Monday, March 30, 2009

“சல்யூட்” -- நமது கடமை.

இந்திய நாட்டை காப்பதற்காக தனது உயிரை துச்சமென மதித்து எதிரிகளையும், தீவிரவாதிகளையும் சல்லடையாக்கும் ‘சீருடை பணியாளருகளுக்கு’ நாம் என்றுமே கடமைப்பட்டிருக்கிறோம். நாம் இங்கு அமைதியாக சுதந்திரமாக வாழ்வதற்கு அவர்கள் அனைவரும் தங்கள் உயிரை பணயம் வைத்து பணியாற்றுகிறார்கள்.

அவர்கள் இராணுவம், எஸ்.பி.ஜி., என்.எஸ்.ஜி., சி.ஆர்.பி.எப்., பி.எஸ்.எப்., சி.ஐ.எஸ்.எப்., ஆர்.பி.எப்., ஆர்.பி.எஸ்.எப்., மற்றும் மாநில காவல்துறைகள் என்று பல பிரிவுகளில் நமக்கு பாதுகாவலாக விளங்குகின்றனர்.

25CA6SKHUCCAEO29SLCA8QIS5VCAOO6QE4CAYOCLI1CA6NALYVCAR7ZBHFCAQC3HGDCAMD3DDACA9TSE2ZCAD87P0XCADMR6E0CAV0A4VMCAFPYJQHCAQZ1TR2CAF5OJ6QCAQ8T6RWCAPM4CRNCAN1M3KJ

இவர்கள் நமது நாட்டில் உள்ள வி.ஐ.பிகளுக்கும் பாதுகாப்பு அளிக்கின்றனர். இவ்வாறு பாதுகாப்பு அளிக்க மத்திய உள்துறை அமைச்சர் தலைமையில் ஒரு கமிட்டி செயல்பட்டு வருகிறது. அதில் எடுக்கப்படும் முடிவு பொறுத்து வி.ஐ.பிகளுக்கு பாதுகாப்பு அளிக்கப்படும். இவர்கள் நான்கு பிரிவுகளில் வி.ஐ.பிகளுக்கு பாதுகாப்பு அளிக்கின்றனர்.

1. இசட் ப்ளஸ் (z+) :

இசட் ப்ளஸில் இரண்டு பிரிவு.

i. எஸ்.பி.ஜி. பாதுகாப்பு: [சிறப்பு பாதுகாப்புப்படை]

இந்திய நாட்டின் முன்னாள், இன்னாள் பிரதமர், ஜனாதிபதி மற்றும் அவரது குடும்பத்தினர்களுக்கு பாதுகாப்பு அளிப்பர்.

ii. என்.எஸ்.ஜி. பாதுகாப்பு: [தேசிய பாதுகாப்புப்படை]

கவர்னர், மத்திய உள்துறை அமைச்சர், பிரதமரின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர், முதல்வர், முன்னாள் முதல்வர்கள் ஆகியோர்களுக்கு இப்படை வீரர்கள் பாதுகாப்பு அளிப்பர். இவர்கள் ‘கருப்பு பூனை படை’ என்றும் அழைக்கப்படுவர்.

2. இசட் (Z) :

இசட் பாதுகாப்பு பிரிவில் சி.ஆர்.பி.எப். வீரர்கள் பாதுகாப்பு அளிக்கின்றனர். முக்கிய மத்திய அமைச்சர்கள், தீவிரவாதிகளால் மிரட்டல் விடப்பட்ட கட்சித் தலைவர்கள், முக்கிய என்கவுண்டர்களில் பணியாற்றிய காவல் துறை அதிகாரிகளுக்கு இவர்கள் பாதுகாப்பு அளிப்பர்.

3. ஒய் (Y) :

ஒய் பாதுகாப்பு பிரிவில் மாநில போலீஸார் பயன்படுத்தபடுவர். மிரட்டல் உள்ள அதிகாரிகள், அரசியல்வாதிகளுக்கு பாதுகாப்பு அளிப்பர். இவர்களுக்கு துப்பாக்கி ஏந்திய இரண்டு காவலர்கள் நியமிக்கப்படுவர். இவர்கள் வீட்டிலும் போலீஸார் பாதுகாப்புக்கு பணி அமர்த்தப்படுவர்.

பிரபலமான நீதிபதிகள், ஓய்வு பெற்ற நீதிபதிகள், முக்கிய நடிகர்கள், இயக்குனர்கள்,விளையாட்டு வீரர்கள் ஆகியோர்களுக்கும் இப் பிரிவினர் பாதுகாப்பு அளிப்பர்.

4. எக்ஸ் (X) :

அந்தந்த மாநில உள்துறை செயலாளர் தலைமையில் இப்பிரிவு இயங்கும். முக்கிய பிரமுகர்களுக்கு அவர்கள் தொழில் ரீதியாக எதிரிகள் இருந்தால் அவர்களுக்கும், சம்பந்தப்பட்டவர்கள் கோரிக்கைகள் உண்மையானதா என உளவு பிரிவு ஆராய்ந்து அறிக்கை சமர்பிக்கப்பட்டால் அதன் பிறகு பாதுகாப்பு அளிக்கப்படும்.

இவ்வாறாக சிறப்பாக பணியாற்றும் இவர்களை போன்ற அனைத்து சீருடைப்பணியாளர்கள் அனைவரும் ஒட்டு மொத்தமாக பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுவது தேர்தல் பணிக்காக.

YLCAU3HKH0CABC6ENXCAGDSXKDCAUMVQAYCA0GFXRQCAJOQHUDCA1R05TACA750L74CAATGWHKCAD75QQJCAILLP67CA837OHLCAB11M6ECAHHOHCBCA90NRQ6CAW5Q1TNCA2H6FLFCALGOBFDCA54VE12

தேசத்திற்காக 'சல்யூட்' செய்யும் இவர்களை நாம் “சல்யூட்” செய்ய‌ கடமைப்பட்டிருக்கிறோம்.

ஜெய்ஹிந்த்!.

23 comments:

goma said...

எல்லோர் போலவும் எனக்கு புத்தகம் படிக்கும் பழக்கமில்லை. எழுத்தாளர்களை பற்றி படித்ததும் கிடையாது.
உங்களைப் பற்றி எழுதியிருந்ததை பார்த்தேன்
தனித்தன்மையுடன் எழுத நீங்கள் மேற்சொன்ன இரண்டு தகுதிகளும் போதும் அழகாக எழுதுகிறீர்கள்.
ஆர அமர வாசித்து பின்னூட்டம் இடுகிறேன்

goma said...

12 மணி நேரம் உழைத்தும் எழுதுவதற்கென நேரம் ஒதுக்கும் உங்களுக்கு ஒரு சல்யூட்

ராம்.CM said...

நன்றி ஹோமா! நன்றி. முதன்முதலாக வந்து சல்யூட் செய்ததற்கு....

கார்த்திகைப் பாண்டியன் said...

உங்கள் துறை சார்ந்த பதிவு ராம்.. நிறைய விஷயங்கள் எனக்கு புதுசு.. கண்டிப்பாக தங்கள் உயிரைப் பணயம் வைத்து போராடும் இவர்கள் கொண்டாடப் பட வேண்டியவர்கள்.. அவர்களுக்கு ஏன் சல்யுட்...

பிரேம்குமார் said...

துறை சார்ந்த பதிவிற்கு வாழ்த்துகள் ராம். எனக்கு தெரிந்து காவல்துறையிலிருந்து நீங்கள் மட்டும் தான் பதிவு எழுதுகிறீர்கள் என்று நினைக்கிறேன். ஆக, நீங்கள் உங்கள் துறை பற்றி எங்களுக்கு நிறைய சொல்லுங்கள். படிக்க ஆவலாக உள்ளோம் :)

பிரேம்குமார் said...

தேசத்தின் பாதுகாப்புக்காக பாடுபடும் அனைவருக்கும் எங்கள் சிரம்தாழ்ந்த வணக்கங்கள்

ராம்.CM said...

நன்றி கார்த்திகைப்பாண்டியன்! வாழ்த்துக்கு மகிழ்ச்சி!

நன்றி ப்ரேம்! தங்கள் விருப்பப்படி அவ்வபோது கண்டிப்பாக எனது துறைசார்ந்து பதிவுகள் எழுதுகிறேன். தங்களின் அமோக ஆதரவினை விரும்புகிறேன்......மீண்டும் நன்றியினை தெரிவித்துகொள்கிறேன்.

Renga said...

இலங்கை, தமிழ் என்றெல்லாம் எழுதி இருந்தீர்களேயானால் இந்நேரம் உங்களுக்கு 1500 பின்னூட்டம் வந்திருக்கும். நீங்கள் என்ன பிழைக்க தெரியாத ஆள் மாதிரி தெரிகிறது...

Anyway, Congratulations & Salute for writing about India & Indian Armed Forces... Keep writing... Jai Hind...

’டொன்’ லீ said...

உண்மைதான்...

goma said...

வாழ்த்துக்கள் யூத் விகடனும் உங்கள் பதிவுக்கு ஒரு சல்யூட் அடிக்கிறது

சொல்லரசன் said...

துறை சார்ந்தபதிவு வாழ்த்துகள் ராம்.

சொல்லரசன் said...

ராம் நீங்கள் எழுதுவது உங்கள் துறை அதிகரிகளுக்கு தெரியுமா.

ஆதவா said...

போலீஸ்கார் போலிஸ்கார்.... அருமையான தகவல் போலிஸ்கார்.... ஹிஹி..

மிகவும் தேவைப்படுகிற நான் இதுவரை தெரிந்துகொள்ள விரும்பி முடியாத தக்வலைக் கொடுத்திருக்கீங்க

சல்யூட்.... சார்...

ஆ.ஞானசேகரன் said...

முதலில் தவறவிட்ட முதல் சல்யூட் உங்களுக்கு ராம் சார்...
கடமையை செய்யும் காவலர் அனைவருக்கும் எங்களின் சல்யூட் ... காவல் படையின் அனைத்து விவரங்களையும் சொல்லி எங்களை மகிழ்வித்த உங்களுக்கு மீண்டும் சல்யூட்...

நன்றி ராம் சார்

ஆ.ஞானசேகரன் said...

யூத்புல் விகடனில் உங்கள் பதிவு வாழ்த்துக்கள் நண்பரே
http://youthful.vikatan.com/youth/index.asp

வால்பையன் said...

என் வணக்கங்கள் நண்பரே!

gayathri said...

கடமையை செய்யும் காவலர் அனைவருக்கும் எங்களின் சல்யூட் ...

POLICE ANNA UNGALUKUM ORU சல்யூட் ...

ராம்.CM said...

நன்றி ரெங்கா! வருகையில் மகிழ்ச்சி! நான் பெரும்பாலும் என் சொந்த அனுபவத்தையே எழுத விரும்புவேன்.

நன்றி டொன் லீ!

நன்றி கோமா! வருகையில் மகிழ்ச்சி!

நன்றி சொல்லரசன்! நான் எழுதுவது என் அதிகாரிகளுக்கு தெரியாது. பயப்படுவதற்கு ஒன்றும் இல்லை. இதெல்லாம் மக்கள் தெரிந்துகொள்ளவேண்டிய தகவல். யார் வேண்டுமானாலும் சொல்லலாம்.

நன்றி ஆதவா!வருகையில் மகிழ்ச்சி!

ந‌ன்றி ஆ.ஞான‌சேக‌ர‌ன்! ச‌ல்யூட்டுக்கு வ‌ண‌ங்குகிறேன்.

ந‌ன்றி வால் பைய‌ன்! வ‌ருகையில் ம‌கிழ்ச்சி!

ந‌ன்றி ச‌கோதிரி காய‌த்ரி! த‌ங்க‌ள் ச‌ல்யூட்டுக்கும் ந‌ன்றி!

sakthi said...

இந்திய நாட்டை காப்பதற்காக தனது உயிரை துச்சமென மதித்து எதிரிகளையும், தீவிரவாதிகளையும் சல்லடையாக்கும் ‘சீருடை பணியாளருகளுக்கு’ நாம் என்றுமே கடமைப்பட்டிருக்கிறோம்.

kandipa ram sir

கார்த்திகைப் பாண்டியன் said...

ராம்.. நேரம் கிடச்சா உடனே நம்ம தளத்துக்கு வாங்க.. ஒரு ஆச்சரியம் இருக்குது..

ராம்.CM said...

நன்றி சக்தி! வருகையில் மகிழ்ச்சி!

பிரேம்குமார் said...

//. தங்களின் அமோக ஆதரவினை விரும்புகிறேன்......மீண்டும் நன்றியினை தெரிவித்துகொள்கிறேன்.//

ராம், என்ன கட்சியா ஆரம்பிக்கிறீங்க? அமோக ஆதரவு தரதுக்கு ...கிகிகி

உங்கள் துறை சார்ந்த பதிவுகளை எப்போதும் நாங்கள் ஆவலுடன் படிக்க காத்திருக்கிறோம். நீங்கள் சொன்னது போல் மக்களுக்கு தெரிய வேண்டியவைகளை அழகாக நீங்கள் எடுத்து சொல்லும் போது படிக்க கசக்குமா என்ன?

சொல்லப்போனா, நாங்க தான் உங்களுக்கு நன்றி சொல்லனும் :)

ராம்.CM said...

நன்றி ப்ரேம்! வருகையில் மகிழ்ச்சி!தங்கள் நன்றிக்கு நன்றி!