Tuesday, August 10, 2010

நீ ரசமா?... ரசாயனமா?...

என் நட்பின் பிரதிபலிப்பே..
நீ ரசமா?... ரசாயனமா?...

அழகோவியம் சிறகடித்து
என் வான் விட்டு பறந்தது
சந்தோசத்தில்..

சிறை பிடிக்க எண்ணவில்லை
சிரம் தூக்கி வாழ்த்தினேன்.,
வழியனுப்பினேன்...

என் உறவு வானில் பறக்க‌
பூரிப்பில் நான் மிதக்க‌
என் உலகம் நான் பார்க்க‌
எல்லாமே காலம் காக்க‌
கடந்தது.. அன்று.

சொப்பனத்தில் சுகம்காண‌
நித்திரையில் நிதானமாக‌
எப்போதும் எல்லாமே
அவளுக்காக
நான் வணங்க...

சிறகடித்து வந்தாள்,
சிகரம் தொட நினைத்தாள்,
உன் நட்பில் மூழ்கி
முகம் துடைத்தாள்,
அவள் பூரிப்பை
உன்னில் கண்டேன்..

என் நட்பை பிரதிபலிக்கும்
கண்ணாடியாய் நீ...

தற்செயலான தரிசனத்தில்
முகம் தரிக்கவும்,
புன்னகை தெரிக்கவும்
மறுக்கிறாள்.
நடந்தது.. இன்று.


உன் வானில் சிறகடிக்கும்
ஆசை அவளுடையது.,
அதை அறங்கேற்றிய‌
ஓசை என்னுடையது.,

உன்னுடையது...
சிகரம் தொடுவதா?..
அவளை சிறைபிடிப்பதா?...

அவள் நண்பனாக..

உன்னில் நான் எப்போது அவளை,
அவள் புன்னகையை பார்ப்பது..?

உன் நண்பனாக..

நீ ரசம் பூசப்பட்ட கண்ணாடியா?
ரசாயனம் பூசப்பட்ட கண்ணாடியா?...



குறிப்பு : என் பள்ளிபருவ கவிதை !(பத்தாம் வகுப்பு).

.

8 comments:

நட்புடன் ஜமால் said...

ரசமும் ஒரு ரசாயனம் தான் :)



(படிச்சி முடித்த பின்)
ஓஹ்! கண்ணாடி ரசமா ...

நட்புடன் ஜமால் said...

குறிப்ப இப்பதான் கவணித்தேன்

அப்பவேவா!!!

கார்த்திகைப் பாண்டியன் said...

நன்று.. அப்பப்போ வந்து போங்க தல

வால்பையன் said...

பத்தாவது படிக்கும் போதே ஆரம்பிசாச்சா! கலக்குங்க!

வால்பையன் said...

பத்தாவது படிக்கும் போதே ஆரம்பிசாச்சா! கலக்குங்க!

ராம்ஜி_யாஹூ said...

அருமை.

நீங்கள் முக்கூடல் அருகே இருக்கும் பாப்பாக்குடி ஊரா

Thamira said...

சரியான மொக்கைக் கவிதை. :-))

ஆதவா said...

பள்ளிப் பருவத்திலா... பலே பலே... யாருங்க அது??

கவிதை அப்பருவத்திற்கேற்ப நன்றாக இருக்கிறது.