
கற்பனையோடும்
நினைவோடும்
நாட்களை நகர்த்துகிறாய்...
கண் இமைகளை துறந்துவிட்டு
கண்ணீரை திறந்துவிடுகிறாய்..
இதை மாற்றிவிடு..
அல்லது மாறிவிடு.
எனக்குள் உன்னை நான் சேர்த்தேனோ..
என்னுயிரில் நீயாக சேர்த்தாயோ..
தெரியவில்லை..
தெரியவில்லை..
ஆனால்..
சேர்ந்ததை பிரிக்க இயலாது..
நீ என்னுள் சேரும்முன்
முரட்டுதனமானவன் நான்..
சேர்ந்தபின் மனிதனாகி
உன்மீது அன்பை முரட்டுதனமாக
வைத்திருப்பவன்...
உனை எப்படி தவிர்ப்பேன்?..
உனது கற்பனையையும், நினைவையும்
சுமக்க நானிருக்கிறேன்..
உன் வாழ்வில் சுமை தெரியாமல்
உன் வாழ்வில் சுமை தெரியாமல்
இமை போல் காத்திருப்பேன்,
உன் உலகில் உயிரோட்டமாக...
நீ வேண்டுமானால் நினைத்துக்கொள்,
என்னிடமிருந்து பிரிந்து விடலாம் என்றும்..
நம் காதலை பிரித்து விடலாம் என்றும்..
நான் நினைக்கிறேன்..
நான் நினைக்கிறேன்..
இல்லையில்லை,
அழைக்கிறேன்...
பறந்து வா..
பறந்து வா..
'நம்பிக்கையோடு' . _ காதல்
வானில் பறப்போம் ஒன்றாய்..
சுற்றமும் சமூகமும்
சிறகை ஒடித்தால்
வீழ்வோம் ஒன்றாக...
14 comments:
//நீ என்னுள் சேரும்முன் முரட்டுதனமானவன் நான்..சேர்ந்தபின் மனிதனாகி உன்மீது அன்பை முரட்டுதனமாக வைத்திருப்பவன்
//
typical...scene...:-))
ராம்.. என்ன இது.. கவிதை எல்லாம் எழுதி தூள் கிளப்புகிறீர்கள்... அதுவும் காதல் கவிதை?!! உம்ம்ம்.. ஜமாயுங்கள்.. நல்ல கவிதை.. வாழ்த்துக்கள்..
தங்களது கவிதைகளும், படைப்புகளும் மிக நன்றாக இருக்கின்றது. வாழ்த்துக்கள்.
கவிதை நன்று. தடம் புரள்வது ஏனோ.
நன்றி 'டொன்'லீ!
வாழ்த்துக்களுக்கு மகிழ்ச்சி.!
நன்றி கார்த்திகைப்பாண்டியன்!வாழ்த்துக்களுக்கு மகிழ்ச்சி.! சும்மாதான் நம்மளூம் எழுதலாமென்று...!
நன்றி வாசவன்!
வருகைக்கு மகிழ்ச்சி!வாழ்த்துக்களுக்கு நன்றி!
நன்றி சொல்லரசன்!
வருகைக்கு மகிழ்ச்சி!தடம்புரள்கிறதா?..
எங்கே?.
//அழைக்கிறேன்...
பறந்து வா..
'நம்பிக்கையோடு' . _ காதல்
வானில் பறப்போம் ஒன்றாய்..
சுற்றமும் சமூகமும்
சிறகை ஒடித்தால்
வீழ்வோம் ஒன்றாக...//
நம்பிக்கை தடம் புரள்கிறது
காதலின்ன்.. நம்பிக்கை வரிகள்
கவிதை வேறயா.. ம்.. கலக்குங்க..
//அழைக்கிறேன்...
பறந்து வா~
'நம்பிக்கையோடு'...
காதல் வானில் பறப்போம் ஒன்றாய்..
சுற்றமும் சமூகமும்
சிறகை ஒடித்தால்
வீழ்வோம் ஒன்றாக...//
இப்போ பரவாயில்லையா?... சொல்லரசன்
நன்றி கவின்!
நன்றி தாமிரா!
என்ன ராம்? ஒரே காதல் சொ(கொ)ட்டுது??? ;)
நன்றி ப்ரேம்! வருகைக்கு மகிழ்ச்சி!
கவிதை..கவிதை..கவிதை..
நன்றி கார்க்கி! வருகைக்கு மகிழ்ச்சி!
Post a Comment