திருநெல்வேலி, ஈரடுக்கு மேம்பாலத்திற்கு கீழ்உள்ள பழைய 'தளபதிஒயின்ஸ்' அருகில் நானும் எனது நண்பரும் பேசிக்கொண்டிருந்தோம்.
அப்போது எங்களை தாண்டிச்சென்ற ஒருவர் மீது எங்கள் கவனம் சென்றது. அவர் 25 வயது மதிக்கதக்க ஒரு வாலிபர். பேண்ட்சர்ட் டக் இன் செய்து, நான்கு நாள் தாடி, நெற்றியில் சந்தனபொட்டு வைத்திருந்தார். உற்றுக் கவனித்தேன்.. அவர் கோவிலுக்கு செல்ல மாலை போட்டிருந்தார். ஆனால் காலில் செருப்பு போடவில்லை. உடனே என் நண்பரிடம்,
"இவ்வளவு லட்சணமாக டிரஸ் பண்ணின இவர் செருப்பு போடாதது நல்லாவே இல்லை".
"அவர் கோவிலுக்கு செல்ல மாலை போட்டிருப்பதால் செருப்பு போடாமல் இருக்கிறார்".
"மாலை போட்டுவிட்டு காலில் செருப்பு போடாமல் வெளியில் செல்லும்போது தெருக்களில் உள்ள எச்சில் போன்ற பல அசுத்தங்களை மிதிப்பதைவிட செருப்பை சுத்தமாக வைத்துக்கொண்டும், அடிக்கடி நீரினால் கழுவிக்கொண்டும் செல்லவேண்டியதுதானே?"
"மாலை போட்டிருப்பவர்களைப் பற்றி அப்படி பேசாதே! அது தப்பு! அதுபாவம்!"
"சரிப்பா! நமக்கெதுக்கு இதெல்லாம். வா!.. போகலாம்". என்று நண்பரை அழைத்துக்கொண்டு அருகில் உள்ள "டாஸ்மாக்" பார் உள்ளே சென்றேன். டேபிளில் அமர்ந்து ஆர்டர் கொடுத்துவிட்டு, பேசிக்கொண்டிருக்கும்போது சுவரில் மாட்டப்பட்டிருந்த போர்டை பார்த்தேன்..
ஒரு நிமிடம் திகைத்து விட்டு, என் நண்பரிடம் அந்த போர்டை காட்டினேன். அதை பார்த்த என் நண்பர், "இஈஈ..." என இளித்தவாறு எனை பார்த்தார். மீண்டும் ஒருமுறை நான் அதை வாசித்தேன்.
"மாலை போட்டுவரும் சாமிகளுக்கு தனி கிளாஸ் பயன்படுத்தப்படுகிறது."
நித்தி என்பது வெறும் சாமியார் அல்ல
1 year ago
7 comments:
"மாலை போட்டுவரும் சாமிகளுக்கு தனி கிளாஸ் பயன்படுத்தப்படுகிறது."
நல்லாதான் யோசிக்கிராங்கள்...
//"மாலை போட்டுவரும் சாமிகளுக்கு தனி கிளாஸ் பயன்படுத்தப்படுகிறது."
//
புலன்களை கட்டுப்படுத்த பழக்குவதற்காகத்தான் விரங்களே கடைப்பிடிக்கப் படுகின்றன. தனி கிளாஸில் தண்ணி அடிப்பவர்கள் விரதம் இருந்து என்னத்த கிழிக்கப் போகிறார்கள். நல்லா வருதுங்க வாயில
தலைப்பு பற்றி சொல்ல வரலை ...
தங்களுக்கு வாழ்த்து சொல்ல வந்தேன்
உங்களுக்கு அப்பா என்ற அந்தஸ்த்து கிடைத்தற்கு.
வாழ்த்துக்கள். தங்களுக்கும் தங்கள் துணைவிக்கும்.
குழந்தைக்கு எமது அன்பும் பிரார்த்தனையும்.
நன்றி கவின்.! தங்களின் வருகைக்கு மகிழ்ச்சி.!
நன்றி ப்ரேம்.!
நன்றி அதிரை ஜமால்.! தங்களின் வருகைக்கும் மகிழ்ச்சி.!
welcome's you!
//"மாலை போட்டுவரும் சாமிகளுக்கு தனி கிளாஸ் பயன்படுத்தப்படுகிறது."
//
அதெல்லாம் பலவருசமாகவே நடக்குது. 'அந்த' மாறி இடங்களில் சாமிகளுக்கென்றே தனி அறைகள் வைக்கும் வரை செல்லாமல் இருப்பதற்கு மகிழ்வோம்.
நன்றி கோவி.கண்ணன்.!
தங்கள் வருகைக்கு மகிழ்ச்சி..
Post a Comment