Monday, March 9, 2009

அடிச்சாச்சு சதம்! { “நாட்அவுட்” பேட்ஸ்மேன் }

பேச்சுவழக்கு பழமொழிகள் என்ற தலைப்பில் நான் அடித்த அரைசதம் நண்பர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றதால் தொடர்ந்து நின்னு ஆடலாம் என முடிவு செய்து தனி இன்னிங்க்ஸாகவே ஆடலாம் என முயற்சி செய்து,

அடித்து ஆடப்போகிறேன்...250e57b0ab05d559d25a3e405c8fd861[1]

ஸ்கோர் போர்டு:

1. நாம் ஒன்று நினைத்தால் தெய்வம் ஒன்று நினைக்கும்!

2. பல் போனால் சொல் போச்சு!

3. உதடு தேய்வதைவிட உள்ளங்கால்கள் தேயலாம்!

4. யானை வரும் பின்னே, மணியோசை வரும் முன்னே!

5. தம்பி உடையான் படைக்கு அஞ்சான்!

6. கொடுக்கிற தெய்வம் கூரையை பிய்த்துக்கொண்டு கொடுக்கும்!

7. ஆடற மாட்டை ஆடிக் கறக்கணும், பாடுற மாட்டை

     பாடி கறக்கணும்!

8. சிறுதுளி பெரு வெள்ளம்!

9. விதை ஒன்று போட்டால், சுரை ஒன்றா முளைக்கும்!

10. தாமரை இலை தண்ணீர் போல!

11. ஏட்டு சுரைக்காய் கறிக்கு உதவாது!

12. ஊரார் பிள்ளையை ஊட்டி வளர்த்தால் தன்

     பிள்ளை தானே வளரும்!

13. கருப்பே அழகு, காந்தலே ருசி!

14. உப்பில்லா பண்டம் குப்பையிலே!

15. ஆண்டாண்டு காலம் அழுதாலும், மாண்டவர்

     வருவாரோ மானிடத்தில்!

16. வலது கை கொடுப்பது இடது கைக்கு தெரியக்கூடாது!

17. பழத்த ஓலையை பார்த்து குறுத்து ஓலை சிரித்தால்,

     குறுத்து ஓலையும் ஒருநாள் பழுத்த ஓலையாகும்!

18. தன் வினை தன்னை சுடும், ஓட்டப்பம் வீட்டை சுடும்!

19. நாய் விற்ற காசு குறைக்காது!

20. ஊர்கூடி தேர் இழுக்கணும்!

21. மைத்துனிக்கு மிஞ்சிய உறவும் கிடையாது,

     முடிக்கு மிஞ்சிய  கருப்பும் கிடையாது!

22. ஆடிப் பட்டம் தேடி விதை!

23. ஆடிக்காற்றில் அம்மியும் நகரும்!

24. எறும்பு ஊர கல்லும் தேயும்!

25. ஐந்து பெண் பெற்றால் அரசனும் ஆண்டியாவான்!

26. ஆபத்தில் உதவும் நண்பனே, உண்மையான நண்பன்!

27. பிள்ளையார் கோவிலை இடித்து பெருமாள் 

     கோவில்   கட்டுவதா?.!

28. எலி வலையனாலும் தனி வலை வேண்டும்!

29. பதறிய காரியம் சிதறும்!

30. சிறுதுளி பெருவெள்ளம்!

31. காற்றுள்ளபோதே தூற்றிக்கொள்!

32. நாம் ஒன்று நினைக்க தெய்வம் ஒன்று நினைக்கும்!

33. பணம் பத்தும் செய்யும்!

34. நெருப்பில்லாமல் புகையாது!

35. வருமுன் காப்பதே சிறந்தது!

36. வாய்மையே வெல்லும்!

37. ஐயர் வரும்வரை அமாவாசை காத்திருக்குமா?.!

38. ஒற்றுமையே பலம்!

39. செய்யும் தொழிலே தெய்வம்!

40. நேர்மையே சிறந்த கொள்கை!

41. பழக பழக பாலும் புளிக்கும்!

42. அகத்தின் அழகு முகத்தில் தெரியும்!

43. மனமிருந்தால் மார்க்கமுண்டு!

44. ஈயத்தை பார்த்து இழித்ததாம் பித்தளை!

45. வெள்ளம் வரும்முன் அணை போடவேண்டும்!

46. புயலுக்கு பின் அமைதி!

47. அறிவு ஆற்றல் வாய்ந்தது!

48. அதிகம் கேள், குறைவாக பேசு!

49. அரசன் அன்று கொல்வான், தெய்வம் நின்று கொல்லும்!

50. பலமரம் கண்ட தச்சன் ஒருமரமும் வெட்டான்!

f2860c0aacd532ff9d2cb50fc709e268[1]

51. அளவுக்கு மிஞ்சினால் அமுதமும் நஞ்சு!

52. மன்னன் எவ்வழியோ, மக்கள் அவ்வழி!

53. வேலியே பயிரை மேய்ந்தால் விளைவது எப்படி?.!

54. தன்னைப்போல் பிறரையும் நேசி!

55. வெறுங்கை முழம் போடுமா?

56. வாக்குவாதம் செய்ய இருவர் தேவை!

57. அமாவாசை சோறு என்னைக்கும் அகப்படுமா?

58. புதுவிளக்குமாறு நல்லாதான் பெருக்கும்!

59. நன்றாய் முடிவதெல்லாம் நன்மைக்கே!

60. மொட்டைதலைக்கும் முழங்காழுக்கும்

     முடிச்சு  போடமுடியுமா?

61. கடை தேங்காய் எடுத்து வழி பிள்ளையாருக்கு 

     உடைத்தானாம்!

62. அகத்தின் அழகு முகத்தில் தெரியும்!

63. ஜான் பிள்ளையானாலும் ஆண் பிள்ளை வேணும்!

64. முசபுடிக்கிற நாயை மூஞ்சப்பாத்தாலே தெரியும்!

65. கழுதைக்கு தெரியுமா கற்பூர வாசனை!

66. சுத்தம் சோறு போடும்!

67. முயற்சியுடையார் இகழ்ச்சியடையார்!

68. ஆனைக்கும் அடி சறுக்கும்!

69. நோயற்ற வாழ்வே குறையற்ற செல்வம்!

70. உழைப்பே உயர்வு தரும்!

71. நுனலும் தன் வாயால் கெடும்!

72. சும்மாகிடந்த சங்கை ஊதி கெடுத்தானாம் ஆண்டி!

73. அழுதபிள்ளை பால் குடிக்கும்!

74. மூர்த்தி சிறித்தாயினும் கீர்த்தி பெரியது!

75. பணம் பாதளம் வரை பாயும்!

76. முயற்சி திருவினையாக்கும்!

77. திரைகடல் ஓடியும் திரவியம் தேடு!

78. வனத்தில் மேய்ந்தாலும் இனத்தில் அடையனும்!

79. கூடி வாழ்ந்தாலும் கோடி நன்மை!

80. விருந்தும் மருந்தும் மூன்று நாட்கள்தான்!

81. யாதும் ஊரே யாவரும் கேளிர்!

82. ஓட்டைசட்டியில் கொழுக்கட்டையை வேகவைத்தல் போல்!

83. உப்புக்கு சித்தாத்தால் உறவுமுறைக்கு நெய்வார்த்தால்.!

84. ஆடத்தெரியாதவன் மத்தளம்மேல் விழுந்தான்!

85. அடிமேல் அடி விழுந்தால் அம்மியும் நகரும்!

86. சோழியங்குடிமி சும்மா ஆடாது!

87. சாமிக்கே சப்பரம் இல்லையாம், பூசாரிக்கு புல்லட் கேட்குதா!

88. பூசாரியே சோத்துக்கு அழைய லிங்கம்

     பஞ்சாமிர்தம் கேட்டதாம்!

89. எரியிர வீட்டில் பிடிங்கிய வரை லாபம்!

90. முருங்கை பருத்தாலும் உத்திரத்திற்கு ஆகாது!

91. இரும்படிக்கிற இடத்தில் ஈக்கு என்ன வேலை!

92. எறும்பூர கல்லும் தேயும்!

93. அம்மி அறைக்க அறைக்க கரடிமேல் ஏறாது.!

94. துணிந்தவனுக்கு சமுத்திரமும் முழங்கால் மட்டும்!

95. வீரன் ஒருநாள் சாவான், கோழை தினந்தினம் சாவான்!

96. அலை ஓய்ந்து குளிப்பதெப்போ!

97. ஆசை அறுபதுநாள் மோகம் முப்பதுநாள்!

98. கேட்பவன் கேனையனென்றால் கேப்பையிலும்

     நெய் வடியும்!

99. பட்டகாலிலே படும் கெட்டகுடியே கெடும்!

100. பெற்றமனம் பித்து, பிள்ளை மனம் கல்லு!

ee7d593b680afd68bd813b64eba08869[1]

101. வாளினும் எழுதுகோள் வலிமையுடையது!

 

     அடிச்சாச்சு சதம்! { “நாட்அவுட்” பேட்ஸ்மேன் }

16 comments:

கார்த்திகைப் பாண்டியன் said...

ராம்.. இது சரியான ஆட்டம்.. முயற்சி பண்ணி நூறு அடிச்சாச்சு.. வாழ்த்துக்கள்..

நட்புடன் ஜமால் said...

நல்ல ஆட்டம் தான்

நிறைய தெரிஞ்சிக்கிட்டேன் ...

சி தயாளன் said...

படத்தில் இருப்பவர் 163 அடிச்சிருக்கிறார். ஆகவே நீங்கள் நியாயமாக 163 போடோனும் :-))

சொல்லரசன் said...

பின்னிட்டிங்கோ.
வாழ்த்துகள் ராம்

ஆதவா said...

வாவ்.....
வாவ்.....
வாவ்.....


கலக்கல்.... யப்பாடி.... அசந்தே போயிட்டேன்.. மூச்சுவிடாம படிச்சேன்... எங்கெயோ கேட்டமாதிரி இருந்தாலும் எல்லாமே ஒண்ணா பார்க்கையில தனி சுகம்ந்தான்.. ஆனா இது செஞ்சுரி இல்லை.... செஞ்சுரி இல்லை... செஞ்சுரி இல்லை!!!

1 ம் 31 ம் ஒண்ணுதான்.... பாருங்கோ!!!

24 ம் 92 ம் ஒண்ணுதான்... ஹி ஹி

87 ஆம் ரன்னும் 88 ஆம் ரன்னும் ஒண்ணு.... டூப்ளிகேட் ரன்...

சும்மா செக் பண்ணாம பார்த்தது... செக் செய்தால் இன்னும் கிடைக்கலாம்... இருந்தாலும் உங்களது தமிழார்வம் கண்டு பயந்தே போயுள்ளேன்...ஹ் இஹ் இ சும்மா..... அசந்துவிட்டேன்... நிஜமா..

வாழ்த்துக்கள்.

வால்பையன் said...

எல்லாத்தையும் படிக்கிறதுகுள்ள தாவூ தீருதே!

ச.பிரேம்குமார் said...

அடிச்சு ஆடுங்க ராம்

ராம்.CM said...

நன்றி கார்த்திகைப்பாண்டியன்! வாழ்த்துக்களில் மகிழ்ச்சி!


நன்றி நட்புடன் ஜமால்! வருகையில் மகிழ்ச்சி! என் பின்தொடர்வதற்கு நன்றி!


நன்றி டொன்லீ! அவரைப்போல அடிக்கணும்னா "பூஸ்ட்" குடிக்கணும். எங்க வீட்டில் "ஹார்லிக்ஸ்"தான்!


நன்றி சொல்லரசன்!வருகையில் மகிழ்ச்சி!

ராம்.CM said...

நன்றி ஆதவா!
// ஆனா இது செஞ்சுரி இல்லை.... செஞ்சுரி இல்லை... செஞ்சுரி இல்லை!!!//‍‍
விட‌மாட்டேன்..நான் 'நாட் அவுட்'பேட்ஸ்மேன்தான்..இந்தாங்க‌ ஒரே சாட்ல 'சிக்ஸ்ஸ்' ர‌ன்க‌ள்...
1.ஆள‌ப்பார்த்தால் அழகுபோல‌, வேலையைப்பார்த்தால் இழ‌வுபோல‌!
2.நல்ல‌வ‌ருக்கில்லை நாளும்,கோளும்!
3.அடிக்கிற‌ கைதான் அணைக்கும்!
4.சுடுக‌ண்ட‌ பூனை அடுப்ப‌ண்ட‌ சேராது!
5.அடியாது மாடு பணியாது!
6.கெடுவான் கேடுநினைப்பான்!

இது எப்ப‌டியிருக்கு!...[த‌வ‌றை சுட்டி காட்டிய‌த‌ற்கு ந‌ன்றி!]



‍‍

ராம்.CM said...

நன்றி வால்பையன்! வருகையில் மகிழ்ச்சி!

நன்றி ப்ரேம்! வாழ்த்துகளுக்கும் நன்றி!

ஆதவா said...

6ஸர்!!!

பலே!!

Anonymous said...

கலக்கல் செஞ்சரி... அதுவும் அவுட்டாகாமல்

சின்னப் பையன் said...

:-)))

ராம்.CM said...

நன்றி ஆதவா!

நன்றி கவின்! வருகையில் மகிழ்ச்சி!

நன்றி சின்னப்பையன்! வருகைக்கு நன்றி!

butterfly Surya said...

அருமை.

மேலும் பல ரன்கள் குவிக்க வாழ்த்துகள்.

ராம்.CM said...

நன்றி வண்ணத்துபூச்சியாரே! வருகைக்கும்,வாழ்த்துக்கும் மகிழ்ச்சி! என்னை பின் தொடர்வதற்கு நன்றி!