Thursday, December 11, 2008

கருவின் வார்த்தைக‌ள்..!

எப்பொழுதும் ஓடி ஆடி சுற்றித் திரிபவள்.. இப்பொழுது எங்கும் போகாமல் இருக்கிறாள்.. வேகமாக நடக்ககூட யோசிக்கிறாள்.. படி ஏறி இறங்ககூட பயப்படுகிறாள்.. _முதல் மாதம்.

நினைத்ததைகூட சாப்பிட முடியவில்லை..தண்ணீர் கூட குடலைப்பிடுங்கிகொண்டு வெளியே வருகிறது.. _இரண்டாம் மாதம்.

வெளியே எங்கும் செல்ல முடியவில்லை..அசையக்கூட முடியவில்லை.. _மூன்றாம் மாதம்.

எந்த சுவையும் பிடிப்பதில்லை..எந்த மணமும் ஏற்பதில்லை.. _நான்காம் மாதம்.

வயிறுபெரிதாக பெரிதாக எந்நேரமும் ஒரு குறுகுறுப்பு.. அதனால் யாரிடமும் சிரித்து பேச முடிவதில்லை.. _ஐந்தாம் மாதம்.

நெளிவுகள்,அசைவுகளால் யதார்த்தமாக இருக்கமுடியவில்லை.. ஆக தூங்கவும் முடியவில்லை.. _ஆறாம் மாதம்.

திரும்பிபடுப்பதற்குகூட ஒவ்வொருமுறையும் எழுந்திருக்க முடியவில்லை.. _ஏழாம் மாதம்.

வ‌யிற்றின் எடை அதிகமாக, கால்களின் வீக்கம் குறையவில்லை.. முகத்தில் களைப்பு.. _எட்டாம் மாதம்.

நடைபயிற்சினாலும், வேலைசெய்வதனாலும் சோர்வு குறைந்தபாடில்லை.. _ஒன்பதாம் மாதம்.

கவலை படாதே..எல்லாவற்றையும் சரி செய்ய‌ இன்னும் சில தினங்களில்... உன்னைப்போலவே முகத்தோடும், உன் அதே புன்னைகையோடும் உன் கைகளில் நானிருப்பேன்..!

5 comments:

Thamira said...

இது நல்லா பண்ணிருக்கீங்க.. அப்படியே பிக்கப் பண்ணிக்கொண்டு போகவும். விடாமுயற்சியே வெற்றிதரும். சித்திரமும் கைப்பழக்கம். வாழ்த்துகள் ராம்.!

ராம்.CM said...

நன்றி! தாமிரா...

Anonymous said...

வாழ்த்துகள் ராம்.!

ச.பிரேம்குமார் said...

வாழ்த்துக்கள் ராம், சீக்கிரமே குட்டிப்பாப்பா உங்கள் வீட்டில் தவழட்டும் :)

பார்க்கும் ஆளுக்கு தான் அவர்கள் சிரமப்படுவது போலத்தான் தெரியும். ஆனால் கருவுற்ற காலத்தின் ஒவ்வொரு நொடியையும் ஒரு தாய் அனுபவித்து வாழ்கிறாள் :)

ராம்.CM said...

நன்றி! ப்ரேம்.தங்கள் வருகைக்கு மகிழ்ச்சி!..தங்கள் வாழ்த்துக்காளால் மனதிற்குள் பூரிப்பு.!.