Showing posts with label தகவல். Show all posts
Showing posts with label தகவல். Show all posts

Wednesday, June 17, 2009

சும்மாத்தான்!...

பணிமாற்றத்திற்கு பிறகு கொஞ்சம் வேலை பளு ( கொஞ்சம் அதிகமாகவே ).

புது அதிகாரிகள் மற்றும் புது கட்டுப்பாடுகள் என கரும்பு சாறு பிழிவதுபோல் 10 தினங்களுக்கு மேலாக பிழிந்துவிட்டனர். பணி முடிந்ததும் எப்படா ஓய்வு என்று வீட்டிற்கு ஓடத்தான் நேரம் கிடைத்ததே தவிர ப்ரவுசிங் சென்டர் பக்கம் போக நேரமே இல்லை.

இதற்கு என்று தான் முடிவு வருமோ?.

மனதில் ஓரத்தில் பதிவுலகத்தை பற்றியும், பதிவுலக நண்பர்கள் பற்றியும் ஓடிக்கொண்டிருக்க இன்று எப்படியாவது பின்னுட்டமாவது போட்டுவிட வேண்டும் என வந்துவிட்டேன்.

தாமதத்திற்காக வருந்துகிறேன்...

.

Tuesday, May 26, 2009

பணிமாற்றம்..இனி படையெடுப்பு..!

யப்பாடியோவ்... ஒரு பெருமூச்சு விட்டுக்கிறேன்... ஒரு வழியாக தேர்தல் முடிந்துவிட்டது. நமது எல்லையில் அதிகம் பதட்டம் இல்லாமல் முடிந்ததில் மகிழ்ச்சி. இப்படி நினைத்துகொண்டு ரிலாக்ஸாகும் நேரத்தில் ஒரு சின்ன குண்டு... என்னவென்று பதட்டமாக.. "அதி தீவிரப் படை (கமாண்டோ)" பிரிவுக்கு பணியமர்த்தபட்டு மூன்று வருடங்கள் முடிந்துவிட்டதால் (மே 20) பணியிட மாற்றம்.

அய்யய்யோ... எப்போ... எங்கே... வெடிக்கபோகுதோ... பதட்டதோடு இரண்டு நாட்கள் அமைதிகாக்க... வெடித்தது நேற்று (மே 25)... எங்கே தெரியுமா?...



"சிறப்பு அதி தீவிரப் படை ( ஸ்பெஷல் கமாண்டோ)"-சென்னை சென்ட்ரல் இரயில் நிலையம். எனக்கு பிடித்த ஆர்வமுள்ள இடத்திற்கே பணி மாற்றம் கிடைத்ததில் மகிழ்ச்சி. இனி...

ஓய்வுவெடுத்து வாரக்கணக்கில் ஆகிவிட்டதால் ஒரு வாரகாலம் (ஜூன் 2) விடுமுறை எடுத்து விட்டு...

பணியில் சேரவும்., ப்ளாக் மீது படையெடுப்பும்...

.

Thursday, April 30, 2009

வாரம் ஒரு முறைதான்..!

அன்பார்ந்த என் பதிவுலக நண்பர்களுக்காக...

தேர்தல் சூடுபிடிக்க ஆரமித்து விட்டதால் எமது பணியும் சூடுபிடித்து விட்டது. சென்ற வாரங்களிலேயே என் பணியின் பளுவும் அதிகரித்து விட்டது. தினசரி குறைந்தது 12 மணி நேரத்திலிருந்து 18 மணி நேரம் பணி இருப்பதால் மீதமுள்ள நேரங்களில் ஓய்வு எடுக்கவே சரியாக உள்ளது. அதுவும் நான் "அதி தீவிரப்படை" ( கமாண்டோ ) பிரிவில் இருப்பதால் இன்னும் நெருக்கடி அதிகம். இதன் காரணமாக சரிவர வலைப் பதிவுலகிற்கு வர இயல வில்லை. சிலரின் பதிவுகளுக்கு பின்னூட்டங்களும் இட முடிய வில்லை. அதற்காக வருந்துகிறேன். இன்னும் ஒரு மாத காலத்திற்கு இந்த நிலை நீடிக்கும் என நினைக்கிறேன். அதுவரை என் பதிவுலக நண்பர்கள் பொறுத்து கொள்ளவும். ஆனால் எப்படியும் வாரம் ஒரு முறையாவது பதிவுலகிற்கு வந்துவிடுவேன். தற்போது கூட "சென்னையில் இரயில் விபத்து" நடந்த இடத்தில் பாதுகாப்பு பணியில் இருந்துவிட்டு உணவருந்துவதற்காக வீடு திரும்புகிற வழியில் உங்களை சந்திக்கிறேன். சற்று ஓய்வு எடுத்துவிட்டு திரும்ப இரவு பணிக்கு செல்ல வேண்டும். மீண்டும் அடுத்த பதிவில் சந்திக்கும் வரை உங்களிடமிருந்து உத்தரவு வாங்கிக்கிறேன்.


-ராம்.CM.

.