Thursday, January 8, 2009

பயணம் _ மீண்டும்!

ஒரு சின்ன ஓவிய குவியல் ‍_ அஞ்சல்
அவள் நினைவுகளை தாங்கி வரும்...


என் இனிய பேனாஓய்வு பொழுதில் ஓய்வில்லாமல்
அவளை எழுதி கொள்ளும்...


யாரோ எழுதிய கிறுக்கல்களின்
உள்ளே அவள் முகம்...


பல ஒலிநாடா _ அவள்
புன்னகையை சிந்தும்...

வழி மறிக்கும்போக்குவரத்து நெரிசல்! _ என்னை
பழைய நினைவுகளில்
பயணிக்கச்செய்யும்...


காலை நேர பனித்துளி _ என்னை
குளிர்விக்கும் அவள் நினைவால்...


இன்னபிற யாவும்,
ஏமாற்றமே இன்றி
அவளை
என்னிடம் ஒப்படைத்து
செல்லும்.


கால‌ம் எல்லா நிஜ‌ங்க‌ளையும்
நிழ‌ல்க‌ளாக‌ மாற்றிய‌து
ஆனால்..
இடைவெளி வ‌ந்த‌(ச‌ந்திப்பில் ம‌ட்டும்)பின்னும்
நெஞ்சில் ஆடும் காத‌ல்!.
இன்னும் மாற‌வில்லை எதுவும்!...

5 comments:

ச.பிரேம்குமார் said...

என்ன ராம், ஒரே ரொமாண்டிக் மூடுல இருக்கீங்க போல :)

ராம்.CM said...

நன்றி ப்ரேம்! நான் அப்பாவான சந்தோசத்தை கொண்டாடவும், என்னவளை கவனித்துக்கொள்ளவும் 20 நாட்கள் விடுமுறையில் ஊருக்கு வந்துள்ளேன். ஆகையால்தான் பதிவுலகிற்கு வர தாமதம்..

கார்த்திகைப் பாண்டியன் said...

தாங்கள் தந்தை ஆனதற்கு வாழ்த்துக்கள் ராம். நான் பிரேமை தொடர்ந்து தங்கள் வலைப்பூவிற்கு வந்தேன். கவிதை நன்றாக உள்ளது. சீக்கிரமே மீண்டும் எழுத தொடங்குங்கள்.

ராம்.CM said...

நன்றி கார்த்திகை பாண்டியன்! வருகைக்கு மகிழ்ச்சி!

sakthi said...

nice ram