Thursday, April 30, 2009

வாரம் ஒரு முறைதான்..!

அன்பார்ந்த என் பதிவுலக நண்பர்களுக்காக...

தேர்தல் சூடுபிடிக்க ஆரமித்து விட்டதால் எமது பணியும் சூடுபிடித்து விட்டது. சென்ற வாரங்களிலேயே என் பணியின் பளுவும் அதிகரித்து விட்டது. தினசரி குறைந்தது 12 மணி நேரத்திலிருந்து 18 மணி நேரம் பணி இருப்பதால் மீதமுள்ள நேரங்களில் ஓய்வு எடுக்கவே சரியாக உள்ளது. அதுவும் நான் "அதி தீவிரப்படை" ( கமாண்டோ ) பிரிவில் இருப்பதால் இன்னும் நெருக்கடி அதிகம். இதன் காரணமாக சரிவர வலைப் பதிவுலகிற்கு வர இயல வில்லை. சிலரின் பதிவுகளுக்கு பின்னூட்டங்களும் இட முடிய வில்லை. அதற்காக வருந்துகிறேன். இன்னும் ஒரு மாத காலத்திற்கு இந்த நிலை நீடிக்கும் என நினைக்கிறேன். அதுவரை என் பதிவுலக நண்பர்கள் பொறுத்து கொள்ளவும். ஆனால் எப்படியும் வாரம் ஒரு முறையாவது பதிவுலகிற்கு வந்துவிடுவேன். தற்போது கூட "சென்னையில் இரயில் விபத்து" நடந்த இடத்தில் பாதுகாப்பு பணியில் இருந்துவிட்டு உணவருந்துவதற்காக வீடு திரும்புகிற வழியில் உங்களை சந்திக்கிறேன். சற்று ஓய்வு எடுத்துவிட்டு திரும்ப இரவு பணிக்கு செல்ல வேண்டும். மீண்டும் அடுத்த பதிவில் சந்திக்கும் வரை உங்களிடமிருந்து உத்தரவு வாங்கிக்கிறேன்.


-ராம்.CM.

.

19 comments:

Rajeswari said...

happy holidays..enjoy

வால்பையன் said...

பாருங்க கடமை அழைக்கிறதுன்னு பதிவு போட்டுருக்கிங்க!

ராஜேஸ்வரி வந்து ஹேப்பி ஹாலிடேஸ்னு போட்டு போறாங்க!

என்னாத்த சொல்ல!

தேர்தல் பணின்னு சொல்றிங்க!
எதுக்கும் ஜாக்கிரதையா இருங்க! இங்கே கலவரங்கள் சகஜமா நடக்கும்!

சி தயாளன் said...

தேர்தல் நேர சுவாரசியங்கள் பற்றி ஆறுதலா எழுதுங்கள்...:-))

கார்த்திகைப் பாண்டியன் said...

வேலை கடுமையாக இருக்கும்.. கவனமாக பார்த்துக் கொள்ளுங்கள் ராம்..

சொல்லரசன் said...

இரயில் விபத்தை பற்றி அறிய உங்களை தொடர்பு கொள்ள நினைத்தேன்.
நீங்களே பதிவு போட்டுவிட்டீர்கள் பிறகு பேசுவோம்.

சின்னப் பையன் said...

வேலை கடுமையாக இருக்கும்.. கவனமாக பார்த்துக் கொள்ளுங்கள் ராம்..

Thamira said...

இதுபோன்ற பணியில் இருந்துகொண்டும் வலையுலகில் இயங்குகிறீர்களா?? ஆச்சரியம், வாழ்த்துகள்.!

sakthi said...

அதி தீவிரப்படை" ( கமாண்டோ ) பிரிவில் இருப்பதால் இன்னும் நெருக்கடி அதிகம்.

really u r great anna

sakthi said...

அதுவரை என் பதிவுலக நண்பர்கள் பொறுத்து கொள்ளவும். ஆனால் எப்படியும் வாரம் ஒரு முறையாவது பதிவுலகிற்கு வந்துவிடுவேன்.

kandipa poruthukuvom

ஆதவா said...

மெல்ல வாருங்கள்... பணி முக்கியம்.... காத்திருக்கிறோம்..

ச.பிரேம்குமார் said...

ராம், உங்கள் பணி சிறப்பாக நடந்தேற வாழ்த்துகள். And Take Care

ஆ.சுதா said...

பணி பளுவாக இருக்கும், மெதுவா வாங்க.

Anonymous said...

we appreciate about your sincearity, patience, response....takecare of your health also...

உமா said...

நேர்மையான கமாண்டோ தேர்தல் பணியில் இருப்பது எங்களுக்கெல்லாம் மிகவும் மகிழ்ச்சி.ஜாக்கிரதையாக இருக்கவும்.முடிந்ததும் சுவாரஸ்யமான பதிவுகளிக்காக காத்திருக்கிறோம். உங்கள் பணி சிறப்பாக அமைய வாழ்த்துக்கள்.

gayathri said...

உங்கள் பணி சிறப்பாக அமைய வாழ்த்துக்கள்.

DHANS said...

all the best for your oncoming dangerous job called election.

take care

ராம்.CM said...

எனக்கு வாழ்த்துகூறிய அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றிகள்! பதிவிட நேரமில்லை. ஆதலால் முடிந்தால் பின்னூட்டம் இடுகிறேன் அல்லது ஒருவாரத்திற்கு பிறகு சந்திக்கலாம்.

உமா said...

ஆஹா முடிந்துவிட்டதா தேர்தல். வேலை பளு சிறிது குறைந்திருக்கும். கலவரமாக இருந்ததே எப்படி சமாளித்தீர்கள்.

ஆ.ஞானசேகரன் said...

வணக்கம் ராம்..
உங்களுடன் அலைபேசியில் பேசியது மகிழ்ச்சியடைய செய்கின்றது..

மீண்டும் வந்து தூள் கிளப்புங்க