அபிநய சுடரே..
அத்தையின் மகளே..
புத்தாடை புனைந்தால் போதாது,
வான் மழை பொழிய
வாழ்வில் வளம்பெற
பூமி ஆனந்தவிழாவாக
மாற..
இதழ் சுவைக்கும் இனிப்புகளோடும்,
இதயம் சுவைக்கும் மனித நேயத்தோடும்,
காதலை பங்கிட்டு, இந்த நாள்
இதய திருவிழா நாளாக
ஆண்டு கணக்கில்
என்
ஆழ் மனதில் படிய..
சோர்வான நிமிடங்கள்
உன் பட்டாசு புன்னகையால் சிதற
என் மனதில்
மகிழ்வு பொங்க வா...
என் காதலியே வா...
வந்து புன்னகைத்துவிடு...
கொஞ்சமல்ல
“கிலோக்கணக்கில்..!”
.
17 comments:
\\இதழ் சுவைக்கும் இனிப்புகளோடும்,
இதயம் சுவைக்கும் மனித நேயத்தோடும்\\
அருமைங்கோ!
நன்றி நட்புடன் ஜமால்! பதிவு போட்டவுடன் கமண்ட்ஸ்... கலக்கீட்டீங்க... நன்றி!
//வான் மழை பொழிய வாழ்வில் வளம்பெற பூமி ஆனந்தவிழாவாக மாற.. இதழ் சுவைக்கும் இனிப்புகளோடும், இதயம் சுவைக்கும் மனித நேயத்தோடும்,//
நல்ல எண்ணங்கள் ...
நல்லா இருக்கு ராம்.. காதல் கவிதை..? ஓகே ஓகே.. நடத்துங்க..
நன்றி ராஜேஸ்வரி!வருகையில் மகிழ்ச்சி!
நன்றி கார்த்திகைப்பாண்டியன்! வாழ்த்துக்கு மகிழ்ச்சி!
//என் காதலியே வா... வந்து புன்னகைத்துவிடு...கொஞ்சமல்ல
“கிலோக்கணக்கில்..!” //
ரொம்ப ஆசை ராம்,
நல்லா இருக்கு தொடருங்கள்..
அடிச்சு துள் கிளப்புங்கள்,என்ன ராம் நீங்க ஆல்ரவுண்டர் ஆக வலம் வருகிறீர்கள் எப்போது எழுதிய கவிதையிது, நன்றாக இருக்கிறது பாராட்டுகள்.
சரியான மொக்கைக் கவிதை.!
ஹாஹா...
வாழ்த்துகள்...:-)
//என் காதலியே வா... வந்து புன்னகைத்துவிடு...கொஞ்சமல்ல
“கிலோக்கணக்கில்..!” //
nice ram
அருமை.... காதல் கவிதை... கிலோ கணக்கா??? அதென்னங்க கணக்கு!!!! பேராசைக் கணக்கா???
ம்ம்.... நடாத்துங்க
ராம்... என்னாச்சு உங்களுக்கு? ஏன் இப்படியெல்லாம்?
நன்றி ஆ.ஞானசேகரன்! வருகைக்கு மகிழ்ச்சி!
நன்றி சொல்லரசன்! வருகையில் மகிழ்ச்சி!
நன்றி தாமிரா (எ) ஆதிமூலகிருஷ்ணன்! இனி திருத்தி கொள்கிறேன்!
நன்றி டொன்லீ! வருகைக்கும் நன்றி!
நன்றி சக்தி! வாழ்த்துக்கும் மகிழ்ச்சி!
நன்றி ஆதவா! ஆசை அளவிடமுடியாதது.
நன்றி ப்ரேம்! சின்ன சேஞ்சுக்காகதான்!
அப்ப கிலே கணக்கிலை காதலிக்கிறீங்க எண்டு சொல்லுங்க..!
NICE
நன்றி கவின்! வருகைக்கு மகிழ்ச்சி!
நன்றி பல்கி! முதல்முதலாக வருகிறீர்கள்...வருகைக்கு மகிழ்ச்சி!
Post a Comment