Wednesday, January 28, 2009

காதலே நிம்மதி!

நாம் வாழ்க்கையிலும்,சினிமாவிலும் எத்தனையோ விதமான காதலை சந்தித்ததுண்டு. இது போல என் நண்பரின் காதலும் கொஞ்சம் வித்தியாசமானது...

'பாலா' என்னுடன் பணிபுரியும் சக ஊழியர். காதல் மீது ஆர்வம் இல்லாமல் தனிகாட்டு ராஜாவாக வாழ்ந்த பாலாவின் வாழ்வில்..
"தன்னுடன் +2 வரைப் படித்த பக்கத்து ஊரில் வசிக்கும்பெண் திடீரென தனது காதலை இவரிடம் வெளிப்படுத்த"...
'தனக்கு ஞாபகமே இல்லாத பெண்' ஒருவர் தன்னிடம் நேரிடையாக தன் காதலை வெளிப்படுத்தியதால் மகிழ்ச்சியுடன் காதலை ஏற்றுக்கொண்டார்.

ஒரு வருடம் ஓடியது..

அடிக்கடி சந்தித்துக்கொண்டதாலும்,போனில் பேசிக்கொண்டதாலும் இவர்கள் காதல் இவர்களின் பெற்றோருக்கு தெரிய வந்தது. பாலாவின் வீட்டில் காதலை ஏற்றுக்கொண்டனர். அவர் காதலி வீட்டிலும் பாலாவின் பணி,குணநலன் பற்றி விசாரித்து சம்மதித்தனர்.
தை மாத‌ம் நிச்ச‌ய‌தார்த்த‌ம் செய்ய‌ எண்ணி,
பொருத்தம் பார்ப்பதற்காக போனில், பெண்ணின் தந்தை பாலாவிடம், நட்சத்திரத்தை கேட்க...

பாலா "கேட்டை" என்று கூறினார்.

அன்று இரவே அப்பெண் பாலாவிற்கு போன் செய்து,
'நட்சத்திரம் பொருத்தம் இல்லை'[கேட்டை நட்சத்திரம் பெண்ணின் அண்ணனுக்கு ஆகாதாம்]. அதனால் அப்பா, 'கல்யாணத்திற்கு சம்மதிக்க மாட்டேன். என்கிறார்' என்றது.
பாலா 'என்ன செய்வது?' என்று தெரியாமல்,
நாங்கள் தங்கியிருக்கும் அறையையே குழப்பத்தில் ஆழ்த்தினார்.
நாங்கள் அனைவரும் ஒன்றாக "உடனடியாக ஊருக்கு சென்று அந்த பெண்னை கூட்டிக்கொண்டு வாருங்கள் பதிவு திருமணம் செய்து விடலாம்" என்று சொல்ல.. உடனடியாக ஒரு வாரம் லீவு எடுத்துக்கொண்டு ஊருக்கு சென்றார். லீவு முடித்து வந்த பாலாவை அனைவரும் கட்டியணைத்து வரவேற்றோம்.


விடுமுறையில்;

ஊருக்கு சென்ற பாலா ஜாதகத்தைப் பற்றி, இரண்டுபக்க பெற்றோரும் நேரிடையாக பேசாததை உணர்ந்தார். 'தான் கவனிக்காமல் வேறு நட்சத்திரத்தை சொல்லிவிட்டதாக' பெண்வீட்டில் கூறிவிட்டு..

தனது பெற்றோரை கஷ்டபட்டு சம்மதிக்க வைத்து, தனது காதலியின் அமோக ஆதரவுடன், தனக்கு தெரிந்த ஜோதிடரை வைத்து, பெண்ணின் நட்சத்திரத்திற்கேற்ப தனது நட்சத்திரத்தை மாற்றி, ஜாதகத்தை புதிதாக தயார் செய்து, இச்சம்பவ‌ம் யாருக்கும் தெரியாமல் ரகசியமாக பாதுகாத்து, ஜாதகத்தை பெண் வீட்டில் கொடுத்து,

"நிச்சயதார்த்தத்தை" முடித்து விட்டார்.
விரைவில் திரும‌ணம்.

13 comments:

Thamira said...

நல்ல காரியம் செய்தீர்கள். உங்கள் நண்பருக்கு வாழ்த்துகள்.!

கார்த்திகைப் பாண்டியன் said...

நல்லது.. ஆரம்பத்தில் இருக்கும் ஆசையும் ஆர்வமும் கடைசி வரை நீடிக்க வேண்டும் என தங்கள் நண்பரிடம் சொல்லுங்கள்.. இருந்தால் வாழ்க்கை இனிக்கும் தோழர்..

ராம்.CM said...

நன்றி தாமிரா!

நன்றி கார்த்திகைப்பாண்டியன்!வருகையில் பெருமகிழ்ச்சி..

சொல்லரசன் said...

எப்படிங்க,இப்படி

ராம்.CM said...

நன்றி சொல்லரசன்!..


தங்கள் வருகைக்கு மிக்க மகிழ்ச்சி!..

ராம்.CM said...

நன்றி சொல்லரசன்!..


தங்கள் வருகைக்கு மிக்க மகிழ்ச்சி!..

ச.பிரேம்குமார் said...

அடடே! வித்தியாசமான காதல் கதையா இருக்கே :)

ஜாதகத்தை மாற்றியது சரிதான். ஒரு காதல் திருமணத்திற்கு அதுவொரு தடையாக இருக்குமெனில், அதை கட்டாயம் மாற்றியமைக்கலாம் :)

ச.பிரேம்குமார் said...

//ஒரு காதல் திருமணத்திற்கு அதுவொரு தடையாக இருக்குமெனில்//

சொல்லப்போனால், எந்த ஒரு திருமணமாக இருந்தாலும் இப்படி செய்யலாம் தான் ;)

Anonymous said...

//"நிச்சயதார்த்தத்தை" முடித்து விட்டார்.
விரைவில் திரும‌ணம். //
நண்பருக்கு வாழ்த்துக்கள்
ஆமா... நீங்களா ஐடியாகொடுத்தது்?..

சி தயாளன் said...

நல்ல காரியம்..இருவர் வாழ்க்கையும் இந்தே அமைய என் வாழ்த்துகள்

ராம்.CM said...

நன்றி ப்ரேம்!.
//சொல்லப்போனால், எந்த ஒரு திருமணமாக இருந்தாலும் இப்படி செய்யலாம் தான் ;)//

காதலர்கள் இருவரும் சம்மதித்து செய்தல் வேண்டும்.

ராம்.CM said...

நன்றி கவின்!

இல்லையில்லை...
நமக்கெல்லாம் இப்படி ஐடியா தோன்றுமா?...

ராம்.CM said...

நன்றி 'டொன்'லீ !.
தங்கள் வருகைக்கு மகிழ்ச்சி!.