வேலை என்று வரும்போது கடமை தவறாமல், செய்கிற வேலைக்கும், என் மனசாட்சிக்கும் துரோகம் செய்யக்கூடாது என எண்ணுவேன். இதுதான் என் பாலிஸி.
இது எதற்காக என்றால் நான் டியூட்டியில் இருக்கும்போது எந்த ஒரு பொருள் அல்லது சாப்பாடு வாங்கினாலும் அதற்குரிய பணத்தை கொடுத்துவிடுவேன். எந்த ஒரு சூழ்நிலையிலும் இலவசமாகவோ, சலுகை பெறவோ எண்ணமாட்டேன். எப்பொழுதும் பொருட்களை வாங்கி முடித்ததும் பணத்தை கொடுப்பேன். ஆனால் இப்பொழுது பணத்தை எடுத்து கையில் வைத்துக்கொண்டுதான் பொருட்களை தேர்வு செய்யவோ, சாப்பிடவோ செய்வேன். இம்மாற்றத்திற்கு ஒரு சம்பவம்தான் காரணம்...
சென்னை, பார்க் ரயில் நிலையம்., நானும் எனது நண்பரும் டியூட்டியில் இருந்தபோது ப்ளாட்பார நடுவில் இருக்கும் டீ கடைக்கு சென்றோம். இருவருக்கும் பால் ஆர்டர் கொடுத்தோம். 'தருகிறேன் சார்!' என்றவன் மற்ற எல்லோருக்கும் கொடுப்பதில் அதிக கவனம் செலுத்தியவன் எங்களை கண்டுகொள்ளவே இல்லை..
எனக்கு சற்று கோபம் வர..
'தம்பி.. தரப்போறியா? இல்லையா?.. என்றேன்.
'இதோசார்!'
என ஆளுக்கொரு டம்ளரில் பால் ஊற்றித் தந்தான். இருவரும் வாங்கி பேசிக்கொண்டே சாப்பிட்டு முடித்தோம். டம்ளரை அருகில் உள்ள குப்பைத்தொட்டியில் போட்டுவிட்டு பர்சை எடுத்து 10ரூபாய் நோட்டை எடுத்து அவனிடம் நீட்டினேன்.
'இந்தாப்பா.. சில்லரையாவது சீக்கிரம் கொடு..'
'என்ன சார்! காசு கொடுப்பதாக இருந்தால் முதல்லேயே சொல்லக்கூடாதா?'
'ஏம்பா? எதற்கு?..'
'இல்ல சார்! நல்ல பாலா தந்திருப்பேன் சார்..'
'அடப்பாவி! அப்ப இப்போது என்னடா தந்தாய்?'
'ஸாரி சார்! காலையில...தீஞ்சுபோன...ஸாரி சார்!!?.' என்று தலையை சொரிந்தான்.
அவனை அப்படியே தீய்ச்சி விடலாம் என கோபம் வந்தாலும் அவன் என்ன செய்வான்?.. என.. ஒரு பெரிய கேள்விகுறியோடு நானும், என் நண்பரும் அவ்விடத்தை விட்டு நகர்ந்தோம்.
.
Monday, March 23, 2009
Subscribe to:
Post Comments (Atom)
33 comments:
லஞ்ச மேட்டரா
\அவனை அப்படியே தீய்ச்சி விடலாம் என கோபம் வந்தாலும் அவன் என்ன செய்வான்?.. என.. ஒரு பெரிய கேள்விகுறியோடு நானும், என் நண்பரும் அவ்விடத்தை விட்டு நகர்ந்தோம்.
\\
எதார்த்தம் ...
நன்றி நட்புடன் ஜமால்! வருகைக்கு நன்றி!
ஆஹா! நீங்கள் RPF ஆ. உண்மையிலேயே நேர்மையா இருக்கிறதுதான் ரொம்ப கஷ்டம். அதுவும் போலீஸ்காரர்னா ரொம்ப ரொம்ப கஷ்டம் தான்.
//அவனை அப்படியே தீய்ச்சி விடலாம் என கோபம் வந்தாலும் அவன் என்ன செய்வான்?.. என.. ஒரு பெரிய கேள்விகுறியோடு நானும், என் நண்பரும் அவ்விடத்தை விட்டு நகர்ந்தோம்.
//
படு சுவையான தகவல் ! :)
//'என்ன சார்! காசு கொடுப்பதாக இருந்தால் முதல்லேயே சொல்லக்கூடாதா?'
'ஏம்பா? எதற்கு?..'
'இல்ல சார்! நல்ல பாலா தந்திருப்பேன் சார்..'//
அட மக்கா? நல்லவனா இருப்பது கடினமாகதான் இருக்கு சார்... கவலைப்படாதீங்க... உங்கள் மனசுக்கு மகிழ்ச்சியா இருக்கும்... வாழ்கையில் மகிழ்ச்சி இல்லாம வாழ்வோர் ஏராலம்..... அந்த மகிழ்ச்சி உங்களிடம் உள்ளது... வாழ்த்துக்கள் சார்...
மீசை ஆணுக்கு உள்ளது, நீங்கள் சொல்லும் மீசைகாரி.... விளக்கம் சொல்லுங்கள் ராம் சார்....
அடடா...எத்தனை நாள் லீவு போட்டிருக்கீங்க...உடம்புக்கு ஒன்றுமில்லையே...?
உன்மையாகவா??
சரி விடுங்க ராம் .. கவலை படாதிங்க
இது பொதுவாக போலீஸ் என்றாலே மக்கள் கொண்டிருக்கும் தவறான சிந்தனையின் வெளிப்பாடு ராம்.. உங்களைப் போன்று எல்லா போலீசும் தங்கள் பதவியை ஒழுங்காக பயன்படுத்தினால் தான் இந்த எண்ணங்களை மாற்ற முடியும்..
\\அவன் என்ன செய்வான்?.. என.. ஒரு பெரிய கேள்விகுறியோடு நானும், என் நண்பரும் அவ்விடத்தை விட்டு நகர்ந்தோம்.\\
ஆம் அவன் என்ன செய்வான்.
தொடர்ந்து எழுதுங்கள்
போலிஸ் என்றால் ஏற்படும் சுளிப்பைப் போக்கியதில் எனக்கு ஒருசிலரின் பங்குண்டு!! அது உங்கள் விஷயத்திலும்... ஒருமுறை போலீஸில் மாட்டியபொழுது எனது நிலை கண்டு விடுவித்தது அவரது நேர்மையைக் காட்டியது,. அவர் எங்களிடம் நினைத்திருந்தால் சுமார் ஆயிரமேனும் கறந்திருக்க முடியும்...
நன்றி உமா!வருகைக்கு மகிழ்ச்சி! என்னை பின் தொடர்வதற்கு நன்றி!
// கார்த்திகைப் பாண்டியன் said...
இது பொதுவாக போலீஸ் என்றாலே மக்கள் கொண்டிருக்கும் தவறான சிந்தனையின் வெளிப்பாடு ராம்.. உங்களைப் போன்று எல்லா போலீசும் தங்கள் பதவியை ஒழுங்காக பயன்படுத்தினால் தான் இந்த எண்ணங்களை மாற்ற முடியும்..//
Nice and Repeated.... :-)
நன்றி கோவி.கண்ணன்!வருகைக்கு மகிழ்ச்சி!
நன்றி ஆ.ஞானசேகரன் !வருகைக்கும் வாழ்த்துக்கும் மகிழ்ச்சி! எனக்கு மீசை வைப்பதென்றால் ரொம்ப பிடிக்கும்.என் மனைவிக்கு என்னை விட என் மீசையைதான் ரொம்ப பிடிக்கும்.என்னை அன்பால் கட்டுபடுத்தி,காதலால் சிறை வைத்துள்ள என் மனைவியே எனக்கு மீசைக்காரி. போதுமா சார் விளக்கம்???...
நன்றி டொன் லீ! லீவு சும்மாதான்! வருகைக்கு மகிழ்ச்சி!
நன்றி ராஜேஸ்வரி! வருகையில் ஆனந்தம்!
நன்றி கார்த்திகைப்பாண்டியன்! வாழ்த்துக்கு நன்றி!
நன்றி அறிவே தெய்வம்! முதல்முதலாக வருகிறீர்கள்!மகிழ்ச்சி! தொடர்ந்து வாருங்கள்!
நன்றி ஆதவா! வருகையில் மகிழ்ச்சி! என்ன காரணத்திற்காக போலீஸ் வசம் மாட்டினீர்கள்?.. இதில் முடியவில்லை என்றால் மெயிலில் வாருங்கள்!
நன்றி மாதவ்! வருகையில் மகிழ்வு!
டியூட்டி
டியூட்டின்னு சொல்றிங்களே அது என்ன?
ராம்.CM said...
நன்றி ஆ.ஞானசேகரன் !வருகைக்கும் வாழ்த்துக்கும் மகிழ்ச்சி! எனக்கு மீசை வைப்பதென்றால் ரொம்ப பிடிக்கும்.என் மனைவிக்கு என்னை விட என் மீசையைதான் ரொம்ப பிடிக்கும்.என்னை அன்பால் கட்டுபடுத்தி,காதலால் சிறை வைத்துள்ள என் மனைவியே எனக்கு மீசைக்காரி. போதுமா சார் விளக்கம்???...
hey irukaruthulaye ithu than super pa
சுவையான தகவல்....
நல்லவர்களாக இருப்பதும் கடினமே !!!
// அவன் என்ன செய்வான்?.. என.. ஒரு பெரிய கேள்விகுறியோடு //
அதானுங்க உண்மை எல்லேரையும் போல் உங்களை நினைச்சிருப்பான்
நட்புடன் ஜமால் said...
\அவனை அப்படியே தீய்ச்சி விடலாம் என கோபம் வந்தாலும் அவன் என்ன செய்வான்?.. என.. ஒரு பெரிய கேள்விகுறியோடு நானும், என் நண்பரும் அவ்விடத்தை விட்டு நகர்ந்தோம்.
\\
எதார்த்தம் ...
athu sari neenga police karara ????????
sollave illai
police anna police anna nanga ethavathu thappa eluthi eruntha ulle thukki pottudathenga
hahahhaha
gayathri said...
ராம்.CM said...
நன்றி ஆ.ஞானசேகரன் !வருகைக்கும் வாழ்த்துக்கும் மகிழ்ச்சி! எனக்கு மீசை வைப்பதென்றால் ரொம்ப பிடிக்கும்.என் மனைவிக்கு என்னை விட என் மீசையைதான் ரொம்ப பிடிக்கும்.என்னை அன்பால் கட்டுபடுத்தி,காதலால் சிறை வைத்துள்ள என் மனைவியே எனக்கு மீசைக்காரி. போதுமா சார் விளக்கம்???...
hey irukaruthulaye ithu than super pa
really super gayu
அடப் பாவமே ....இப்படியெல்லாம் கூட உண்டா???
அன்புடன் அருணா
யதார்த்த நிகழ்வுகள் ரசிக்கும்படி இருக்கிறது. நன்று.
நன்றி வால் ! டியூட்டி என்பது சீக்ரெட்...
நன்றி காயத்ரி! முதன்முதலாக வருகிறீர்கள். மகிழ்ச்சி!
நன்றி பதி! வருகையில் மகிழ்ச்சி!
நன்றி சொல்லரசன்!
நன்றி சக்தி!வருகையில் சந்தோசம்! நான் இரயில்வே பாதுகாப்பு படையில்,அதி தீவிரப் படைப் பிரிவில் உள்ளேன்.(RPF-COMMANDO)
நன்றி அன்புடன் அருணா! வருகையில் மகிழ்ச்சி!
நன்றி வாசவன்!
ம்.... அனுபவங்களுடன் கூடிய பதிவு.
நல்லாருக்கு ராம்.
இப்போ தான் உங்கள் தளத்துக்கு வருகிறேன்.
உண்மையாக நீங்கள் போலீஸாக இருந்து கொண்டு இது போன்று மனசாட்சியுடன் செயல்படுவது மகிழ்ச்சியாக உள்ளது.
எனக்கு தெரிந்து போலீஸ்காரர்கள் ஹோட்டல் மற்றும் தேனிர் கடைகளில் காசு கொடுத்து பார்த்ததில்லை.
தவறு இருந்தால் மன்னிக்கவும்.
நன்றி வெயிலான்! வருகைக்கு மகிழ்ச்சி!
நன்றி ப்ரதீப்! எல்லோரையும் ஒன்றாக நினைக்கக்கூடாது.
தங்கள் எழுத்து அனைவரையும் இழுத்துச் செல்லும் அழகைப் பார்த்தே புரிந்து கொண்டேன் இது தாமிரபரணி நதியோட்டம் என்று.
பாராட்டுக்கள் நிறைய எழுத வாழ்த்துக்கள்
அதே தாமிபரணியில் தமிழ் நீச்சலடித்து வளர்ந்த கோமா
நன்றி கோமா!.. வருகையில் மகிழ்ச்சி!
Post a Comment