மாலை 06.35. பார்க் இரயில் நிலையம்,சென்னை. 06.40.தாம்பரம் வண்டியைப் பிடிப்பதற்காக வேகவேகமாக தண்டவாளத்தைக் கடந்து 2வது நடைமேடைக்கு வந்தேன்.அப்போது அருகில் இருந்த குடிநீர்த்தொட்டி அருகே.. தன்னைத்தானே தலையில் அடித்துக்கொண்டும்,ஏதேதோ பேசிக்கொண்டும் ஒருவர் இருந்தார்.அருகில் சென்றுப்பார்த்தேன்... மனநலம் பாதிக்கப்பட்டு,அரைநிர்வாணமாக,எல்லோராலும் கைவிடப்பட்ட அநாதையாக,பார்ப்பவர்கள் அருவருக்கும் நிலையில் அடுத்தநேர உணவுக்காக பிச்சை எடுக்கக்கூட தெரியாத நிலையில் பரிதாபமாக கிடந்தார். இதே போல எத்தனை இடங்களில்,எத்தனை நபர்கள்.. அரசின் கோடிக்கணக்கான பணமதிப்புடைய ஏராளமான திட்டங்களில்.. இதுபோன்றவர்களையும் சேகரித்து, பாதுகாத்து காப்பகத்தில் சேர்த்து அவர்களின் நலம் பேணினால் என்ன?
மனநலகாப்பகம்,கீழ்ப்பாக்கம்; நவம்பர் மாத இறுதியில்.. நிஷா புயல் சென்னையை புரட்டிஎடுத்த ஓர் நாள்..15 பேர் கொண்ட மனநோயாளிகளின் குழு மாலைநேர நடைப்பயிற்சியில் ஈடுபட்டிருக்கிறது.. உதவியாளர்கள் எங்கோசெல்ல.. அங்கு தேங்கிக்கிடந்த தண்ணீரை 8 மனநோயாளிகள் குடித்துவிட..சிறிதுநேரத்தில் அவர்கள் மயங்கிவிழ..உடனடியாக அவர்கள் அரசுபொதுமருத்துவனையில் சேர்க்கப்பட..சிகிச்சைபலனின்றி பரிதாபமாக 3 மனநோயாளிகள் இறந்துவிட.. மற்றவர்கள் இன்னும் உயிருக்குப் போராடியநிலையில்..
இருக்கும் மனநலகாப்பகங்களின் நிலையே இதுவென்றால், மேற்சொல்லப்பட்டவர்களின் நிலை என்னவாகும்?
Friday, December 12, 2008
Subscribe to:
Post Comments (Atom)

3 comments:
//இருக்கும் மனநலகாப்பகங்களின் நிலையே இதுவென்றால், மேற்சொல்லப்பட்டவர்களின் நிலை என்னவாகும்?
//
ஏர்வாடியில் நடந்த துயரத்தை கூட இன்னும் பலர் மறந்திருக்க வாய்ப்பில்லை :(
நன்றி! ப்ரேம்.தங்கள் வருகைக்கு மகிழ்ச்சி!..
உண்மை தான்...
மனம் கலங்குகிறது..
( அவர்களை பார்க்கும் போதெல்லாம்.. ஆஅனால் ஒன்னும் செய்யாமல் அந்த இடத்தை விட்டு செல்லும் போது கையாலாகத்தனம் முகத்தில் அறைகிறது ..)
Post a Comment