பெண் பதிவருக்காகவும், ஆண் பதிவரென்றால் அவர்களின் [ வருங்கால ] மனைவிக்காகவும் இப்பதிவு எழுதப்படுகிறது. இந்த தலைப்பில் எழுத ஆயிரம் விஷயம் இருந்தாலும் இப்போது ஒன்றைப்பத்தி எழுதுகிறேன். தினமும் வீட்டில் பெண்கள் விளக்கேற்றும் பழக்கமுடைவர்கள். அதைப் பற்றிய எனக்கு தெரிந்த [எங்கோ படித்த?..] சில விவரங்களை எழுதியுள்ளேன். அப்படி விளக்கேற்றும் பழக்கமுடையவர்கள் மட்டும் தொடர்ந்து படியுங்கள்... தவறு இருப்பின் சுட்டிகாட்டுங்கள்.. திருத்திக்கொள்கிறேன். இல்லையேல் வழக்கம்போல பின்னூட்டமும்,ஓட்டும் போட்டுவிடுங்கள். ஏனென்றால் ஓட்டு கேட்டு வாங்கும் பழக்கம் எனக்கு கிடையாது.[!?]. இப்ப மேட்டருக்கு வருவோம்...
1.குத்துவிளக்கின் தீபம் கிழக்குமுகமாக ஏற்றினால் துன்பங்கள் நீங்கி வசீகரம் உண்டாகும்!
2.மேற்குமுகமாக ஏற்றினால் கிரஹதோஷம்,பங்காளிப்பகை உண்டாகும்!
3.வடக்கு முகமாக ஏற்றினால் கல்வி மற்றும் சுபகாரியங்களில் ஏற்படும் தடைகள் நீங்கும்.திரண்ட செல்வம் உண்டாகும்!
4.தெற்கு முகமாக ஏற்றினால் அபசகுணம்,பெரும்பாவம் உண்டாகும்.
5.குத்துவிளக்கில் தீபம் ஒரு முகமாக ஏற்றினால் மத்திம பலன் கிடைக்கும்!
6.இரு முகமாக ஏற்றினால் குடும்ப ஒற்றுமை ஓங்கும்!
7.மும் முகமாக ஏற்றினால் புத்திரசுகம், கல்வி கேள்விகளில் விருத்தி அடையும்!
8.நான்கு முகமாக ஏற்றினால் பசு,பால்,பூமி சேர்க்கை!
9.ஐந்து முகமாக ஏற்றினால் சர்வபீடை நிவர்த்தி ஆகும். ஐஸ்வர்யலஷ்மி கடாட்சம் பெருகும்!
10.தாமரைத் தண்டில் திரி போட்டால் மூன்று ஜென்ம பாவங்கள் போகும்!
11.வாழைத்தண்டு நூலில் திரி போட்டால் குலதெய்வ குற்றம், சாபம் போகும்!
12.புது மஞ்சள் சேலைத்துண்டில் திரி போட்டால் தாம்பத்திய தகராறு நீங்கும்!
13.புது வெள்ளை வஸ்த்திரத்தில் பன்னீரை விட்டு உலரவிட்டுப் போட்டால் வீட்டில் லட்சுமி கடாட்சம் பெருகும். மூதேவி அகன்று விடுவாள்!
14.விளக்கிற்கு இடும் எண்ணெய் நல்லெண்ணெய் எனில் மத்திம பலன்!
15.விளக்கெண்ணை எனில் துன்பங்கள் விலகும்!
16.இலுப்பை எண்ணெய் எனில் பூஜிப்பவருக்கும்,பூஜிக்கப்படும் இடத்துக்கும் விருத்தி உண்டாகும்!
17.நெய் ஊற்றி விளக்கு ஏற்றினால் லட்சுமி கடாட்சம் பெருகும்!
அவ்வ்வ்வளவுதானுங்கோ!...
{என்னை பொருத்தவரை நம்ம மக்கள் விளக்கேத்தினாலே பெரிய விஷயம்.?!.}
14 comments:
அழகாகவே சொல்லியிருக்கிறீர்கள். இதைப்படித்து உணர்ந்து விளக்கேற்றும் அனைவருக்கும் இன்னும் ஒரு விஷயம்.விளக்கில் ஒளியேற்றும் போது கூடவே உள்ளத்திலும் ஒளியேற்றுங்கள்.இறைவன் இருப்பது நம் உள்ளத்தில் தான்.
நன்றி உமா! வருகைக்கு மகிழ்ச்சி! வந்தே ரொம்ப நாள்கள் ஆகிறதே?. வாழ்த்துக்களுக்கும் நன்றி!
//அழகாகவே சொல்லியிருக்கிறீர்கள். இதைப்படித்து உணர்ந்து விளக்கேற்றும் அனைவருக்கும் இன்னும் ஒரு விஷயம்.விளக்கில் ஒளியேற்றும் போது கூடவே உள்ளத்திலும் ஒளியேற்றுங்கள்.இறைவன் இருப்பது நம் உள்ளத்தில் தான்//
ரிபீட்ட்ட்ட்ட்ட்
ஏன் இப்பிடி ஜோசியத்தில இறங்கிட்டீங்க ராம்? நல்லாதானே போய்கிட்டிருந்தது..
நன்றி ஆ.ஞானசேகரன்! வருகைக்கு மகிழ்ச்சி!
நன்றி ஆதி!
வீட்டில் மின் விளக்கு இருந்தாலும் உந்த எண்ணெய் விளக்கு ஏத்தோனுமோ...?
எனக்கு இஞ்ச உங்க இருக்கிற மாதிரி மின்வெட்டு எல்லாம் கிடையாது...
மகளிர்ஸ்பெசலா,விளக்கேற்றுவதில் இவ்வளவு விபரம் இருக்கிறதா.வாழ்த்துகள்
ராம்
என்ன திடீர்னு இப்படி இறங்கிட்டீங்க?
என்னை பொருத்தவரை நம்ம மக்கள் விளக்கேத்தினாலே பெரிய விஷயம்.?!.}
ஹிஹி... இது கலக்கல்...!!!!
வலையுலக பெண் பதிவர்களே!!! விளக்கு வைக்கும் பொழுது இதை மறக்காமல் நோட் செய்யவும்..
நன்றி டொன்லீ!
நன்றி சொல்லரசன்!
நன்றி ஆதவா!ஒரு சின்ன சேஞ்சுக்காக..!
லாஜிக்கல எதாவது சம்பந்தம் இருக்கா?
ஏன் இப்படி!
எவ்வளவுதான் மின் விளக்குகள் வீட்டில் எரிந்தாலும் ,தீபங்கள் தரும் வெளிச்சம் ,தெய்வீகமானது ..(என்ன ராம் ,எப்போ இருந்து இப்படி ??ப்ரியாமணி போட்டோ பாத்துட்டா? )
நன்றி வால் பையன்! இனி இதமாதிரி நடக்காது...
நன்றி ராஜேஸ்வரி! சும்மாதான்...கோபப்படாதீங்க!
Post a Comment