Friday, February 20, 2009

மத்தியச்சிறை.

சென்னை சென்ட்ரல் இரயில் நிலையம் அருகேயுள்ள பழைய மத்தியசிறை பொதுமக்களின் பார்வைக்காக திறந்துவிடப்பட்டுள்ளது. இச்சிறையை ஆயிரக்கணக்கான பொதுமக்கள் தினமும் பார்வையிடுகின்றனர். நானும் பார்ப்பதற்காக சென்றிருந்தேன்.அதை பற்றிய சிலவரிகள்...

1837ம் ஆண்டு ஆங்கிலேயரால் வடிவமைக்கப்பட்டு திறக்கப்பட்டது சென்னை மத்தியச்சிறை. சுமார் 15ஏக்கர் நிலப்பரப்பில் கட்டப்பட்டது. இச்சிறையில் கைதிகளின் தண்டனை காலத்திற்கேற்ப பிரிவுகள் இருந்ததே தவிர, கைதிகளின் குற்றங்களுக்கேற்ப பிரிவுகள் கிடையாது. கைதிகளுக்கு தேவையான உணவு, மருத்துவம் இந்த இரண்டை தவிர வேறு வசதிகள் கிடையாது.
[தற்போதைய சிறை; கைதிகளின் தண்டனைகாலத்திற்கேற்ப பல பிரிவுகளாக அறைகள் அமைக்கப்பட்டுள்ளது. யோகா பயிற்சி, உடற்பயிற்சிக்கூடம், நூலகம், மருத்துவம், நல்லஉணவு, சிறுதொழில் உற்பத்திக்கூடம் என்று சிறப்பாக அமைக்கப்பட்டுள்ளது.]
பெரிய குற்றங்களுக்கு தனி அறையும், சிறிய தண்டனை காலத்திற்கு குறைந்தது 30 நபர்கள் தங்குமாறு மொத்தமாக பெரிய அறைகளும் உள்ளன. எந்த அறைகளுக்கும் மின்வசதி கிடையாது.
ஆயுள்கைதிகள் தனது அறைகளின் சுவற்றில் தனது பெயர், தண்டனை காலம், போன்றவற்றை எழுதியுள்ளனர். சிலர், “ ‘என்னை மன்னித்துவிடுங்கள்’!, ‘நான் அனுபவித்த கொடுமையை யாரும் அனுபவிக்கக் கூடாது!’, ‘என்னை தூக்கில் போடாதீர்கள்!’ ” போன்ற வாசகங்கள் எழுதியுள்ளனர்.
மின்சார வேலி பொருத்தப்பட்ட மிகப்பெரிய மதில்சுவர்கள் நம்மை பிரமிக்க வைக்கிறது.அதே நேரத்தில் இதிலிருந்தும் கைதிகள் தப்பித்து விடுகிறார்கள்!. என்றால் அது மிகபெரிய கேள்வி குறி?..

சிறை மாற்றம் செய்யப்பட்டு ஓராண்டுக்கு மேலாகிவிட்டதால் மிகவும் பாழடைந்து இடிக்கப்பட்ட கட்டிடம் போல காட்சியளிக்கிறது. மாற்றம் செய்யப்பட்ட உடனே பார்ப்பதற்கு அனுமதிக்கப்பட்டிருந்தால் சிறப்பாக இருந்திருக்கும்.இருப்பினும் நாம் அனைவரும் காணவேண்டிய ஒரு இடமாக அமைந்திருக்கிறது.{இந்த வாய்ப்பை தவற‌விட்டால் என்றுதான் சிறையைப் பார்ப்பது?.}
கல்லூரி,பள்ளி மாணவர்கள் கூட்டமும் அதிகமாக காணப்படுகிறது. இதெல்லாவற்றையும்விட நம்ம “காதலர்கள்!?” கூட்டத்திற்கும் பஞ்சமில்லை.

மொத்தத்தில் நிரபராதிகளின் ஆதங்கத்தை தனக்குள் கட்டுபடுத்திக்கொண்டும், குற்றவாளிகளின் எண்ணங்களை தனது கட்டுபாட்டிற்குள் வைத்துகொண்டும் கம்பீரமாக காட்சியளிக்கும் ஆங்கிலேயங்காலத்து கட்டிடம் இன்னும் ஒரு வாரத்திற்குபின் தரைமட்டமாகப்போகிறது என்பதுதான் உண்மை.இருப்பினும் இவ்விடம் அரசு பொதுமருத்துவமனையின் விரிவாக்கத்திற்கு பயன்படுத்தபடுகிறது என்பதால் நன்மையே!.

12 comments:

சொல்லரசன் said...

ராமுவை ஒரு வாரமாக ஆளையே காணவில்லை என்று பார்த்தால்.........

//மின்சார வேலி பொருத்தப்பட்ட மிகப்பெரிய மதில்சுவர்கள் நம்மை பிரமிக்க வைக்கிறது.அதே நேரத்தில் இதிலிருந்தும் கைதிகள் தப்பித்து விடுகிறார்கள்!. என்றால் அது மிகபெரிய கேள்வி குறி?..//

அந்த துறை சேர்ந்த உங்களுக்கே தெரியாதபோது எங்களுக்குஎப்படிங்க............

தாமிரா said...

கட்டுபாட்டிற்குள்
பயன்படுத்தபடுகிறது

//
பிழை தவிர்க்கவும், ராம்..

கார்த்திகைப் பாண்டியன் said...

//சிலர், “ ‘என்னை மன்னித்துவிடுங்கள்’!, ‘நான் அனுபவித்த கொடுமையை யாரும் அனுபவிக்கக் கூடாது!’, ‘என்னை தூக்கில் போடாதீர்கள்!’ ” போன்ற வாசகங்கள் எழுதியுள்ளனர்.//

நிறைய தவறுகள் உணர்ச்சி வசத்தாலும் கோபத்திலும் செய்பவையே என்று சொல்வார்கள்.. நல்ல பதிவு ராம்..

பிரேம்குமார் said...

துறை சார்ந்த பதிவா ராம் :)
இன்னும் நிறைய சொல்லியிருந்தால் நாங்களும் நிறைய தெரிஞ்சிக்கிட்டு இருப்போம்ல :)

உங்களை ஒரு தொடர் விளையாட்டுக்கு அழைத்திருக்கிறேன். வலைப்பூவை கொஞ்சம் எட்டிப் பார்க்கவும் :)

’டொன்’ லீ said...

//சிலர், “ ‘என்னை மன்னித்துவிடுங்கள்’!, ‘நான் அனுபவித்த கொடுமையை யாரும் அனுபவிக்கக் கூடாது!’, ‘என்னை தூக்கில் போடாதீர்கள்!’ ” போன்ற வாசகங்கள் எழுதியுள்ளனர்.//

தூக்கு தண்டனைக்கு பதில் ஆயுள் தண்டனை வழங்குவதிலும் காரணம் இருக்கத் தான் செய்கின்றது..

HS said...

உங்களுடைய வலைப்பூக்களை இங்கே பதிவு செய்து கொள்ளுங்கள், http://kelvi.net/topblogs/ சிறந்த வலைப்பூக்களாக வர வாழ்த்துக்கள்

கேள்வி. நெட்

Namakkal Shibi said...

சின்னத் தல,

எப்போ சென்னை வந்தீங்க? சொல்லவே இல்லை!

கார்க்கி said...

/.{இந்த வாய்ப்பை தவற‌விட்டால் என்றுதான் சிறையைப் பார்ப்பது?.}//

எனக்கு அந்தக் கவலை இல்லைங்க.. நிரைய பார்த்துட்டேன்.. :)))

Namakkal Shibi said...

கார்க்கி,

என்னென்ன செக்ஷன்லயெல்லாம் போயிருக்கீங்க?

பழமைபேசி said...

:-o)

உமா said...

//இதெல்லாவற்றையும்விட நம்ம “காதலர்கள்!?” கூட்டத்திற்கும் பஞ்சமில்லை.//

இந்த இடத்தைக்கூட விட்டு வைக்கவில்லையா?

/ஆங்கிலேயங்காலத்து கட்டிடம் /

அடிமைச்சின்னம் அழிவதே மேல்.

ராம்.CM said...

நன்றி சொல்லரசன்! வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி. திடீரென ஊருக்கு செல்ல
வேண்டியிருந்ததால் 10 தினங்களாக வர இயலவில்லை.அதற்காக வருந்துகிறேன்.

நன்றி தாமிரா! இனி தவறின்றி எழுதுகிறேன்.!

நன்றி கார்த்திகைப்பாண்டியன்! வாழ்த்துகளுக்கு நன்றி!

நன்றி ப்ரேம்! நான் ஒருவாரமாக விடுமுறைக்கு சென்றதால் தங்கள் அழைப்புக்கு வர இயலவில்லை. அதற்காக வருந்துகிறேன். வாழ்த்துகளுக்கு நன்றி!

நன்றி டொன் லீ !

நன்றி HS!

நன்றி நாமக்கல் சிபி!

நன்றி கார்க்கி!

நன்றி பழமைபேசி!

நன்றி உமா!தங்கள் வருகைக்கு மகிழ்ச்சி!.