தி.மு; (திருமணத்திற்கு முன்)
அவள்; தானாகவே எப்போது சந்திக்கும் நேரம் வருகிறதோ?. அப்போது சந்திக்கலாம். வேலைதான் முக்கியம். நேரம் கிடைக்கும் போது வாருங்கள். எனக்காக ரிஸ்க் எடுக்க வேண்டாம்.அதுவரை காத்திருக்கிறேன்.!
அவன்; உன்னை பார்க்கணும் போல ஆசையாக உள்ளது!. உன்னை பார்ப்பதுதான் முக்கியம். வேலை இரண்டாவது. உனக்காக ரிஸ்க் எடுக்காமல் யாருக்காக எடுக்க போகிறேன்.!
தி.பி; (திருமணத்திற்கு பின்)
அவள்; என்னாச்சு இவ்வளவு நேரம்..? அக்கறையே கிடையாதா? ஒருத்தி இருக்காங்கிறது ஞாபகம் இருக்கிறதா? வேலை வேலைன்னு இருக்காதிங்க.. எவ்வளவு நேரம் காத்திருப்பது?..
அவன்; இல்லமா? கொஞ்சம் வேலை அதிகம்... வேலையை முடித்துவிட்டு வருகிறேன். ப்ளிஸ்டாமா! உடனே வந்தா பெரிய ரிஸ்க்கா ஆயிடும். ப்ளிஸ்மா!..
காதலில் காத்திருப்பதும், கல்யாணத்தில் சேர்ந்திருப்பதும், பெண்களுக்கு பிடிக்கும். காதலில் கெஞ்சுவதும், கல்யாணத்தில் கொஞ்சுவதும், ஆண்களுக்கு பிடிக்கும். காலசூழ்நிலைக்கு ஏற்ப அவர்களின் வார்த்தைகள் மாறியதே தவிற.. இன்னும் மாறவில்லை அவர்கள் காதல்!
நித்தி என்பது வெறும் சாமியார் அல்ல
1 year ago
2 comments:
//காலசூழ்நிலைக்கு ஏற்ப அவர்களின் வார்த்தைகள் மாறியதே தவிற.. இன்னும் மாறவில்லை அவர்கள் காதல்!//
உண்மை தான் நண்பரே :)
ஆனால் சில சமயம் இந்த சின்ன ஊடல் பெரும் பிரச்சனையாக வெடிக்கக்கூடிய அளவுக்கு பெரிதாகலாம்.
அதனால் worklife - personal life balanceஐ முதலில் இருந்ததே தன் துணைக்கு புரியவைத்து விட்டால் நல்லது :)
நன்றி! ப்ரேம்.
Post a Comment