Monday, April 13, 2009

வாழ்க்கையில் முன்னேற..

இது போன்ற விளம்பரங்களை இரயில், பஸ் மற்றும் பல இடங்களில் பார்த்திருப்பீர்கள். இந்த விளம்பரத்தை பார்த்த ஒரு செல்வி என்ற‌ பெண் அந்த எண்ணுக்கு அழைக்க, அவர் 'அம்பத்தூர் பஸ் நிலையம் வாருங்கள், நான் அங்கு காத்திருப்பேன்' என்று கூறினார்.செல்வியும் அங்கு சென்றார். சிறிது நேரத்தில் போனில் பேசிய அந்நபர் பஸ் நிலையத்திற்கு காரில் வந்து செல்வியிடம் 'வாங்க, ஆபிஸ் பக்கத்தில்தான் போகலாம்' என்று கூற செல்வியும் காரில் ஏறி அலுவலகம் சென்றது. இரண்டு அறைகள் கொண்ட அலுவலகத்தில் முதல் அறையில் செல்வியை உட்காரவைத்து விட்டு அந்நபர் உள்ளே சென்றார். சிறிது நேரத்தில் வெளியே வந்து செல்வியிடம் ஒரு ஜூஸை கொடுத்து குடிக்க சொல்ல இவரும் குடித்தார். அலுவலகத்தில் வேறு யாரும் இல்லைபோல என்று செல்வி யோசித்துகொண்டிருக்கும்போதே மயங்கினார். இதை ஓரத்தில் இருந்து கவனித்துகொண்டிருந்த அந்நபர் வெளியே வந்து செல்வியை தூக்கிகொண்டு உள்ளே சென்று கட்டிலில் போட்டுவிட்டு கதவை அடைக்க வந்தவருக்கு அதிர்ச்சி!...
வாசலில் காக்கிசட்டை அணிந்த கும்பல்... திகைப்பில் திரும்பி பார்க்க செல்வி எழுந்துநின்று அதிகாரிகளுக்கு 'சல்யூட்'அடித்தார். என்ன செய்வதென்று பயத்தில் சுற்றி முற்றிப் பார்க்க போலீஸ் கும்பலுக்கு நடுவே ஒரு பெண் நிற்பது இவண் கண்ணில் பட்டது. அவளை உற்று பார்க்க இவனுக்குள் ஒரு 'ப்ளாஸ்பேக்' ஓடியது. சிறிது நட்களுக்கு முன் இதேபோல் அப்பெண்ணை அழைத்துவந்து களங்கபடுத்தி அதை வீடியோவும் எடுத்துவைத்து கொண்டு பயமுறுத்தி பலமுறை தன் அலுவலகத்திற்கு வரவழைத்து கொடுமைப்படுத்தியது ஞாபகத்திற்கு வர 'ப்ளாஸ்பேக்'முடிய...

காவல்நிலையம்.
காக்கி உடை, 'நல்லபடியாக‌ கவனித்ததில்' தான் இதற்கு முன் வயது வித்தியாசம் பார்க்காமல் பலபெண்களிடம் இதுபோன்று இருந்ததையும், அதன் வீடியோ படங்களையும் தர ஒப்புக்கொண்டான். அதே நேரத்தில் ஆண்கள் வேலை தேடி வந்தால் முகவரி வாங்கி வைத்து கொண்டு 'நாங்கள் திரும்ப அழைக்கிறோம்' என்று அனுப்பி விடுவானாம். தனது குற்றங்களை ஒப்பு கொண்ட இவன் தற்போது புழலில் புழுங்கிக்கொண்டிருக்கிறான்.

நாட்டில் வேலையில்லா திண்டாட்ட‌ங்க‌ளை த‌னிம‌னித‌ன் ஒருவ‌ன் ப‌ய‌ன்ப‌டுத்திய‌ வித‌த்தை க‌ண்டு வ‌ருத்த‌ப‌ட‌வேண்டும். அதே நேர‌த்தில் அவ‌னை அவ‌ன் வ‌ழியிலேயே சென்று ம‌ட‌க்கிய‌ ந‌ம் த‌மிழ்நாடு காவ‌ல்துறையின் த‌ந்திர‌த்தை பாராட்டியே தீரவேண்டும்.

குறிப்பு: சில‌ நாட்க‌ளுக்குமுன் ந‌ட‌ந்து ப‌த்திரிக்கையில் வெளியான‌ உண்மை ச‌ம்ப‌வ‌ம் இது. செல்வி என்ற பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

.

29 comments:

பிரேம்குமார் said...

நல்ல பதிவு ராம். Exploitation என்பது நம் நாட்டில் மிக சாதாரணமாகிவிட்டது :(

இது போன்று விளம்பரங்களை பார்க்கும் போது, ஒன்று இது Marketing தொழிலாக இருக்கும் என்றோ அல்லது நிஜவாகவே இப்போதெல்லாம் நிறைய வேலை வாய்ப்புகள் இருக்கின்றனவோ என்று நினைத்திருக்கிறேன்.

இப்படியும் கொடுமை நடக்கும் என்று அறிய தந்தமைக்கு நன்றி ராம்

ஆ.ஞானசேகரன் said...

இப்படி பொய்யான தகவல்களை நம்பி ஏமாற்ற பட்டவர்களில் ஒரு சிலரின் தகவல்தான் தெரியவருகின்றது. மனதிற்குள் புழுங்கியுள்ளவர்கள் அதிகம் என்றே நினைக்கின்றேன்.. நாமும் கொஞ்சம் முன் எச்சரிகையாக இருக்க வேண்டும் என்பது உங்கள் பதிவில் புரிகின்றது... நல்ல பகிர்வுக்கு நன்றி நண்பரே....

ஆ.ஞானசேகரன் said...

பெண்கள் இதுபோன்ற சமயங்களில் துணையுடன் செல்வது நல்லது..

நட்புடன் ஜமால் said...

ரொம்ப சாக்கிரதையா இருக்கனுமுன்னு இதப்பார்த்தாவது உணரனும்

நல்ல பதிவுங்க.

கோவி.கண்ணன் said...

//நாட்டில் வேலையில்லா திண்டாட்ட‌ங்க‌ளை த‌னிம‌னித‌ன் ஒருவ‌ன் ப‌ய‌ன்ப‌டுத்திய‌ வித‌த்தை க‌ண்டு //

அவனை செயிலில் போட்டது போதாது...'மைனர் குஞ்சை சுட்டு இருக்கலாம்' அது இல்லாவிடில் இந்த மாதிரி ஆளுங்களுக்கு காசு ஆசையே வராது

அது ஒரு கனாக் காலம் said...

என் கவுன்டரில், குஞ்சுக்கு பதில் நெஞ்சுல சுட்டாலும் பரவாயில்லை

sakthi said...

த‌னிம‌னித‌ன் ஒருவ‌ன் ப‌ய‌ன்ப‌டுத்திய‌ வித‌த்தை க‌ண்டு வ‌ருத்த‌ப‌ட‌வேண்டும். அதே நேர‌த்தில் அவ‌னை அவ‌ன் வ‌ழியிலேயே சென்று ம‌ட‌க்கிய‌ ந‌ம் த‌மிழ்நாடு காவ‌ல்துறையின் த‌ந்திர‌த்தை பாராட்டியே தீரவேண்டும்.
kandipaga paratta vendum

parattukal

கார்த்திகைப் பாண்டியன் said...

இந்தக் கொடுமைகள் அங்கங்கே பரவலாக நடந்துகொண்டுதான் இருக்கிறது நண்பா.. மக்களை எச்சரிக்கை செய்யும் நல்ல பதிவு.. வாழ்த்துக்கள்..

அன்புடன் அருணா said...

அச்சச்சோ!!!!
:((
அன்புடன் அருணா

விஷ்ணு. said...

//நாட்டில் வேலையில்லா திண்டாட்ட‌ங்க‌ளை த‌னிம‌னித‌ன் ஒருவ‌ன் ப‌ய‌ன்ப‌டுத்திய‌ வித‌த்தை க‌ண்டு வ‌ருத்த‌ப‌ட‌வேண்டும். அதே நேர‌த்தில் அவ‌னை அவ‌ன் வ‌ழியிலேயே சென்று ம‌ட‌க்கிய‌ ந‌ம் த‌மிழ்நாடு காவ‌ல்துறையின் த‌ந்திர‌த்தை பாராட்டியே தீரவேண்டும்.//

நல்ல பதிவு ராம். வேலை இல்லாத திண்ணாட்டத்தில எப்படியாவது சுயகால்களில் நிற்க வேண்டிய கட்டாயத்தில இது போன்ற விளம்பரங்களை பார்த்து அங்காவது விடிவு கிடைக்குமா என்று தான் இளைய சமுதாயம் சிக்கி தவிக்கிறது.
ஒரு முறை என் நன்பனும் இதே போன்ற விளம்பரத்தை பார்த்து சென்றிருக்கிறான் அவர்கள் 5000 முன்பணம் கேட்டார்கள். சீ சீ இந்த பழம் புளிக்கும் என்று வந்துவிட்டான்.

சொல்லரசன் said...

//நாட்டில் வேலையில்லா திண்டாட்ட‌ங்க‌ளை த‌னிம‌னித‌ன் ஒருவ‌ன் ப‌ய‌ன்ப‌டுத்திய‌ வித‌த்தை க‌ண்டு வ‌ருத்த‌ப‌ட‌வேண்டும். //

தனிமனிதன் மட்டும் இல்லாமல் ஒரு கூட்டமே உள்ளது.
இவர்களை களைஎடுக்க காவல்துறை, புகாரின் போரில் மட்டும் இல்லாமல், இளைஞர்கள் நலன் கருதி தனி முயற்சி எடுக்கவேண்டும்.

வால்பையன் said...

என்ன கொடுமை சார் இது!

Rajeswari said...

உஷாரா இருக்கனும்னு சொல்லுங்க...

’டொன்’ லீ said...

அடடா....

ஆதவா said...

இதுபோன்ற விளம்ப்ரங்களை நான் எப்போதும் நம்புவதேயில்லை. பாவம் பெண்கள்!!!! முதலில் யார் கூப்பிட்டாலும் தனியாகச் செல்லாதீர்கள்!!!

ஆதிமூலகிருஷ்ணன் said...

விழிப்புணர்வுப் பதிவு..

ஆதிமூலகிருஷ்ணன் said...

வாழ்த்துகள்.!

Pradeep said...

நல்ல பதிவு. ஏமாற்றுபவர்கள் இருது கொண்டு தான் இருக்கிறார்கள்.

Anonymous said...

நல்ல பதிவு!

gayathri said...

த‌னிம‌னித‌ன் ஒருவ‌ன் ப‌ய‌ன்ப‌டுத்திய‌ வித‌த்தை க‌ண்டு வ‌ருத்த‌ப‌ட‌வேண்டும். அதே நேர‌த்தில் அவ‌னை அவ‌ன் வ‌ழியிலேயே சென்று ம‌ட‌க்கிய‌ ந‌ம் த‌மிழ்நாடு காவ‌ல்துறையின் த‌ந்திர‌த்தை பாராட்டியே தீரவேண்டும்.

kandipaga paratta vendum

gayathri said...

naanum ithu ponra velamparathai neraya pathu iruken anna

ராம்.CM said...

நன்றி பிரேம்குமார்! வருகையில் மகிழ்ச்சி!

நன்றி ஆ.ஞானசேகரன்! வாழ்த்துக்கும்.

நன்றி நட்புடன் ஜமால்! வாங்க..வாங்க...

நன்றி கோவி.கண்ணன்! பல நாட்கள் கழிந்தாலும் வந்தமைக்கு மகிழ்ச்சி!

நன்றி அது ஒரு கனாக் காலம் ! முதல்முதலாக வந்துள்ளீர்கள்,மகிழ்ச்சி!

நன்றி சக்தி! வரவேற்கிறேன்.

நன்றி கார்த்திகைப்பாண்டியன்! வருகையில் ஆனந்தம்!

நன்றி அன்புடன் அருணா! வருகையில் மகிழ்ச்சி!

நன்றி விஷ்ணு! வாழ்த்துக்கு மகிழ்ச்சி!

வாங்க சொல்லரசன்!

நன்றி வால்பையன்! வருகையில் மகிழ்ச்சி!

நன்றி ராஜேஸ்வரி! வாங்க..வாங்க..

நன்றி ’டொன்’ லீ! வரவேற்கிறேன்.

நன்றி ஆதவா!

நன்றி ஆதிமூலகிருஷ்ணன்!

நன்றி ப்ரதீப்!

நன்றி கவின் !

நன்றி காயத்ரி!வருகையில் ஆனந்தம்.

Deepa said...

நல்ல பதிவு. காவல்துறையினரின் செயல் பாராட்டத்தக்கது.

ஹூம், பெண்களுக்குத் தான் எத்தனை வழிகளில் ஆபத்து வருகிறது பாருங்கள்.

Anonymous said...

நல்ல பதிவு ராம்.

No lunch is free ன்னு ஆங்கிலத்துல சொல்லுவாங்க.

காவல்துறை பாரட்டப்படவேண்டும்.

"அகநாழிகை" said...

நண்பா, விழிப்புணர்வுள்ள பதிவினை எழுதியிருக்கிறீர்கள்.
சமுக அக்கறையுடன் பதிவுகளை தொடர வாழ்த்துக்கள்.

- “அகநாழிகை“ பொன். வாசுதேவன்

Anonymous said...

கிணற்று தவளையாக பெண்கள் உள்ளவரை இப்படிப்பட்ட எத்தர்களிடம் ஏமாந்து கொண்டுதான் இருப்பார்கள்...எச்சரிக்கை தகவல் பயனுள்ளதாக இருக்கும்...மேலும் தொடர விழைகிறேன்....

ராம்.CM said...

நன்றி தீபா!வருகையில் மகிழ்ச்சி.

நன்றி வடகரை வேலன்! முதல்முதலாக வருகிறீர்கள்.மகிழ்வோடு வரவேற்கிறேன்.

நன்றி அகநாழிகை! வாழ்த்துக்களுக்கும்,என்னை பின் தொடர்வதற்கும் மனமார்ந்த நன்றி!

நன்றி தமிழரசி! முதல்முதலாக வருகிறீர்கள், மகிழ்ச்சி!

SurveySan said...

ஜூப்பர்.

goma said...

எந்தபுற்றில் எந்த பாம்பு இருக்குமோ என்று யோசிக்க வைக்கிறது நீங்கள் எழுதிய உண்மைச் சம்பவம்.
பெண்களை உஷார் படுத்தும் பதிவு .