என் மனைவியின் பிரசவத்திற்காக ஒரு வாரகாலம்
திருநெல்வேலி டவுணில் உள்ள
ஒரு நர்சிங் ஹோமில்(பெயர் வேண்டாமே..) தங்கியிருந்தேன்.
பகல்:
காலை 7 மணிக்கு ஒவ்வொரு அறையாக மருத்துவமனை முழுவதும் 'டெட்டால்' போட்டு சுத்தமாக துடைக்கின்றனர்.
8 மணிக்கு டாக்டர் விசிட் வருகிறார். அவர் வருவதற்கு முன் குறைந்தது இரண்டு முறையாவது நர்ஸ் வந்து "அறையை சுத்தமாக வையுங்கள், துணியை மடித்து வையுங்கள், பாத்திரத்தை ஓரமாக வையுங்கள், 'பேஷண்டோட' அம்மா மட்டும் இருங்க.. மத்தவங்கெல்லாம் வெளியே இருங்க" என்கின்றனர்.
டாக்டர்களும் நல்ல முறையில் செக்கப் செய்து 'ஆறுதல் வார்த்தைகளை' அமைதியாக சொல்லி செல்கின்றனர்.
அடுத்து 12 மணி, 6 மணி என்று விசிட் வருகின்றனர்.
நோயாளிகளுக்கு அவசரம் என்றால்
உடனே வந்து பார்க்கிறார்கள்.
நோயாளிகளுக்கு தேவையான உணவுகளை
அவர்களே தயார் செய்து தருகிறார்கள்.
மருத்துவமனையே சுத்தமாகவும், அமைதியாகவும் இருக்கிறது.
இரவு:
மருத்துவமனையின் முக்கிய மருத்துவர்கள் அனைவரும்
வீட்டிற்கு சென்று விட
இரவு மருத்துவர் ( அவர் பயிற்சி மருத்துவர்) மட்டும் இருக்கிறார்.
8 மணிக்கு கடைசி விசிட்க்கு மட்டும் அவர் வந்து செல்கிறார்.
அவர் விசிட் முடிந்தவுடன் அவருக்கு ஒதுக்கப்பட்ட அறைக்கு செல்கிறார். அதன் பிறகு மருத்துவமனையின் நிலையே வேறு...
நர்சுகள், ஊழியர்கள் அவரவர் வேலையை வேகமாக முடித்துவிட்டு
9 மணிக்குள் ரிசப்சன் ஹாலுக்கு வந்துவிட அனைவரின் கையிலும் சாப்பாட்டுத்தட்டு.
பலகருத்துகளை பரிமாறிக்கொண்டு (கூச்சலிட்டுக்கொண்டு) சாப்பிடுகின்றனர். பிறகு டி.வி யை போட்டு சவுண்ட் அதிகமாக வைத்துக்கொண்டு அனைவரும் டி.வி யுடன் சேர்ந்து கூத்தடிக்கின்றனர்.
குறுகலான சதுரவடிவ கட்டிடம் என்பதால் "டி.வி சவுண்ட்" கட்டிடம் முழுவதும் அதிர்கிறது.
அதிகபட்சமாக இரவு 1.30 மணி வரை ஓடுகிறது.
அது மட்டுமல்லாமல் அனைவரும் ஒன்று சேர்ந்து (நர்ஸ் உடையுடன்)சத்தமிட்டு ஆடுகின்றனர்.
பிறகு அனைவரும் இழுத்துமூடி தூங்குகின்றனர்.
நோயாளிகளுக்கு அவசரம் என்றாலும், டிரிப்ஸ் மாத்துவதற்கு
அழைத்தாலும் 'வருகிறேன்' என்று கூறிவிட்டு தாமதமாக வருகின்றனர். இரண்டுதடவை 'டிரிப்' முடியும் நேரம் நானே அதை நிறுத்திவிட்டு மீண்டும் அவர்களை அழைக்க சென்றுள்ளேன்.
இரவு அவசரத்திற்கு கடைக்கு செல்வதற்கு
கதவை திறப்பதற்கு ஊழியரை எழுப்பினால்,
'முடியாது. காலையில் வாங்கிக்கொள்ளவும்' என்று விரட்டுகிறார்.
மருத்துவமனையில் தங்கியுள்ள அனைவரும் தங்களுக்குள் புலம்புவது மனதிற்க்கு கஷ்டமாக உள்ளது.
விடிந்தவுடன் பார்த்தால் அனைவரும் நல்லவர்கள் போல நடந்துகொள்கிறார்கள்.
'இதை தட்டிகேட்டே தீருவேன்' என்று நான் கிளம்ப...
'நமக்கெதுக்கு இதெல்லாம்' என்று என் மனைவி சொல்ல...
அதையும் மீறி மருத்துவரை சந்திக்க...
மருத்துவமனை அமைதியாகிவிட்டது.
ஆனால் என் மனைவி இன்னும் அமைதியாகவில்லை.
.
நித்தி என்பது வெறும் சாமியார் அல்ல
1 year ago
13 comments:
//அது மட்டுமல்லாமல் அனைவரும் ஒன்று சேர்ந்து (நர்ஸ் உடையுடன்)சத்தமிட்டு ஆடுகின்றனர்.//
அடக்கொடுமையே! இது வேறயா.... ஏதாவது விழா கொண்டாட்டமா இல்லை சும்மாவே ஆடுறாங்களா?
//டிரிப்ஸ் மாத்துவதற்கு
அழைத்தாலும் 'வருகிறேன்' என்று கூறிவிட்டு தாமதமாக வருகின்றனர். இரண்டுதடவை 'டிரிப்' முடியும் நேரம் நானே அதை நிறுத்திவிட்டு மீண்டும் அவர்களை அழைக்க சென்றுள்ளேன்//
இந்த கஷ்டத்தை நானும் அனுபவித்திருக்கிறேன் ராம்
//'இதை தட்டிகேட்டே தீருவேன்' என்று நான் கிளம்ப...
'நமக்கெதுக்கு இதெல்லாம்' என்று என் மனைவி சொல்ல...
அதையும் மீறி மருத்துவரை சந்திக்க...
மருத்துவமனை அமைதியாகிவிட்டது.
ஆனால் என் மனைவி இன்னும் அமைதியாகவில்லை.
//
நல்ல காரியம் செய்தீர்கள் ராம். வாழ்த்துகள் நண்பா.
மனைவிய எப்படியும் சமாளிச்சுடுவீங்க தானே ;-)
:(
காலையில் வரும் மருத்துவர் ரொம்ப ஸ்டிரிக்ட் அதனால் தான் ஊழியர்கள் அறைகளை சுத்தமாக வைத்திருக்க முயற்சிக்கிறார்கள், அதனால் அந்த டாக்டரிடம் சத்தமில்லாமல் இரவு கூத்துகளை போட்டு கொடுத்துவிட்டால் சரியாகிடும்.
நன்றி கோவி.கண்ணன்.! தாங்கள் என்னை பின் தொடர்வதற்கு நன்றி! வருகைக்கு மகிழ்ச்சி..
நன்றி ப்ரேம்!
என் மனைவியை எளிதாக சமாளித்தாகிவிட்டது. எப்படி என்று கேட்க கூடாது.
வருகைக்கு மகிழ்ச்சி..
'இதை தட்டிகேட்டே தீருவேன்' என்று நான் கிளம்ப...
'நமக்கெதுக்கு இதெல்லாம்' என்று என் மனைவி சொல்ல...
அதையும் மீறி மருத்துவரை சந்திக்க...
மருத்துவமனை அமைதியாகிவிட்டது.
ஆனால் என் மனைவி இன்னும் அமைதியாகவில்லை.
///
இதை மருத்துவரிடம்
கூறியது சரிதான்!!
இல்லையேல்
தெரியாது!!
தேவா..
இரவு கலாட்டாக்களை வீடியோ பிடித்து, யூட்யூபில் போட்டு எங்களுக்கும் அந்த மருத்துவருக்கும் அனுப்பி வைங்க!!!
நன்றி thevanmayam!
தங்கள் வருகைக்கு மகிழ்ச்சி..
நன்றி ச்சின்னப்பையன்!
தங்கள் வருகைக்கு மகிழ்ச்சி.. நாங்கள் மருத்துவமனையை விட்டு டிஸ்சார்ச் ஆகி வந்தாச்சு.
\\அது மட்டுமல்லாமல் அனைவரும் ஒன்று சேர்ந்து (நர்ஸ் உடையுடன்)சத்தமிட்டு ஆடுகின்றனர்\\
கொடுமை தான்.
எப்படித்தான் முடியுதோ.
ஏதோ வருமானத்துக்காக வருபவர்கள் இப்படித்தான் போல.
இது ஒரு சேவை என்பது எப்பதான் உணரப்போறாங்களோ.
நன்றி ஜமால்!
வருகைக்கு மகிழ்ச்சி!
//'இதை தட்டிகேட்டே தீருவேன்' என்று நான் கிளம்ப....///
கிளம்புங்க..கிளம்புங்க....இப்பிடி ஒண்ணு ரெண்டு பேர் இருந்தாதான் சரி வரும்...
அன்புடன் அருணா
Post a Comment