத்தி ஒரு பதிவு போடுகிறேன்.