Friday, March 6, 2009

பழமொழியில் அரைசதம் !

“வழக்கொழிந்த வார்த்தைகள்” என்ற தலைப்பு பதிவர்களிடையே நல்ல வரவேற்பைப்பெற்று நமக்கு தெரியாத தமிழ் வார்த்தைகளைப்பற்றி அறிவதற்கு உதவியது. என்னையும் எழுத நண்பர்கள் ப்ரேம் மற்றும் கார்த்திகைப்பாண்டியன் கேட்டிருந்தனர். விரைவில் முயற்சி செய்கிறேன். இதேபோல் “வழக்கொழிந்த பழமொழிகள்” என்ற தலைப்பில் அதிக நண்பர்கள் பதிவுகள் போட்டுள்ளனர்.என்னையும் இந்த தலைப்பில் நண்பர் ‘ராட்மாதவ் அவர்கள்’ எழுதச்சொல்லி கேட்டிருந்தார். முதலில் இதற்கு முயற்சி செய்யலாம் [இது நமக்கு ஈசி என்பதால்..]என்று முடிவு செய்து இதை எழுதுகிறேன். ஆனால் ‘வழக்கொழிந்த பழமொழிகள்’ என்று எடுத்துக்கொள்ளாமல் ‘பேச்சுவழக்கு பழமொழிகள்’ என்று எடுத்துக்கொள்ளவும்.

எங்கள் ஊரில் பேச்சுவழக்கில் அதிகமான பழமொழிகள் இருந்தாலும் எனக்கு தெரிந்த பழமொழிகளில் அரைசதத்தை எழுதுகிறேன். ஏதாவது பிழை இருப்பின் அதற்காக வருந்துகிறேன். சுட்டிகாட்டினால் திருத்திக்கொள்கிறேன்.

1. உப்பிட்டவரை உள்ளளவும் நினை !
2. ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் !
3. சட்டியில் இருந்தால்தான் ஆப்பையில் வரும் ! [ஷஷ்டியில் இருந்தால்தான் அகப்பையில் வளரும் !]
4. கடுகு சிறுத்தாலும் காரம் குறையாது !
5. எள் என்றால் எண்ணெயாய் இரு !
6. தாயைப்போல பிள்ளை, நூலைப்போல சேலை !
7. தாய் எட்டடிப் பாய்ந்தால் குட்டி பதினாறு அடி பாயும் !
8. மாமியார் உடைத்தால் மண்சட்டி, மருமகள் உடைத்தால் பொன்சட்டி !
9. வர வர மாமியார்,கழுதைபோல போனாலாம் !
10. கல்லானாலும் கணவன், புல்லானாலும் புருசன் !
11. கணவனே கண் கண்ட தெய்வம் !
12. ஆற்றில் போட்டாலும் அளந்து போடு !
13. தனக்கு போகதான் தானமும் தர்மமும் !
14. மனமிருந்தால் மார்க்கமுண்டு !
15. பொறுத்தார் பூமியாள்வார் !
16. ஆற்று நிறைய தண்ணீர் போனாலும் நாய் நக்கிதான் குடிக்கும் !
17. நாய் வாலை நிமித்த முடியாது !
18. ராமன் ஆண்டாலும் ராவணன் ஆண்டாலும் எனக்கொரு கவலையில்லை !
19. விடிய விடிய கதை கேட்டு சீதைக்கு ராமன் சித்தப்பாவா? !
20. இனம் இனத்தோட சேரும் !
21. காலம் பொன் போன்றது,கடமை கண் போன்றது !
22. இக்கரைக்கு அக்கரை பச்சை !
23. காற்றுள்ள போதே தூற்றிக்கொள் !
24. சிறுதுளி பெருவெள்ளம் !
25. சிறு துரும்பும் பல் குத்த உதவும் !
26. மின்னுவதெல்லாம் பொன்னல்ல !
27. நிறைகுடம் நீர் தளும்பாது, குறைகுடம் கூத்தாடும் !
28. குறைக்கும் நாய் கடிக்காது !
29. தொட்டில் பழக்கம் சுடுகாடு வரைக்கும் !
30. காக்கைக்கு தன் குஞ்சும் பொன் குஞ்சு !
31. ஐந்தில் வளையாதது, ஐம்பதில் வளையாது !
32. ஆழம் தெரியாமல் காலை விடாதே !
33. வெட்டிட்டு வானா, கட்டிட்டு வருவான் !
34. கூழானாலும் குளித்துகுடி, கந்தையானாலும் கசக்கிகட்டு !
35. காடு வா வா என்கிறது, வீடு போ போ என்கிறது !
36. சிட்டு குருவிக்கு பட்டம் கட்டியமாதிரி !
37. உயர உயர பறந்தாலும், ஊர்குருவி பருந்தாகாது !
38. ஆத்திரக்காரனுக்கு புத்திமட்டு !
39. ஆடத்தெரியாதவன் தெருக்கோணல் என்பனாம் !
40. அறுக்க தெரியாதவனுக்கு 58 அரிவாளாம் !
41. அற்பனுக்கு வாழ்வு வந்தால் அர்த்த ராத்திரியில் குடை பிடிப்பானாம் !
42. ஊர்குருவி எவ்வளவு உயரபறந்தாலும் ஊர் போய்சேராது !
43. பனமரத்தின் கீழ்நின்று பால் குடித்தாலும், கள் குடித்ததாகத்தான் அர்த்தம் !
44. வினை விதைத்தவன் வினை அறுப்பான் !
45. தான் ஆடாவிட்டாலும் தன் தசை ஆடும் !
46. புலி பசித்தாலும் புல்லை திங்காது !
47. தன் கையே தனக்குதவி !
48. அடி உதவுகிற மாதிரி அண்ணன் தம்பி உதவ மாட்டான் !
49. ஊழ்வினை உறுத்துவந்து ஊட்டும் !
50. பேராசை பெரு நஷ்டம் !
51. அழுதாலும் பிள்ளையை அவள்தானே பெறவேண்டும் !

யப்பாடா ! ஒரு வழியா அரைசதம் போட்டாச்சு, இனி அவுட்டானாலும் கவலையில்லை... நீங்கள் விருப்பப்பட்டால் சதம் அடிப்பதற்கு முயற்சிபண்ணலாம்..!

21 comments:

கார்த்திகைப் பாண்டியன் said...

ராம்.. தடாலடி பதிவு.. அருமையான பழமொழிகள்.. அரை சதம் வேறு.. கலக்குங்கள்.. பார்ப்போம்.. என்னால் முடிந்தால் நானும் கொஞ்சம் பழமொழிகளை சேர்த்து விடுகிறேன்..

சொல்லரசன் said...

"மாப்பிள்ளை செத்த என்ன? மன‌பெண் செத்த என்ன? எனக்கு வேண்டியது மாலை காசு."
"கெடப்பது கெடக்கட்டும் கிழவிய துக்கி மனையில் வை"

இதையும் சேர்த்துங்க ராம்.

உங்க முற்சிக்கு பாராட்டுகள்.இதை தொடர்பதிவு ஆக்கிடதிங்கோ.

Venkatesan said...

theriyatha thevathaikku thrintha pisasu mel

தாமிரா said...

தெரிஞ்ச பழமொழிகள்.! புதுமையா ஒண்ணுமில்லையே.!

அமிர்தவர்ஷினி அம்மா said...

அரை சதமடித்ததற்கு வாழ்த்துக்கள்

தெரிந்த பழமொழிகளே என்றாலும் திரும்ப படிக்கும்போது மகிழ்ச்சி தருகிறது.

ஆதவா said...

அபாரம் அபாரம்....... எல்லாமே கேட்ட பழமொழிகளாக இருக்கின்றன.

////////ராமன் ஆண்டாலும் ராவணன் ஆண்டாலும் எனக்கொரு கவலையில்லை !////////

ஏங்க, இது பாட்டுல்ல???? பழமொழியா???

அருமை..... எல்லோரும் ஒரேவிதமா யோசிச்சிடு இருக்க, நீங்க பழமொழின்னு வித்தியாசமா அரைசதம் போட்டிருக்கீங்க..

தொடருங்க ராசா......

ஆதவா said...

விருப்பப்பட்டால் சதம் அடிப்பதற்கு முயற்சிபண்ணலாம்..!

நானெல்லாம் எட்டி நின்னு வேடிக்கை பார்க்கலாம்... அம்புட்டுத்தான்.......

ஆ.ஞானசேகரன் said...

பழக்கத்தில் உள்ளவைதான், இருப்பினும் நன்றாக உள்ளது

Rajeswari said...

சீக்கிரம் சதம் அடிச்சிருங்க பாஸ்

’டொன்’ லீ said...

இன்னும் நிறைய இருக்கு...கட்டாயம் சதம் அடிக்கலாம்...:-)

Anonymous said...

தல் நீங்களே அரைசதம் என்டால் நாங்க எப்டியாம் சதம் அடிக்கிறது??

ராம்.CM said...

நன்றி கார்த்திகைப்பாண்டியன்! வருகைக்கும்,வாழ்த்துக்கும் மகிழ்ச்சி! தாங்களும் இத்தலைப்பில் எழுதுங்கள்!காத்திருக்கிறேன்.

நன்றி சொல்லரசன்! தாங்களும் இணைந்துவிடுங்கள்.. இதோடு..

நன்றி வெங்கடேசன்! தாங்கள் முதன்முதலாக வருகிறீர்கள். எனது மனமார்ந்த நன்றி!

நன்றி தாமிரா! 'பேச்சுவழக்கு பழமொழிகள்' என்ற தலைப்பில்தானே பதிவு எழுதியுள்ளேன்!

நன்றி அமிர்தவர்ஷினி அம்மா! தங்கள் வருகைக்கு மகிழ்ச்சி! வாழ்த்துக்கு மகிழ்ச்சி!

நன்றி ஆதவா! //தொடருங்க ராசா......// தொட‌ர்ந்துவிடுவோம்.. சொல்லிட்டீங்க‌ள்ள‌...

நன்றி ராஜேஸ்வரி!//சீக்கிரம் சதம் அடிச்சிருங்க பாஸ்//.. வெயிட் ப‌ண்ணுங்க..!விரைவில்...

ந‌ன்றி டொன்லீ! ச‌த‌ம் அடிச்சிர‌லாமா??..

ந‌ன்றி க‌வின்! வ‌ருகையில் ம‌கிழ்ச்சி!.

ராம்.CM said...

//மிக அருமையான யோசனை நண்பரே. ஒவ்வொரு பதிவரும் முயற்சி செய்தால் முடியாததுயில்லை நாளை நனவாக வாழ்த்துகள்.//

ரிப்ப்ப்பபீட்ட்டுடுடு....

ராம்.CM said...

நன்றி ஆ.ஞானசேகரன்! தாங்கள் முதன்முதலாக வந்துள்ளீர்கள்! மகிழ்ச்சியும்,நன்றியும்!

sakthi said...

alagana palamozhigal
maranthu pona vatrai gnabagam
seythamaiku nandri ram

நட்புடன் ஜமால் said...

50க்கு வாழ்த்துகள்

நட்புடன் ஜமால் said...

42. ஊர்குருவி எவ்வளவு உயரபறந்தாலும் ஊர் போய்சேராது !

இது ...

நட்புடன் ஜமால் said...

\\அமிர்தவர்ஷினி அம்மா said...

அரை சதமடித்ததற்கு வாழ்த்துக்கள்

தெரிந்த பழமொழிகளே என்றாலும் திரும்ப படிக்கும்போது மகிழ்ச்சி தருகிறது.\\

நானும் கூவிக்கிறேன் ...

thevanmayam said...

சிறந்த
தொகுப்பு!!!

thevanmayam said...

பழமொழில் அரை சதம் புதுமை

ராம்.CM said...

நன்றி சக்தி! வருகையில் மனநிறைவு!

நன்றி நட்புடன் ஜமால்! வருகையில் மகிழ்ச்சி! கொஞ்ச நாளா ஆளயே காணோம்?.

நன்றி தேவன் மாயம்! தாங்கள் முதன்முதலாக என் வ‌லைக்கு வந்துள்ளீர்கள்! வரவேற்கிறேன்...நன்றி!