Saturday, April 25, 2009

பிச்சையா...போடாதீங்க.!

நாம் வீட்டில் இருக்கும் போதும், வெளிசெல்லும் போதும் பிச்சைகாரர்களை காண்பதும் அவர்களுக்கு நம்மால் இயன்றதை கொடுப்பதும் உண்டு. நானும் என் வாழ்நாளில் பலவிதமான பிச்சைகாரர்களை பார்த்து என்னால் இய‌ன்றதை செய்திருக்கிறேன். ஆனால் தற்போது பிச்சை போடுவதை குறைத்து விட்டேன் ( போடுவதே கிடையாது.). இதற்கு சில அனுபவ காரண‌ங்கள் உண்டு. அவற்றின் சில வரிகள்...



தனது ஏழ்மையினால் வாழவழியின்றி பிச்சை எடுப்பவர்கள், தனது ஊனத்தை காரணமாக காட்டி பிச்சை எடுப்பவர்கள், பாடல் பாடுவது, இசைப்பது போன்ற ஏதாவது ஒரு திறமையை காட்டி பிச்சை எடுப்பவர்கள் என்று பல விதமான பிச்சைகாரர்கள் இருக்கிறார்கள். இது போன்று பிச்சை எடுப்பவர்கள் இரயில் நிலையங்களிலும் உண்டு. நீங்களும் பார்த்திருக்க வாய்ப்புண்டு.


பகலில் அப்பாவிகளாக திரியும் இவர்கள் இரவில் மாறி விடுகிறார்கள். தங்களுக்கு என்று ஒரு இடத்தை தேர்ந்தெடுத்து அங்கு எல்லோரும் ஒன்று கூடி "தண்ணி" அடித்து விட்டு சத்தம் போட்டுகொண்டும், ஏதாவது கதை பேசிக்கொண்டும், பாட்டு, கூத்து என்று அந்த இடத்தையே இரண்டாக்கி விடுகிறார்கள். சில சமயங்களில் இச்சம்பவம் இரயில் நிலையங்களிலும் அரங்கேறிவிடுகிறது. இதை கட்டுபடுத்துவதற்காக சென்றால் "பகலில் பாவமாக திரியும் இவர்களா இப்படி?..." என்று எங்களை அதிர்ச்சியடைய செய்கின்றனர். இதில் வருத்தமான விஷயம் என்னவென்றால் இவர்களுடன் பெண்களும் சேர்ந்து "தண்ணிய‌டிப்பது"தான்.





பகலில் பிச்சையெடுப்பவர்களில் 90 சதவீதத்தினர் இரவில் இப்படி மாறிவிடுவது என் அனுபவ உண்மை. 'நாள் ஒன்றுக்கு குறைந்தது 500 ரூபாய்க்கு மேல் வருமானம், வாழ்வில் எந்த பொறுப்போ, அக்கறையோ கிடையாது, நாட்களை நகர்த்தினால் மட்டும் போதும், இவர்களை போன்றவர்கள்தான் இவர்களது நண்பர்களும், இவர்களை கட்டுப்படுத்துவதற்கு யாரும் கிடையாது' இதனால் இவர்களுக்கு இந்த நிலை. அதேபோல்



' உழைத்து சாப்பிடவேண்டும் என்ற எண்ணம் சிறிதளவு கூட இல்லாமல் வாழ, இவர்களுக்கு உதவுவது நாம் பாவம் என்று கொடுக்கும் காசுதான் காரணம் ' என்பது என் கருத்து.





.

18 comments:

Vishnu - விஷ்ணு said...

// உழைத்து சாப்பிடவேண்டும் என்ற எண்ணம் சிறிதளவு கூட இல்லாமல் வாழ, இவர்களுக்கு உதவுவது நாம் பாவம் என்று கொடுக்கும் காசுதான் காரணம் //

மிகவும் சரியாக சொன்னீர்கள் ராம். ஆனா இந்த மக்களின் வாழ்வாதற்கு நாம் எதாவது செய்யதான் வேண்டும்.
உழைக்கும் வழி செய்து கொடுக்கலாம்.
ஒருவேளை வேலை செய்ய எண்ணங்கள் இல்லையெனில் நல்ல மனோதத்துவ நிபுணர்களிடம் காட்டலாம். தனி மனிதன் இவ்வாறு செய்ய முடியாது, அரசு தான் இதை செய்ய முடியும். இந்த மாதிரி திட்டங்கள் ஏற்கனவே உள்ளன என்றால் அவற்றை கடினபடுத்த வேண்டும்.

ஆ.ஞானசேகரன் said...

நண்பா நீங்கள் கூறுவது முற்றிலும் சரியே! ஆனாலும் இந்த நிலையை கட்டுப்படுத்த அரசுதான் நடவடிக்கை எடுக்க வேண்டும்.அதேபோல் காவல்காரர்களும் (மன்னிக்கவும் எல்லோரையும் சொல்லவில்லை) இவற்றிக்கு உடந்தையாக இருப்பது கேவலமான ஒரு விடயம். கோவில்கள் அரசுக்கு சொந்தமானது,அதை நிர்வகிக்கும் அரசு அங்கு பிச்சை எடுக்கும் பிச்சைக்காரர்களை கண்டுகொள்ளாதது ஏன்? எனக்கு அவர்களுக்கு காசு கொடுக்க பயம் உண்டு ஏன்னில் திருட்டுக்கு இவர்கள்தான் தூதுவர்களாகவும் இருப்பதும் ஒன்று..... உண்மையில் அரசால் ஒழுங்குப்படுத்த வேண்டிய ஒரு விடயம். தனிமனிதனால் ஒன்றும் செய்ய முடியாது.... பகிர்வுக்கு நன்றி நண்பா

ஆதவா said...

ஒருமுறை எங்கள் ஊரில் எல்லா பிச்சைக்காரர்களையும் ஒரு திருமண மண்டபத்தில் அடைத்து, புது துணி, உணவு, பணம் எல்லாம் கொடுத்து ஒருசிலருக்கு வேலை வாய்ப்பும் கொடுத்தார்கள்... ஆனால் அவர்களில் ஒருவர் கூட அதை நன்கு பயன்படுத்திக் கொள்ளவில்லை...

என் வாழ்வில் நான் ஒரே ஒருத்திக்கு மட்டும் பிச்சையிட்டிருக்கிறேன். அந்த மூதாட்டியின் முடியாமை கண்ட இரக்கம் காரணம்.. அதன்பிறகு யாருக்கும் கொடுத்ததில்லை.... (அந்த மூதாட்டி நான் பிச்சையிட்ட மறு வாரமே இறந்துவிட்டார்)

இரவில் இவர்கள் மனிதர்களை மதிப்பதுமில்லை.. எங்கள் ஊர் பஸ் ஸ்டாண்டில் இப்படித் திரிந்தவர்களிடம் தேவையில்லாமல் வாங்கிக் கட்டியிருக்கிறேன்.

நல்ல பதிவு!!!! சிறந்த பதிவும் !!!

வெற்றி-[க்]-கதிரவன் said...

குழந்தைகளுக்கு கண்டிப்பாக பிட்சை போடவே கூடாது...... வேறுவழி இல்லாமல் பிட்சை கேட்கும் வயதான பெரியவர்களுக்கு பிட்சை போடலாம் என்பது என் கருத்து. அரசாங்கம் சரியா இருந்தா ஏன் இந்த நிலைமை.

கார்த்திகைப் பாண்டியன் said...

எந்த ஒரு நாணயத்திற்கும் இரண்டாவது பக்கம் இருக்கும் நண்பா.. தங்கள் வாழ்வின் புறக்கணிப்பை தணித்துக் கொள்ளும் காரியமாக அவர்க கூத்தடிக்கலாம் அல்லவா.. நான் அவர்கள் செய்வது சரி என்று சொல்லவில்லை.. ஆனால் அவர்களின் நிலைக்கு நாமும், இந்த சமூகமும் தானே காரணம்.. எதுவும் செய்ய முடியாத வயதான மக்கள், உடல் ஊனமுற்றவர்கள் வேறு என்னதான் செய்வார்கள்.. பாவம்..? விடை இல்லா கேள்வி இது..

தீப்பெட்டி said...

///கார்த்திகை பாண்டியன் ,

எந்த ஒரு நாணயத்திற்கும் இரண்டாவது பக்கம் இருக்கும் நண்பா.. தங்கள் வாழ்வின் புறக்கணிப்பை தணித்துக் கொள்ளும் காரியமாக அவர்க கூத்தடிக்கலாம் அல்லவா.. நான் அவர்கள் செய்வது சரி என்று சொல்லவில்லை.. ஆனால் அவர்களின் நிலைக்கு நாமும், இந்த சமூகமும் தானே காரணம்.. எதுவும் செய்ய முடியாத வயதான மக்கள், உடல் ஊனமுற்றவர்கள் வேறு என்னதான் செய்வார்கள்.. பாவம்..? விடை இல்லா கேள்வி இது..///


வழிமொழிகிறேன்..

ச.பிரேம்குமார் said...

அவர்கள் உற்சாகமாக இருப்பதை குறை சொல்லக்கூடாது என்ற போதும், அவர்கள் பல சமயங்களில் சோம்பேறிகளாக இருந்துவிடுகிறார்கள் என்பதும் உண்மை.

சொல்லரசன் said...

கார்த்திகைப் பாண்டியன் said..
//தங்கள் வாழ்வின் புறக்கணிப்பை தணித்துக் கொள்ளும் காரியமாக அவர்க கூத்தடிக்கலாம் அல்லவா..//

இவர்களுக்கு உதவ முன்வந்த தொண்டுநிறுவன‌களை புறக்கனித்து மீண்டும்பிச்சை எடுக்க செல்வது அந்த உற்சாக கூத்தடிப்புதான்.

நல்ல பதிவு ராம்

Rajeswari said...

ஒருமுறை,ஒரு வயதான அம்மாவை,”காப்பகத்துக்கு கொண்டு விடுகிறேன்..பிச்சை எடுத்து கஷ்டப்படவேண்டாம்” என்று கூறினேன்..
அதற்கு அவர்”காசு போட்டா போடும்மா..இல்லாட்டி போய்கிட்டே இரு” என்று கூறிவிட்டார்.அதிலிருந்து
நான் அவர்கள் விசயத்தில் எந்த கொள்கையும் வைத்து கொள்வது இல்லை..போடவேண்டும் என்று தோன்றினால் போடுவேன்..சில நேரங்களில் போடாமலும் கடந்து சென்றிருக்கிறேன்.

sakthi said...

arumaiyana pathivu ram anna

ஆ.சுதா said...

நீங்கள் சொல்லும் விடயம் பெரும்பாலும் உண்மைதான்.
யாசகம் பெருபவர்கள் நகரத்தில் பெரும் பகுதியினர் நீங்கள் சொல்லுவது போலவே நடந்து கொள்கின்றனர்.
தற்போதைய நிலையில் எந்த ஒரு இடத்திலும் உண்மையானவர்களை பார்ப்பது அரிதாகி வருகிறது அதைபோலவே யாசகக்காரர்களிலும்
அது குறைந்து பெருகிவிட்டதோ.

எனக்கு ஒரு அனுபவம் உண்டு 'பிச்சைக் காரனிடம் ஏமாந்ததுதான் இன்றும் அதை பெரும் ஏமாற்றமாக என்னுகிறேன் அதிலிருந்து எல்லோருக்கும் யாசகம் அளிப்பதில்லை வயதானவ்வர்கள் ஊணமுற்றோர்களுக்கு மட்டும் எப்பவாவது சில்லரை இடுவது வழக்கம்

agaviyan said...

உங்களில் பலர் கூறுவதை போல இப்பொழுது யாசகம் உழைக்க மருபவர்களின் தொழிலாகவே மாறிவிட்டது . எனினும் நான் இவர்களை கடக்கும் பொழுது ஏதோ ஒரு குற்ற உணர்ச்சி என்னை பெரிதும் பாதிக்கிறது. நம் சகோதிரர் ஒருவர் பட்டினியாயை கிடக்கும் பொழுது நான் மட்டும் எப்படி பல்சுவை விருந்து உன்ன முடியும், இவர்களின் இந்த நிலைமைக்கு ஏதோ ஒரு வகையில் இந்த சமுதாயைதை சேர்ந்தவன் எனும் முறையில் எனக்கும் பங்கிருக்கின்றது அல்லவே.

நிகழ்காலத்தில்... said...

(சிரமமே இல்லாமல்)பணம் வரவு இது ஒன்றைத்தவிர அவர்கள் பிச்சையெடுக்க எந்த காரணமும் இல்லை.

ஞானசேகரன் கருத்தோடு மாறுபடுகிறேன். எங்கே, இன்றையிலிருந்து ஒருவர்கூட பிச்சையிடுவதில்லை என செயல்படுத்திக் காட்டட்டும்.

எண்ணி மூன்றாவது நாள் அனைவரும் ஓடியே போய்விடுவர்.
மாற்றம் நம்மிடையே வேண்டும்.

ராம்.CM said...

நன்றி விஷ்ணு!

நன்றி ஆ.ஞானசேகரன்!

நன்றி ஆதவா!

நன்றி பித்தன்!

நன்றி கார்த்திகைப் பாண்டியன்!

நன்றி தீப்பெட்டி! முதல்முதலாக வருகிறீர்கள்...மகிழ்ச்சி!

நன்றி பிரேம்குமார்!

நன்றி சொல்லரசன் !

நன்றி ராஜேஸ்வரி!

நன்றி சக்தி!

நன்றி ஆ.முத்துராமலிங்கம்!என்னை பின் தொடர்வதற்கு நன்றி.

நன்றி அகவியன்!

நன்றி அறிவே தெய்வம்!

பின்னூட்டம் எல்லோருக்கும் நன்றி! அதே நேரத்தில் எல்லோருக்கும் நான் இந்த பதிவின் பின்னுட்டத்தை பற்றி சொல்ல நினைப்பதை ஒரே வரியில் "அறிவே தெய்வம்" சொல்லிவிட்டார்கள்.இதுதான் என்னை பொறுத்தவரை உண்மை.

Pradeep said...

நல்ல கருத்து , நல்ல பதிவு .

வாங்கிய காசை வைத்து எவ்வளவுதான் சாப்பிட முடியும். அதனால் தண்ணி அடித்து கூத்து அடிக்கிறார்கள் போல.

வயதானவர்கள் மற்றும் உடல் ஊனமுற்றர்களுக்கு பிச்சை போடுவதில் தப்பு இல்லை என்பது எனது தாழ்மையான கருத்து.

Anonymous said...

உண்மையான கூற்றுதான் நிங்கள் அறிவுரிதியது... நாம் ஏதோ உதவி செய்வதாக நினைத்து செய்கிறோம் ஆனால் இனி பாத்திரம் அறிந்து பிச்சையிடுதல் நல்லது...இதயும் சுட்டிகாட்டியது கொஞ்சம் வியக்கத்தான் செய்கிறது...

gayathri said...

anna orusila pichikarangala nampa ellarum appadi thanirpanganu solla mudiyathulaga anna

vayasanavanga oonamutravanga ivangalam pavamla anna

ராம்.CM said...

நன்றி ப்ரதீப்!

நன்றி தமிழரசி!

நன்றி காயத்ரி!