Monday, June 8, 2009

இப்படியெல்லாமா கேள்வி கேட்பாங்க?

என்னை இந்த தொடர்பதிவுக்கு அழைத்த நையாண்டி நைனாவிற்கு நன்றி. என் மனதில் தோன்றிய பதில்கள்...



1 . உங்களுக்கு ஏன் இந்தப் பெயர் வந்தது? உங்களுக்கு உங்க பெயர் பிடிக்குமா ?

எனது தாத்தாவின் பெயர்.பரம்பரை பெயர். எனது பெயர் எனக்கு ரொம்ப பிடிக்கும். (இன்னும் பெரியதாக வைத்திருக்கலாம் என்று என் தந்தையிடம் கேட்டதுண்டு.{ இராமச்சந்திரமூர்த்தி‍‍ @ ராம்.C.M} ).



2.கடைசியாக அழுதது எப்பொழுது?

7ம் வகுப்பு படிக்கும் போது பள்ளிக்கு செல்லாமல் கிணற்றில் குளித்துவிட்டு வருவதை அம்மா பார்த்துவிட அன்று வீட்டில் ந‌டந்த "தீபாவளி"யின் போது.



3.உங்களோட கையெழுத்து உங்களுக்கு பிடிக்குமா?

ரொம்ப பிடிக்கும். 10ம் வகுப்பு முதல் இன்று வரை பலர் கூறியும் மாற்றாமல் இன்று வரை தமிழில் போட்டு வருகிறேன். இனியும் மாற்றபோவதில்லை.



4.பிடித்த மதிய உணவு என்ன?

சாதம்,சாம்பார்,வெண்டைக்காய் பச்சடி,தயிர்,அப்பளம்.



5.நீங்கள் வேறு யாருடனாவது உங்களோட நட்பை உடனே வச்சுக்குவீங்களா?

இல்லை. அவர் எப்படி என்று ஆராய்ந்து உண்மைவிளம்பியாக இருந்தால்.. அவர் விருப்பப்பட்டால்...



6.கடலில் குளிக்க பிடிக்குமா....அருவியில் குளிக்க பிடிக்குமா?

இரண்டிலும் அடிக்கடி குளித்தாலும், கொஞ்சதூரம் பயணம் செய்து குளிக்கும் கடல் குளியலே.



7.முதலில் ஒருவரைப் பார்க்கும் போது எதை கவனிப்பீர்கள்?

யாராக இருந்தாலும் அவர்களது கண்கள். அது மட்டும்தான் அவருக்கே தெரியாமல் அவர் பேசுவது உண்மையா? என்று கணக்கிட்டு சொல்லும்.



8.உங்க கிட்ட உங்களுக்கு பிடிச்ச விஷயம் என்ன? பிடிக்காத விஷயம் என்ன ?

பாவம் என்று தர்மம் (நூற்றுகணக்கில்) செய்து என் மனைவியிடம் திட்டு வாங்குவது. மிக வேகமாக பைக் ஓட்டுவது.



9.உங்க சரி பாதி கிட்ட உங்களுக்கு பிடித்த பிடிக்காத விசயம் எது?

எனது சரிபாதியாக இல்லாமல் முழுவதுமாக இருப்பது., பிடிக்கவில்லை என்று சொல்லவிடாமல் என்னுள் இருப்பது.



10.யார் பக்கத்துல இல்லாம இருக்குறதுக்கு வருந்துகிறீர்கள் ?

எனது உடன்பிறப்புகள்.



11.இதை எழுதும் போது என்ன வர்ண ஆடை அணிந்து உள்ளீர்கள் ?

சாம்பல் நிற சட்டையும், சந்தனகலர் டிராக்ஸ்சூட்டும்.


12.என்ன பார்த்து/கேட்டுக் கொண்டு இருக்குறீங்க ?

ஜன்னல் வழியே பூட்டாமல் வந்த எனது பைக், "ஏதோ ஒரு பாட்டு" உன்னிடத்தில் என்னை கொடுத்தேன் படப்பாடல்.



13.வர்ணப் பேனாக்களாக உங்களை மாற்றினால் என்ன வர்ணமாக உங்களுக்கு ஆசை?

வாடாமல்லி பூவின் நிறம்.



14.பிடித்த மணம்?

பைக்கில் செல்லும்போது என்னை ஓவர்டேக் செய்யும் லாரியில் உள்ள கருவாட்டு வாசனை.



15.நீங்க அழைக்கப் போகும் பதிவரிடம் உங்களுக்கு பிடித்த விஷயம். அவரை அழைக்கக் காரணம் என்ன?

http://ponniyinselvan-mkp.blogspot.com/திரு.கார்த்திகைப் பாண்டியன் அவர்கள். நல்லவர். வல்லவர். ஆசிரியர் பணியில் இருப்பவர். ஆசிரியர்தான் கேள்வி கேட்பார்கள். ஆசிரியர் பதில் எப்படியிருக்கும்?

http://pirivaiumnesippaval.blogspot.com/காயத்ரி அவர்கள். பிரிவையும் நேசிக்கும் அழகு கவிதை மழை பொழியும் அன்பு சகோதரி.

http://premkumarpec.blogspot.com/திரு.ப்ரேம் அவர்கள். பலவிதமான கருத்துகளுடன் பதிவு எழுதுபவர். பதிவுலகில் எனக்கு முதலில் அறிமுகமானவர்.



16.உங்களுக்கு இதை அனுப்பிய பதிவரின் பதிவில் உங்களுக்குப்பிடித்த பதிவு ?

நையாண்டி நைனா. நையாண்டியிலே வண்டி ஓட்டும் திறமை.



17. பிடித்த விளையாட்டு?

கிரிக்கெட். லீவு போட்டு டிவியே கடவுள் என்று கிடப்பது. சென்னையாக இருந்தால் சேப்பாக்கத்தில்...



18.கண்ணாடி அணிபவரா?

இல்லை.



19.எப்படிப்பட்ட திரைப்படம் பிடிக்கும்?

ஒரே வில்லன். பரம்பரையாக‌ பழி வாங்குவது (?).



20.கடைசியாகப் பார்த்த படம்?

நியூட்டன் 3ம் விதி.(என் தலைவிதி போங்க...)



21.பிடித்த பருவ காலம் எது?

இலையுதிர்காலம்.



22.என்ன புத்தகம் படித்துக் கொண்டு இருக்கீங்க?

தினசரி காலையில் வீட்டிற்கு வரும் 'தினகரன்' பத்திரிகையாவது படிக்கனும் நினைப்பேன். அதுவும் சில நாட்கள் தவறிவிடுகிறது.



23.உங்கள் டெஸ்க்டொப்-ல் இருக்கும் படத்தை எத்தனை நாளுக்கு ஒரு நாள் மாற்றுவீர்கள்?

இது ப்ரவுசிங் சென்டரின் உரிமையாளரிடம் கேட்கவேண்டிய கேள்வி. ஆனால் நாளுக்குநாள் சென்டரை மாத்திகொண்டே இருக்கிறேன்.


24.பிடித்த சத்தம் ? பிடிக்காத சத்தம்?

மழலைகள். சிக்னலில் கடைசியில் நின்றுகொண்டு பச்சைவிளக்கெரிந்தவுடன் ஹாரன் அடிக்கும் வாகன‌சத்தம்.



25.வீட்டை விட்டு நீங்கள் சென்ற அதிக பட்ச தொலைவு?

விஜயவாடா.



26.உங்களுக்கு ஏதாவது தனித் திறமை இருக்கிறதா?

துப்பாக்கி சுடுவது தனித்திறமையில் வருமா?



27.உங்களால் ஏற்றுக் கொள்ள முடியாத ஒரு விஷயம்?

சாப்பிடும் போது அருகில் தண்ணீர் இல்லாதது.



28.உங்களுக்கு உள்ளே இருக்கும் சாத்தான்?

நினைத்ததை உடனே முடிக்க எண்ணி தோற்றாலும் சில நிமிடங்களில் அதை மறப்பது.





29.உங்களுக்கு பிடித்த (சுற்றுலா) தலம்?

எங்க ஊர் ஆற்றங்கரை.



30.எப்படி இருக்கணும்னு ஆசை?

வேலைக்கே போகாமல் வீட்டில் வீடியோகேம் விளையாடனும்.



31.மனைவி(கணவன்) இல்லாம செய்ய விரும்பும் ஒரே காரியம் ?

கிரிக்கெட் பார்ப்பது.



32.வாழ்வு பற்றி ஒரு வரி சொல்லுங்க?

துரத்துகிற சிங்கத்திற்கு பயந்து மரத்தில் ஏற, அங்கு இருக்கும் கருநாகத்திற்கு பயந்து அருகில் உள்ள ஆற்றில் குதிக்க எண்ண, அங்கு கிடக்கும் முதலையை கண்டு பயப்படும் நேரத்தில் மரக்கொம்பு ஒடிய தயாராக, என்ன செய்வது என தொங்கும் போது,மேல் கொப்பிலிருக்கும் தேன் கூட்டிலிருந்து ஒரு சொட்டு தேன் வாயில் விழும்போது ஏற்படும் சுவை... வாழ்வு.
.

27 comments:

ஆ.ஞானசேகரன் said...

வணக்கம் நண்பா உங்களைப் பற்றி தெரிந்து கொண்ட பதிகள்... வாழ்த்துகள்

ஆ.ஞானசேகரன் said...

//பாவம் என்று தர்மம் (நூற்றுகணக்கில்) செய்து என் மனைவியிடம் திட்டு வாங்குவது. மிக வேகமாக பைக் ஓட்டுவது.//

தர்மமும், வேகமும் பார்த்து செய்யுங்க நண்பா. நம்பளை நம்பி குடும்பம் இருக்கே...

ஆ.ஞானசேகரன் said...

//ஜன்னல் வழியே பூட்டாமல் வந்த எனது பைக்,//

உங்களுக்கே பயமுன்னா என்னைப் போன்ற சாமானியர்களுக்கு?

நட்புடன் ஜமால் said...

\\9.உங்க சரி பாதி கிட்ட உங்களுக்கு பிடித்த பிடிக்காத விசயம் எது?

எனது சரிபாதியாக இல்லாமல் முழுவதுமாக இருப்பது., பிடிக்கவில்லை என்று சொல்லவிடாமல் என்னுள் இருப்பது.\\

மிகவும் இரசித்தேன்.

goma said...

அருமையான பதில்கள்.சிலருடைய பதிலே கேள்வியை அழகாக்கும் .நச் நச்..பதில்கள்

ஆ.சுதா said...

பதில் எல்லாம் சரியா இருக்கு
நீங்களும் பாசாகிட்டீங்க!!!

உங்களைப் பற்றி கொஞ்சமேனும் தெரிந்து கொள்ள வாய்ப்பு.

Anonymous said...

2.hatshalf
4.good and simple food
7.sharpu pa nenga
8.தர்மம் பண்ணுங்க திட்டினாப் பரவாயில்லை..பைக் மட்டும் வேகமா வேணாமே......
9.முழுமையான பதில்
12. நல்லப்பாட்டு
14.இதனா வண்டி வேகமாக ஓட்டுவதன் ரகசியம்
19. என்னப்பா எதாவது ப்ளான் இருக்கா?
26.யப்பா நான் வரலை உங்கபேச்சிக்கு
30.மனைவி சம்மதிப்பாங்களா?
32.excellent excellent excellent

சி தயாளன் said...

:-)))

வேத்தியன் said...

இராமச்சந்திரமூர்த்தி‍‍ @ ராம்.C.M//

ஐடியா நல்லா இருக்குங்க...

வேத்தியன் said...

3.உங்களோட கையெழுத்து உங்களுக்கு பிடிக்குமா?

ரொம்ப பிடிக்கும். 10ம் வகுப்பு முதல் இன்று வரை பலர் கூறியும் மாற்றாமல் இன்று வரை தமிழில் போட்டு வருகிறேன். இனியும் மாற்றபோவதில்லை.
//

வாழ்த்துகள்...

வேத்தியன் said...

26.உங்களுக்கு ஏதாவது தனித் திறமை இருக்கிறதா?

துப்பாக்கி சுடுவது தனித்திறமையில் வருமா?//

கண்டிப்பா வருமே...
நல்ல திறமை தான்..

வேத்தியன் said...

27.உங்களால் ஏற்றுக் கொள்ள முடியாத ஒரு விஷயம்?

சாப்பிடும் போது அருகில் தண்ணீர் இல்லாதது.//

ஹா ஹா..
குசும்பு...

வேத்தியன் said...

அந்த 32வது கேள்விக்குரிய பதில் வித்தியாசம் சார்...
ரசித்தேன்...

அகநாழிகை said...

ராம்,
நன்றாக எழுதியிருக்கிறீர்கள்.
வாழ்த்துக்கள்.

‘அகநாழிகை‘
பொன்.வாசுதேவன்

இராம்/Raam said...

//
எனது தாத்தாவின் பெயர்.பரம்பரை பெயர். எனது பெயர் எனக்கு ரொம்ப பிடிக்கும். (இன்னும் பெரியதாக வைத்திருக்கலாம் என்று என் தந்தையிடம் கேட்டதுண்டு.{ இராமச்சந்திரமூர்த்தி‍‍ @ ராம்.C.M} ).//

பாஸ்,

என்னோட பேரும் இதுதான்... :)

அப்புறம் ஒங்க புரப்பைல் பேர மாத்த முடியுமான்னு பாருங்களேன்... நம்ம ரெண்டு பேரையும் சேர்த்து எல்லாரும் குழப்புறாங்க... :)

anujanya said...

ரொம்ப வித்தியாசமாக, மனதுக்கு நெருக்கமாக இருந்தது உங்க பதில்கள். எனக்குப் பிடித்தது.

அனுஜன்யா

கார்த்திகைப் பாண்டியன் said...

எளிமையான பதில்கள் ராம்.. ரசித்தேன்.. என்னையும் அழைத்து இருக்கிறீகள்.. நன்றி.. ஆனால் நான் ஏற்கனவே எழுதி விட்டேனே..:-(

நையாண்டி நைனா said...

மிக நன்றி நண்பா...
தொடர் பதிவுக்கு அழைத்தவுடன் வந்து சுட சுட பதில் கொடுத்ததிற்கு...

விடைகளை சும்மா முட்டிக்கு முட்டி தட்டி கொடுத்திருக்கீங்க....

ஜானி வாக்கர் said...

வாழ்வு பதில் ரசிக்கும்படியாக இருந்தது, மற்றபடி அனைத்தும் நிறைவான பதில்கள்.

ச.பிரேம்குமார் said...

அடடே, சுவாரசியமான பதில்கள். நல்லா இருக்கு ராம் :)

Thamira said...

ரசித்தேன் நண்பரே.!

மணிநரேன் said...

ரசித்தேன் ராம்...

32 ..:)

சகாதேவன் said...

அயோத்தி தசரத இராமச்சந்திரமூர்த்தி
இவ்வளவு போதுமா
சகாதேவன்

உமா said...

very nice.

ராம்.CM said...

நன்றி ஆ.ஞானசேகரன்! வருகையில் மகிழ்ச்சி!போலீஸ்காரன் பைக் மீதுதான் திருடர்களுக்கு கடும் கோபம் இருக்கும்.

நன்றி நட்புடன் ஜமால் !

நன்றி கோமா!

நன்றி ஆ.முத்துராமலிங்கம்!

நன்றி தமிழரசி ! வருகையில் ஆனந்தம்.

நன்றி ’டொன்’ லீ !

நன்றி வேத்தியன் ! கருத்துக்கு நன்றி.

நன்றி "அகநாழிகை".வருகையில் மகிழ்ச்சி!

நன்றி ராம்! நான் முயற்சி செய்துபார்த்தேன். யோசனையாக உள்ளது. நீங்களே தங்கள் புரப்பைல் பெயரை மாற்றவும்.

நன்றி அனுஜன்யா!

நன்றி கார்த்திகைப் பாண்டியன்!ஸாரி கார்த்திகை..நான் தங்களுடையதை படிக்கவில்லை.

நன்றி நையாண்டி நைனா !

நன்றி சின்னக்கவுண்டர் !

நன்றி ச.பிரேம்குமார்!

நன்றி ஆதிமூலகிருஷ்ணன் !

நன்றி மணிநரேன்!

நன்றி சகாதேவன் !

நன்றி உமா !

gayathri said...

anna pathilakal suara iruku

Pradeep said...

//எனது சரிபாதியாக இல்லாமல் முழுவதுமாக இருப்பது., பிடிக்கவில்லை என்று சொல்லவிடாமல் என்னுள் இருப்பது//

கலக்குறிங்க ராம். பதில்கள் அனைத்தும் சூப்பர்.

தண்ணி பக்கத்துல இல்லன்னு சொன்னதும் நினைக்க முடியாத பதில்.