Saturday, December 20, 2008

சாம்பாரும் அவளின் கைமணமும்!

விசயத்திற்கு முன்னால் ஒரு சின்ன சமையல் குறிப்பை பார்த்துவிடலாம். முதலில் அடுப்பை பற்றவைத்து பாத்திரத்தை வைக்கவேண்டும்.வெட்டிவைத்த வெங்காயம் சிறிது,வெண்டைக்காய் சிறிது போட்டு வதக்கவேண்டும்.வதங்கியபின்னர் அதில் புளிகரைசலை ஊற்றி நறுக்கிவைத்த காய்கறிகளைப் போட்டு கொதிக்கவிடவேண்டும். கொதித்தவுடன், வெங்காயம்,தேங்காய்,சீரகம் போட்டு மிக்ஸியிலரைத்த கலவையை அதனுடன் சேர்க்கவேண்டும். பிறகு ஏற்கனவே தயார்நிலையில் உள்ள வேகவைத்த பருப்பை கடைந்து இதனுடன் சேர்த்து சிறிது மிளகாய்தூள்,மஞ்சள்தூள்,தேவையான அளவு உப்பு சேர்த்து நன்றாக கொதிக்கவிடவேண்டும்.கொதித்தபிறகு கருவேப்பிலை,கொத்தமல்லிஇலை போட்டு இறக்கிவிடவும். ' சூப்பரான சாம்பார் ரெடி!'.

இது எல்லோருக்கும் தெரியும். ஆனால்.. இதில் 'எக்ஸ்ராவாக' ஏதோ ஒன்று இருந்தால்தான் சாப்பிடவே முடிகிறது. சமையல் செய்வது என்றால் எனக்கு ரொம்ப பிடிக்கும். வாரத்தின் ஏழு நாட்களும் சாம்பார் என்றாலும் சளைக்காமல் சாப்பிடுவேன். 25ஆண்டுகளூக்குமேலாக என் அம்மா செய்த சாம்பார்தான் எனை வளர்த்தது. மூன்று ஆண்டுகளாக சென்னையில் நானும் தனியாக இருக்கும்போது சமைத்திருக்கிறேன். ஒரு தடவைகூட நான் எதிர்பார்த்த டேஸ்ட் இருந்ததில்லை.

இப்போது "என்னவள்" வந்த பிறகு எனக்கு கிடைத்தது....நான் எதிபார்த்த அந்த எழுதமுடியாத ஒரு தனிருசி!. அதை சாப்பிட்டால் மட்டும்தான் உணரமுடியும். எப்படி வைக்கிறாய்? என்று அவளிடம் கேட்டால்.. மேலே கூற‌ப்பட்டுள்ளதை வார்த்தைபிறழாமல் சொல்கிறாள். நானே ஒரு நாள்ஒரு கை பார்த்துவிடலாம் என்று அவளை அருகில் வைத்து கொண்டே, அவள் செய்முறை சொல்ல சொல்ல நான் சாம்பார் வைத்தேன். சே.. அதிலும் இல்லை அந்த டேஸ்ட். கற்று கொடுத்தது 'அம்மா' என்றுதானே சொன்னாள்? என்று ஒரு நாள் ஊருக்கு சென்றபோது எனது மாமியாரை சாம்பார் வைத்தபோது கவனித்தேன்.. அவர்களும் அதே செய்முறையில் வைத்தார்கள். ஆனால், அங்கும் ஏதோ மிஸ்ஸிங்...

உன்னிடம் மட்டும் எப்படி அவ்வளவு டேஸ்ட் என்று அவளிடம் கேட்டால்... புன்னகையை பதிலாக தருகிறாள்.

7 comments:

Anonymous said...

Hi,

That's your part ;)

:-)
Insurance Agent

Anonymous said...

அவளின் கை பக்குவத்துடன் அவள் மனமும் , நிறைந்து இருக்கிறது .........கண்ணே உன் கையால் கஞ்சி தந்தாலும் கற்கண்டு போல ........

ச.பிரேம்குமார் said...

சாம்பாரோடு கலந்திருப்பது காதலாகவும் இருக்கும் நண்பரே :)
அதான் சிறப்புச்சுவை தந்திருக்கும்

ராம்.CM said...

நன்றி bendz.! நன்றி nilaamathy.! நன்றி ப்ரேம்.!..

savi3 said...

het really gud kavithai...really nee kidaika unnoda wife romba romba koodutu vaithirukanga....mmm great man.....

ஆ.சுதா said...

சாம்பாரில் அன்பு மனக்கிரது

ராம்.CM said...

நன்றி சாவி!





நன்றி ஆ.முத்துராமலிங்கம்! வருகைக்கு மகிழ்ச்சி..