Friday, April 3, 2009

"தீ" எங்களுக்கு சாதாரணம்!

சென்ற ஞாயிற்றுகிழமை காலை 11 மணியளவில் சென்ட்ரல் ரயில் நிலையத்தின் உள்ளே 'ஹிக்கிம் பாதம்ஸ்' மேலே திடீரென மின்கசிவு ஏற்பட்டது. அது உடனே கண்டுபிடிக்கப்பட்டு தீ விபத்தாக மாறுவதற்குள் கட்டுபடுத்தப்பட்டது. இதற்கிடையில் அது தீ விபத்தாக மாறகூடாது என்பதற்காக தீயணைப்பு துறைக்கு தகவல் கொடுக்கப்பட்டது.
தகவல் கொடுத்து சரியாக நான்கு நிமிடங்கள்கூட இருக்காது. முழு வேகத்துடன் எச்சரிக்கை மணியோசையுடன், மாற்றுபாதைக்காக போர்டிகோ முன் வைக்கப்பட்டிருந்த தடுப்பு சுவரை உடைத்துக்கொண்டு வேகமாக உள்ளே வந்து வண்டி நின்றது. வண்டியின் வேகம் கூட குறையவில்லை அதற்குள் அதனிள் இருந்து வேகவேகமாக வீரர்கள் குதிக்க,இரண்டு நபர்கள் மின் கசிவு ஏற்பட்ட இடத்தை நோக்கி ஓட,மற்ற வீரர்கள் அடுத்த சில விநாடிக்குள் எல்லா உபகரணங்களையும் தயார்செய்து மின்கசிவு ஏற்பட்ட இடம்வரை தண்ணீர் பைப் இணைத்து தண்ணீரை பீய்ச்சீ அடிக்க தயாராகிவிட்டனர்.

முன்னே சென்ற இருவரும் தண்ணீர் தேவையில்லை என்று கூறியதும் அனைத்தையும் எடுத்த வேகத்திலே திரும்ப வைத்தனர்.இது அவர்களுக்கு மட்டுமே சாத்தியமான ஒன்று.வண்டியை ஓட்டி வந்த டிரைவர் ஈரமான யூனிபார்ம் போட்டிருந்தார். 'ஏன் சார் என்னாச்சு?' என்ற‌தற்கு 'டுயூட்டி முடிந்துவிட்டது. அதான் யூனிபார்மை துவைத்து குளித்து கொண்டிருந்தேன். டுயூட்டியில் இருந்த டிரைவர் தலைவலி என்று மாத்திரை வாங்க மெடிக்கல் போயிருந்தார். அதற்குள் போன் வர அப்படியே டிரஸை போட்டுவிட்டு வந்துவிட்டேன். யூனிபார்ம் நனைந்திருந்தால் என்ன? காய்ந்திருந்தால் என்ன? எப்படியும் நனையரதுதானே எங்க வேலை!' என்று நகைத்தவாறே வண்டியை நகர்த்தினார்.


இவர்களிடம் எனக்கு பிடித்தது; தீ என்பது மட்டும்தான் குறிக்கோளே தவிர அதற்கிடையில் இருந்த போக்குவரத்து நெரிசல், தடுப்பு சுவர், இவர்களை வரவேற்க நிற்கும் ஊழியர்கள்,இவர்களிடம் சம்பவத்தை விளக்க நிற்கும் அதிகாரிகள், வேடிக்கை பார்க்கவந்து இடஞ்சல் செய்யும் பொதுமக்கள் போன்றவர்கள் அல்ல. இவர்கள் அனைவரை பற்றியும் சிறிதள‌வுகூட தனது எண்ணங்களில் இடம் கொடுக்காமல் வேகமாக செயல்பட்டது.
இவர்களுக்காக வருந்துவது; தீயணைப்புக்கு மட்டுமல்லாமல் அனைத்துவிதமான மீட்பு பணிக்காகவும் பயன்படுத்தப்படும் இவர்களின் சம்பளவிகிதம் மற்ற யூனிபார்முகளோடு ஒப்பிட்டால் மிகமிக குறைவு என்பதுமட்டும் மனதிற்கு வருத்தமளிக்கிறது.


.

22 comments:

sakthi said...

இவர்களின் சம்பளவிகிதம் மற்ற யூனிபார்முகளோடு ஒப்பிட்டால் மிகமிக குறைவு என்பதுமட்டும் மனதிற்கு வருத்தமளிக்கிறது.

வருத்தமான விடயம் தான்

sakthi said...

எப்படியும் நனையரதுதானே எங்க வேலை!' என்று நகைத்தவாறே வண்டியை நகர்த்தினார்.

nijam

malar said...

மற்ற நாடுகளை காட்டிலும் நம்ம நாட்டில் இந்த துறையை சார்ந்தவர்களுக்கு சம்பள விஹிதம் ரொம்ப குரைவே அரசாங்கம் இதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் .எவ்வளவு அரசியல் வாதிகள் ஊழலிலும் மக்கள் வரிபணத்திலும் வாழ்கிறார்கள் இப்படிபட்ட வர்களுக்கு சம்பளத்தை உயர்த்தி கொடுத்தால் என்ன

ச.பிரேம்குமார் said...

விரைவாக செயல்படும் அவர்களுக்கு வணக்கங்கள்

சி தயாளன் said...

உண்மைதான்

உமா said...

உங்கள் பதிவுகள் சீருடை பணியாளர்கள் மேல் மரியாதையை ஏற்படுத்துகிறது.நல்ல பதிவு. வாழ்த்துக்கள்.

கார்த்திகைப் பாண்டியன் said...

அருமையான பதிவு ராம்.. வாழ்த்துக்கள்..

நிகழ்காலத்தில்... said...

\\இவர்கள் அனைவரை பற்றியும் சிறிதள‌வுகூட தனது எண்ணங்களில் இடம் கொடுக்காமல் வேகமாக செயல்பட்டது.\\

சரியான முறையில் எடுத்துச் சொல்லி
இருக்கிறீர்கள்... வாழ்த்துக்கள்..

ஆ.ஞானசேகரன் said...

யூ//னிபார்ம் நனைந்திருந்தால் என்ன? காய்ந்திருந்தால் என்ன? எப்படியும் நனையரதுதானே எங்க வேலை!' என்று நகைத்தவாறே வண்டியை நகர்த்தினார். //

அய்யோ என்னை கனப்படுத்தியது

ஆ.ஞானசேகரன் said...

//இவர்களின் சம்பளவிகிதம் மற்ற யூனிபார்முகளோடு ஒப்பிட்டால் மிகமிக குறைவு என்பதுமட்டும் மனதிற்கு வருத்தமளிக்கிறது.//

எனக்கும் அதே வருத்தம் உள்ளது ராம்..

ஆ.ஞானசேகரன் said...

நல்ல பகிர்வுகளை தருகின்றீர்கள்

gayathri said...

nalla pathivunga anna

ராம்.CM said...

நன்றி சக்தி! வருகையில் மகிழ்ச்சி! வாழ்த்துக்கு நன்றி.

நன்றி மலர்! முதன்முதலாக வருகிறீர்கள். மகிழ்ச்சியும்,நன்றியும்!


நன்றி ப்ரேம்!

நன்றி டொன்லீ!

நன்றி உமா! வருகையில் மகிழ்ச்சி!

நன்றி கார்த்திகைப்பாண்டியன்!

நன்றி அறிவே தெய்வம்! வருகையில் ஆனந்தம்!

நன்றி ஆ.ஞானசேகரன்! வாழ்த்துக்கும் நன்றி!

நன்றி காயத்ரி! வருகையில் மகிழ்ச்சி!

Pradeep said...

Good one!!!

Deepa said...

மிகவும் நல்ல பதிவு ராம். நீங்கள் கண்டு நெகிழ்ந்த சம்பவத்தை அப்படியே கண் முன் நிறித்தி விட்டீர்கள்.

சென்ஷி said...

நல்ல பதிவு.. பகிர்வுக்கு நன்றிகள்..

ஆதவா said...

முன்பு சல்யூட் அடிக்கவைத்த பதிவு இப்போதும் சல்யூட் அடிக்க வைக்கிறது.

தீயணைப்பின் முக்கியத்தை பலமுறை உணர்ந்திருக்கிறேன்.

அருமையான பதிவு!!!

சொல்லரசன் said...

//போக்குவரத்து நெரிசல், தடுப்பு சுவர், இவர்களை வரவேற்க நிற்கும் ஊழியர்கள்,இவர்களிடம் சம்பவத்தை விளக்க நிற்கும் அதிகாரிகள், வேடிக்கை பார்க்கவந்து இடஞ்சல் செய்யும் பொதுமக்கள் போன்றவர்கள்//

பெரும்பாலும் இவர்களால்தான் அவர்களுக்கு இடைச்சல்.

நல்ல பதிவு
சம்பளம் குறைவு என்பதும் வருத்தம்தான்.

Thamira said...

'சல்யூட்', 'காசு கொடுப்பதாக இருந்தால்' போன்ற தரமான பதிவுகளின் வரிசையில் இதையும் சேர்க்கலாம். துறை சார்ந்த விஷயங்களை லாவகமாக சொல்கிறீர்கள்.. வாழ்த்துகள் ராம்.! (கவிதை என்ற பெயரில் பயமுறுத்துவதைக் குறைத்துக்கொண்டால் நன்றாக இருக்கும்)

ராம்.CM said...

நன்றி ப்ரதீப்! வருகையில் மகிழ்ச்சி!

நன்றி தீபா! வருகையிலும் வாழ்த்திலும் ஆனந்தம்!

நன்றி சென்ஷி! நீண்ட நாட்களுக்குபிறகு வருகை. மகிழ்ச்சி!

நன்றி ஆதவா! வாழ்த்துக்கு மகிழ்ச்சி!

நன்றி சொல்லரசன்! வருகைக்கு மகிழ்ச்சி!

நன்றி ஆதிமூலகிருஷ்ணன்!கவிதையை குறைத்துகொள்கிறேன்......

Unknown said...

நல்ல பதிவு ராம்.அவர்களுக்கு பணிவான வணக்கங்கள்.

ராம்.CM said...

நன்றி கிருஷ்ணபிரபு! முதல்முதலாக வந்துள்ளீர்கள். மகிழ்ச்சி!