சென்னையில் நடக்கும் ‘ஜெமினி சர்க்கஸ்’ பார்ப்பதற்காக நானும் எனது நண்பரும் சென்றிருந்தபோது...
‘சர்க்கஸ்’ என்பது ஒவ்வொருவரின் தனித்திறமையை வெளிப்படுத்தும் ஒரு கூட்டுமுயற்சியாகவே தெரிகிறது. ஒவ்வொருவரும் திறமையுடனும், நேர்த்தியாகவும், அதே நேரத்தில் உயிரை பணயம் வைத்து அவர்கள் செய்யும் ‘வீரசாகசங்கள்’ என்னை திகைக்க வைத்தது. நம்மால் கனவில்கூட நினைத்து பார்க்கமுடியாத நிலையில் அவர்களின் சாகசங்கள் திகழ்கின்றன. அனைவரும் மெருகேறிய உடற்கட்டுடன் காணப்பட்டனர்.
ஒவ்வொருவரும் தனது உடலை ‘பேலன்ஸ்’ செய்யும்விதம் மிகவும் அருமையாக இருந்தது. தனிமனிதன் கற்பனைசெய்யமுடியாத அளவிற்கு அவர்களின் ‘பேலன்ஸ்’ காணப்பட்டது. ‘பேலன்ஸ்’ என்கிற ஒரு வார்த்தையில்தான் அவர்களின் மொத்த சாகசங்களும் அடங்கியுள்ளது.
குறிப்பாக..
1. தனித்தனி சைக்கிள்களில் ஒன்பது பெண்கள், அந்த குறுகிய மேடையில் கைகோர்த்துகொண்டு, முன்சக்கரத்தை தூக்கிக்கொண்டு பின்சக்கரத்தில் மட்டும் சுற்றிவருவது.
2. ஒரு பெண், சைக்கிளின் முன்சக்கரத்தை தூக்கியபடி இரண்டு கைகளையும் அந்தரத்தில் நீட்டியபடி மேடையின் விளிம்பில் அமைக்கப்பட்ட அரை அடி உயரமுள்ள பலகையில் மேடையை சுற்றிவருவது.
3. வட்டவடிவக் கூண்டுக்குள் நான்கு வீரர்கள் ஒரே நேரத்தில் குறுக்கும் நெடுக்குமாக பைக் ஓட்டுவது..
‘சர்க்கஸ்’ கூடாரமைப்பு பணியின்போது பாதுகாப்பு பணிக்காக அவர்களுடன் இருந்தபோது...
ஜெமினி, ஜம்போ, ராயல் மூன்று சர்க்கஸ்சும் ஒரே நிறுவனத்தைச் சார்ந்ததாம். 600க்கும் மேற்பட்டவர்கள் பணிபுரிகிறார்கள். இவர்கள் அனைவரும் பிற நிறுவன ஊழியர்களைப்போல மாதசம்பளம் பெறுகின்றனர். இவர்களுக்கு PF போன்ற அனைத்து பிடித்தங்களும் பிடித்தம் செய்யப்படுகிறது. இவர்களது நிறுவனம் மொத்தநஷ்டத்தில் இயங்கினாலும், இவர்கள் அனைவருக்காகவும் இதை நடத்திவருகிறார் இவர்களது நிறுவனர். ஒரு இடத்தில் குறைந்தது மூன்று மாதகாலம் தங்கவேண்டியிருப்பதால் ஆயிரக்கணக்கான பணவிரயமாகிறது. அதே நேரத்தில் சில கஷ்டங்களையும் அனுபவிக்கின்றனர்.
குறிப்பாக...
1. ஒரு இடத்தில் சர்க்கஸ் முடியும்முன்னரே அடுத்த இடம் தயாராகிவிடுவதால் அந்த இடத்திற்கு செல்லும் பயணநாட்கள்தான் அவர்களின் ஓய்வு நாட்கள்.
2. இடம் மாறிக்கொண்டே இருப்பதால் குடும்பம், குழந்தைகளையும் அழைத்து செல்ல வேண்டியுள்ளது.
3. மாதக்கணக்கில் தங்குவதால் இவர்கள் அனைவருக்கும், உணவுக்காக தனியாக ஒரு மெஸ் அமைப்பது, குடிப்பதற்காக லாரி லாரியாக குடிநீர் வாங்குவது, மற்ற தேவைக்கான தண்ணீருக்காக தனியாக ஒரு ‘போரிங்’ போடுவது.,
4. பெண்கள் மற்றும் குழந்தைகளுக்காக பாதுகாப்பான கூடாரங்கள் அமைப்பது, விலங்குகளுக்கு தேவையான உணவுகள் மற்றும் பாதுகாப்பு கூடாரங்கள் அமைப்பது.
"நாகரிக காலத்தில் ‘சர்க்கஸ்’ நலிவடைந்துவருவதால் உழைப்பிற்கேற்ப ஊதியம் கிடைக்காவிட்டாலும், அனைவரும் ஒரேகுடும்பமாக மனநிம்மதியுடன் வாழ்கிறோம்"என்கிறார்கள்.
அதே நேரத்தில்..
"ஏதாவது ஒரு காரணத்தைக்கூறி இலவசமாக டிக்கெட்டுகளை வாங்கிச் செல்பவர்கள்தான் அதிகம்" என்றும் வருந்துகிறார்கள்.
உங்கள் இயந்திர வாழ்வில் உங்கள் அருகாமையில் என்றாவது ‘சர்க்கஸ்’ துவங்கப்பட்டால்... இவர்களுக்காகவும், உங்கள் குழந்தைகளுக்காகவும் ஒதுக்குங்கள்....
மூன்று மணிநேரம், 30/- ரூபாய்.
நான் சொன்ன பொருளாதார நெருக்கடி வந்து விட்டது...
5 years ago
19 comments:
இன்றைய சூழ்நிலையில் பெரும்பாலான சர்க்கஸ்கள் நலிந்து விட்ட நிலை தான் உள்ளது.. இது மாற வேண்டும்.. நல்ல பதிவு
நன்றி கார்த்திகைப்பாண்டியன்!. வருகைக்கு மகிழ்ச்சி.!
75, 100 என்று அழுது பாடாவதி திரப்படங்களைப் பார்த்துவிட்டு வந்து நொந்துகொள்வதற்குப் பதில்
சர்க்கஸ் பார்க்க குடும்பத்தோடு சென்று வரலாம்!
நன்றி நாமக்கல் சிபி.!
எனது பதிவிற்கு முதன்முதலாக வருகை தந்துள்ளீர்கள். மிகுந்த மகிழ்ச்சி.!
நல்ல பதிவு,குறைந்தபட்சம் பெருநகரகளில் நிலையான மைதானம் அமைத்து அக் கலை காப்பற்றபட வேண்டும்
நன்றி சொல்லரசன்.!
வருகைக்கு மகிழ்ச்சி.!
//குறிப்பாக..
1. தனித்தனி சைக்கிள்களில் ஒன்பது பெண்கள், அந்த குறுகிய மேடையில் கைகோர்த்துகொண்டு, முன்சக்கரத்தை தூக்கிக்கொண்டு பின்சக்கரத்தில் மட்டும் சுற்றிவருவது.
2. ஒரு பெண், சைக்கிளின் முன்சக்கரத்தை தூக்கியபடி இரண்டு கைகளையும் அந்தரத்தில் நீட்டியபடி மேடையின் விளிம்பில் அமைக்கப்பட்ட அரை அடி உயரமுள்ள பலகையில் மேடையை சுற்றிவருவது.
//
பெண்களைத்தான் பாத்திருக்கிங்க....
சர்க்கஸ்- ஒரு சக்ஸஸ்பதிவு.....
வாழ்த்துகள்,தங்களின் இந்த வலைபதிவை யுத்புஃல்.விகடன்.காம் வில் சிறந்ததாக தேர்வு செய்யபட்டதற்கு.
https;//youthful.vikatan.com
every one must take their children to circus.
நன்றி கவின்!
வருகைக்கு மகிழ்ச்சி!.
வாழ்த்துக்களுக்கு நன்றி!.
தரமான பதிவு ராம்.! வந்து சில மாதங்களிலேயே விகடன் வரை ரீச்சாயிட்டீங்க போல தெரியுது. வாழ்த்துகள்.!
நன்றி சொல்லரசன்! விகடனில் வந்தது, தங்களின் மூலமே தெரிந்துகொண்டேன்.
நன்றி தாமிரா!
நீண்ட இடைவேளைக்கு பிறகு தங்களின் வரவு.
மகிழ்ச்சி...!
நன்றி தரங்கினி!
தங்களின் வரவு மகிழ்ச்சி...!
நல்ல பதிவு. அதிகம் அறிந்திராத தகவல்கள். வாழ்த்துகள் உங்களுக்கும், அதனை சரியாக அங்கிகரித்த விகடனுக்கும். மேலும் எழுதுங்கள்.
அனுஜன்யா
நன்றி அனுஜன்யா!. என் பதிவிற்கு முதன்முதலாக வந்தமைக்கு மகிழ்ச்சி.!
உங்க பதிவு விகடனில் பிரசுரமாகியுள்ளது
http://youthful.vikatan.com/youth/bcorner.asp
வாழ்த்துக்கள்
நன்றி ஜீவா!என் பதிவிற்கு
முதன் முதலாக வந்தமைக்கு மகிழ்ச்சி!
Post a Comment