Saturday, March 14, 2009

ஹி இஸ் கிரேட்..!

சென்னை பெருங்குடி ரயில் நிலையம்: இரவு 08.35மணி.

நேரம் அதிகமாகி விட்டதால் ப்ளாட் பாரத்தில் சரியாக சொன்னால் என்னையும் சேர்த்து 6 பேர் இருந்தோம். நான் பணி முடிந்து வீட்டிற்கு செல்ல ரயிலுக்காக காத்திருந்தேன். அப்போது ஒரு நபர் ப்ளாட்பாரத்தின் கடைசி ஓரத்தில் இருந்து நடுவிற்கு நடந்து வந்தார். அவர் பக்கத்தில் வரவர அவர் பக்கம் என் கவனம் திரும்பியது.

நல்ல உயரம், அழகான உடல்வாகு, ‘போலீஸ்கட்’ ஹேர் ஸ்டைல், பேண்ட் புல்கேண்ட் சர்ட், ‘டக்’ பண்ணி பார்ப்பதற்கு அழகாக இருந்தார். வேகமாக நடந்து வந்த அவர் ப்ளாட்பார நடுவில்.. ஓரளவுக்கு எனது பக்கத்தில் வந்து நின்றார். பக்கத்தில் நான் செல்போன் பேசி கொண்டிருந்தேன். என்னை கவனித்து கொண்டிருந்த அவர் நான் போனை வைத்ததும்..

‘எக்ஸ்கியுஸ்மீ சார்’ என்றார்.

‘எஸ்!’.

‘08.33 வண்டி போய்விட்டதா சார்?’

‘அதற்காகத்தான் நானும் வெயிட்டீங்.’

‘ஓ.. தேஇங்க் யூ சார்.. போயிருக்கும் என்று வேகவேகமாக வந்தேன்’

‘தினசரி இந்த வண்டிக்குதான் வருவீங்களா’

‘இல்ல சார் வெள்ளிகிழமை தோறும் வருவேன்’ என்றார்.

என்னிடம் பேசி முடித்தவுடன் கையில் இருந்த செல்போனை எடுத்து டயல் செய்தார். அவர் நம்பர் டைப் பண்ண ஒவ்வொரு நம்பரையும் செல்போன் திரும்பி சொன்னது. போன் பேசி முடிந்ததும் அமைதியாக அங்கும் இங்கும் வேடிக்கைப் பார்த்து கொண்டிருந்தார். ரயில் வந்து நிற்கவும் நேராக நடந்து சென்று வண்டியின் சைடில் தாளம்போட்டவாறே வாசல் வந்ததும் ஏறி அருகிலுள்ள சீட்டில் அமர்ந்தார்.

நானும் அருகில் அமர்ந்தேன்.மறுபடியும் செல்லை எடுத்து யாருக்கோ டிரை பண்ணிவிட்டு வைத்துவிட்டார். பிறகு ஜன்னல் வழியே பார்த்துக்கொண்டவந்த அவர் அவ்வப்போது உள்ளே பேசும் நபர்களையும் கவனித்துக் கொண்டிருந்தார். ‘பார்க் டவுண்’ வந்ததும் மெதுவாக வாசல் அருகே வந்து இறங்கி ப்ளாட்பாரத்தின் ஓரத்தில் நின்றார்.[எல்லோரும் போவதற்கு வழிவிடுவது போல..] ‘என்னசெய்ய போகிறார்?’ என நானும் ஓரமாக நின்றேன். சிறிது நேரத்தில் அவர் நடக்க ஆரம்பித்தார். நான் அவர் அருகில் சென்று ‘ஏன் சார் யோசித்து நடந்து வருகிறீர்கள்?” என்றேன்.

‘ஸாரி சார்! எனக்கு கண் தெரியாது!’ என்றார். மனதிற்குள் “திக்” என்றது. எப்படி சார்.. ‘ஸ்டிக்’ இல்லாமல்.. என்றதற்கு... ‘பழகிவிட்டது சார்.’ என்றுகூறி விட்டு மெதுவாக நடக்க ஆரம்பித்தார்.

அவரை திகைத்து பார்த்து கொண்டிருக்கும் போதே என் மனதில் அவரைப்பத்தி ஒரு ‘ப்ளாஸ்பேக்’ ஓடியது...

1.படியேறும் வரை அமைதியாக வந்துவிட்டு நேர்நடையாக வந்தது.,

2.அருகில் நபர் இருப்பதை உணர்ந்து பேசியவிதம்.,

3.செல்போன் டையல் செய்யும் எண்ணை திருப்ப சொன்னது.,

4.ரயிலில் நேராக ஜன்னல் வரவும் தாளம் போட்டுகொண்டே வாசலில் ஏறியது.,

5.தன்னை காட்டிகொள்ளக்கூடாது என்பதற்காக பிறர் பேசுவதை வேடிக்கை பார்ப்பதுபோல் நடந்தது.

IZCA18J0TPCANXJU48CA961TQJCAR22TFLCAHTRRYMCA3B978WCA0O9WVQCA92YD4PCALWFBEQCAQBCBJCCAWWCS59CAO0H4DVCAZ72O33CAH9VH3NCAE6EPSVCADH0VAACAJIECEOCAXVBYW4CAF20ZHS

தன்னிடம் உள்ள குறையை வைத்து பிறரிடம் அனுதாபம் பெறுபவர்களிடையே, தன் குறையை பொருட்படுத்தாமலும், வெளிகாட்டாமலும், செல்லும் இந்நபரை என்ன சொல்வது?...

ஹி இஸ் கிரேட்...!

27 comments:

கார்த்திகைப் பாண்டியன் said...

//தன்னிடம் உள்ள குறையை வைத்து பிறரிடம் அனுதாபம் பெறுபவர்களிடையே, தன் குறையை பொருட்படுத்தாமலும், வெளிகாட்டாமலும், செல்லும் இந்நபரை என்ன சொல்வது?... கி இஸ் கிரேட்...!///

உண்மையிலேயே பெரிய விஷயம் தான் நண்பா.. தன்னம்பிக்கையான மனிதர் போலும்.. நல்ல பதிவு..

ஆ.ஞானசேகரன் said...

உண்மையில் கி இஸ் கிரேட்......

ஆதவா said...

பெரும்பாலும் ஊனமுற்றவர்கள் தங்கள் குறையை மற்றவரிடம் சொல்லி புலம்பமாட்டார்கள்... நிறைவான மனிதர்கள்தாம் புலம்புவது!!!

அவரது திட்டமிடுதலை நாம் கற்றுக் கொள்ளவேண்டும்!!!! எவ்வளவு நேர்த்தி!!!

Rajaraman said...

ஹி இஸ் கிரேட். மறுமுறை பார்க்க நேர்ந்தால் அவர் அனுமதியுடன் அவரைப்பற்றி முழுமையாக எழுதவும்.

ராம்.CM said...

நன்றி கார்த்திகைப்பாண்டியன்! வருகையில் மகிழ்ச்சி!

நன்றி ஆ.ஞானசேகரன்! வருகைக்கும், வாழ்த்துக்கும் நன்றி!

நன்றி ஆதவா! வருகைக்கு மகிழ்ச்சி!

நன்றி ராஜாராமன்! தாங்கள் முதன்முதலாக வந்துள்ளீர்கள்! வருகைக்கும்,வாழ்த்துக்களுக்கும் நன்றி!தாங்கள் கூறியுள்ளது போல அவரை சந்தித்தால் கண்டிப்பாக அவரைப்பற்றி தெளிவாக எழுதுகிறேன்.!

ஈரோடு கதிர் said...

//‘ஸாரி சார்! எனக்கு கண் தெரியாது!’ என்றார். மனதிற்குள் “திக்” என்றது.//

எனக்கு நெஞ்சே அதிர்ந்தது.....

அமுதா said...

அவரது தன்னம்பிக்கை சிலிர்க்க வைக்கிறது...

அன்புடன் அருணா said...

ஆஹா....Really he is great!!!
anbudan aruna

சி தயாளன் said...

உண்மை தான் ராம்..அவர் தன்னம்பிக்கை அனைவருக்கும் முன்னுதாரணம்...:-)

சொல்லரசன் said...

அவரது தன்னம்பிக்கையை பாராட்ட வேண்டும்.

Pradeep said...

Really he is great...we have to learn lot from him..
Pradeep

ராம்.CM said...

நன்றி கதிர்! தாங்கள் முதல்முதலாக வருகிறீர்கள்! வரவேற்கிறேன். வாழ்த்துக்கு மகிழ்ச்சி!


நன்றி அமுதா! தங்கள் வருகைக்கு நன்றி!

நன்றி அன்புடன் அருணா! வாழ்த்துக்கு மகிழ்ச்சி!

நன்றி டொன்லீ!

நன்றி சொல்லரசன்!

நன்றி ப்ரிதீப்!தங்கள் வருகைக்கு மகிழ்ச்சி!

வால்பையன் said...

எஸ் ரியலி கிரேட்

ராம்.CM said...

நன்றி வால் பையன்! வருகையில் மகிழ்ச்சி!

உங்கள் ராட் மாதவ் said...

Really a symbol of self confidence.
Nice.

Rajeswari said...

வழிமொழிகிறேன்..அவர் உண்மையிலே உயர்ந்தவர்தான்

ராம்.CM said...

நன்றி RAD MADHAV ! வருகைக்கு மகிழ்ச்சி!


ந‌ன்றி ராஜேஸ்வ‌ரி! வாழ்த்துக்கு ம‌கிழ்ச்சி!

Anonymous said...

அவர்களின் பலமே தன்னம்பிக்கைதான்..
நல்ல பகிர்வு

ராம்.CM said...

நன்றி கவின்! வருகைக்கு மகிழ்ச்சி!

மேவி... said...

unmaila avar oru உயர்ந்த மனிதர் தானுங்க

ராம்.CM said...

நன்றி மாயாவி! முதல்முதலாக என் பதிவிற்கு வந்துள்ளீர்கள்... மகிழ்ச்சி!

Anonymous said...

Hi,

உங்களுடைய வலைப்பதிவு இணைப்பை www.ntamil.com ல் சேர்த்துள்ளோம்.

இதுவரை இந்த www.ntamil.com இணையதளத்தில் நீங்கள் பதிவு செய்யவில்லை எனில், உங்களை உடனே பதிவு செய்து, உங்களது புதிய வலைப்பதிவை உடனுக்குடன் பூர்த்தி செய்து, உங்கள் வலைப்பதிவை, உலகம் முழுவதுமாக பரவி உள்ள தமிழ் வாசகர்கள் முன் கொண்டு செல்லுங்கள்.

நட்புடன்
nTamil குழுவிநர்

சின்னப் பையன் said...

உண்மையில் கி இஸ் கிரேட்......

ராம்.CM said...

நன்றி சின்னப்பையன்!

goma said...

இறைவன் யாரையும் முழுக்க முழுக்க குறைகளோடு படைத்திருக்க மாட்டான்.ஒன்று எடுத்தால் ஒன்று கொடுத்திருப்பான்,நம் கையில் இருப்பது 5 ரூபாய் நாணயமா 50 காசா என்று திருப்பித் திருப்பிப் பார்ப்போம் அவர்கள் தொடு உணர்ச்சியிலேயே கண்டுகொண்டு நம்மைக் கண் இருந்தும் பார்வையற்றவராய் ஆகி விடுவார்கள்.

savi3 said...

Hi Appa,

Really very touching...he is really very very great man..thanks to u for publishing about his character in a very natural manner...

ராம்.CM said...

நன்றி சாவி!.. வருகையில் மகிழ்ச்சி!